குழந்தைகளுக்கு இட்லியுடன், சாதத்துடன் பிசைந்து ஊட்ட ஆரோக்கியமான இந்த சூப் எப்படி செய்வதுன்னு நீங்களும் தெரிஞ்சுக்கோங்க!

baby-soup
- Advertisement -

பொதுவாக குழந்தைகளுக்கு சத்துள்ள உணவை கொடுத்து வந்தால் தான் அவர்களுடைய ஆரோக்கியத்திற்கு எந்த விதமான பாதிப்புகளும் இல்லாமல் இருக்கும். நாம் சாப்பிடும் சாதாரண உணவு வகைகளைக் காட்டிலும் இப்படி வித்தியாசமான முறையில் ஆரோக்கியத்துடன் கூடிய வகையில் உணவுகளை சமைத்து கொடுத்தால் குழந்தைகளும் புஷ்டியாக, ஆரோக்கியமாக வளரும். அந்த வகையில் இட்லி, தோசை, சாதம் போன்ற எல்லாவற்றிற்கும் பிசைந்து ஊட்டக்கூடிய இந்த ஹெல்தி சூப் எப்படி செய்வது? என்பதை அனைவரும் கட்டாயம் தெரிந்து வைத்திருப்பது நல்லது. அதை எப்படி செய்வது? என்பதை இனி வரும் பத்திகளில் காண்போம் வாருங்கள்.

baby

இந்த சூப் பருப்பு, காய்கறிகள், கீரை என எல்லா வகையான பொருட்களும் சேர்த்து செய்யப்படும் ஒரு சுலபமான முறை ஆகும். இவை எல்லாமே ஒரே விஷயத்தில் கலந்து இருப்பதால் குழந்தைகளுக்கு ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இதனை தினமும் கூட செய்து குழந்தைகளுக்கு ஊட்ட அவர்களுடைய ஆரோக்கியம் பெருகும். ஒரு வருடம் பூர்த்தி அடைந்த குழந்தைகளுக்கு தினமும் ஒரு முட்டை கொடுத்து வந்தால் புஷ்டி ஆவார்கள். அவற்றுடன் இந்த சூப் செய்து பாருங்கள்.

- Advertisement -

ஒரு சிறிய பௌலில் ஒரு ஸ்பூன் அளவிற்கு துவரம் பருப்பை ஊற வைத்துக் கொள்ளுங்கள். அரைமணி நேரம் ஊறிய பிறகு அதனை ஒரு குக்கரில் சேர்த்து கொள்ளுங்கள். இதனுடன் கால் டீஸ்பூன் சீரகம், கால் டீஸ்பூன் மிளகு அப்படியே சேர்த்துக் கொள்ளுங்கள். 2 பூண்டுப் பற்களை தோலுரித்து சேருங்கள். கேரட், பீன்ஸ், முட்டைகோஸ் என்று உங்களிடம் இருக்கும் எந்த வகையான காய்கறிகளையும் பொடி பொடியாக நறுக்கி இரண்டு ஸ்பூன் அளவிற்கு சேர்த்துக் கொள்ளுங்கள்.

keerai

பின்னர் முருங்கைக்கீரை, அரைக்கீரை, சிறுகீரை என்று உங்களிடம் இருக்கும் ஏதாவது ஒரு கீரை வகையை கொஞ்சமாக ஒரு பத்து கீரையை சேர்த்துக் கொள்ளுங்கள். ஒரு சிறு துண்டு இஞ்சி சேர்த்துக் கொள்ளுங்கள். இவை எல்லாவற்றையும் சேர்த்து ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு 2 விசில் விட்டு எடுத்தால் போதும். ஆரோக்கியமான சூப் தயார் ஆகிவிடும். இதில் பருப்பு, கீரை, காய்கறி, இஞ்சி, பூண்டு, மிளகு, சீரகம் என்று அனைத்து வகையான நலன்களும் கொடுக்கக் கூடிய அற்புத மூலிகை சூப் ஆக இருப்பதால் குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு மிகுந்த நன்மைகளை செய்யும்.

- Advertisement -

தினமும் ஒரு பருப்பு, தினமும் ஒரு கீரை என்று மாற்றி மாற்றி சமைத்துக் கொடுக்கலாம். இந்த எல்லா பொருட்களுமே நம் வீட்டில் கட்டாயம் இருக்கும். சூப் போல இருக்கும் இதனை நன்கு மசித்து இட்லியுடன் ஊற வைத்து நன்கு பிசைந்து குழந்தைகளுக்கு ஊட்டலாம். தோசை, உப்புமா, சாதம் என்று நீங்கள் எது செய்தாலும் இந்த சூப்பை ஊற்றி பிசைந்து அல்லது மிக்ஸியில் அடித்து குழந்தைகளுக்கு ஊட்டலாம். குறிப்பாக ஒரு வயது பூர்த்தி அடைந்த குழந்தைகளுக்கு தாராளமாக இவற்றை தினமும் கொடுத்து வரலாம்.

mooligai-soup

காரத்துக்கு மிளகு, இஞ்சி தவிர வேறு எந்த பொருட்களையும் சேர்க்கக் கூடாது. காலை, மதியம் என்று இரண்டு வேளைகளுக்கும் சேர்த்து இந்த சூப் செய்வதால் உங்களுக்கு வேலையும் மிச்சமாகும். வளரும் இளம் குழந்தைகளுக்கு, சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகளுக்கு, ஒல்லியாக இருக்கும் குழந்தைகளுக்கு இந்த சூப் செய்து கொடுத்தால் நல்ல ஆரோக்கியம் பெறுவார்கள்.

- Advertisement -