சத்தான ‘உளுந்து புட்டு’ இப்படி செஞ்சா கொஞ்சம் கூட மிச்சமில்லாமல் சாப்பிடுவாங்களே! கை, கால் வலி, இடுப்பு வலி நீங்க அடிக்கடி செஞ்சு சாப்பிடுங்க.

ulunthu-puttu1
- Advertisement -

புட்டு வகைகளில் ரொம்பவே சத்தான புட்டு என்று இந்தப் புட்டை கூறலாம். உளுந்தில் இருக்கும் சத்துக்கள் ஆண்களை விட, பெண்களுக்கு அதிகம் பயன் அளிக்கக் கூடியது. பெண்களின் இடுப்பு எலும்புகள் பலப்படும். அதனால் தான் மாதவிடாய் காலங்களில் உளுந்து கஞ்சி செய்து கொடுப்பது வழக்கம். உளுந்தை இப்படி புட்டாகவும் செய்து கொடுத்தால் சத்துடன் சுவையும் ரொம்பவே பிடித்தமானதாக இருக்க போகிறது. ஆரோக்கியம் நிறைந்துள்ள உளுந்து புட்டு எப்படி சுவையாக தயாரிப்பது? என்பது தான் இந்த பதிவின் மூலம் நாம் கற்றுக் கொள்ள இருக்கிறோம்.

உளுந்து புட்டு செய்ய தேவையான பொருட்கள்:
உளுந்து – ஒரு கப், பச்சரிசி – அரை கப், நாட்டு சர்க்கரை – முக்கால் கப், ஏலக்காய்த் தூள் – ஒரு டீஸ்பூன், தேங்காய் துருவல் – அரை கப், நெய் – ஒரு டேபிள்ஸ்பூன், முந்திரி பருப்பு – 10, உப்பு – ஒரு சிட்டிகை.

- Advertisement -

உளுந்து புட்டு செய்முறை விளக்கம்:
உளுந்து புட்டு அரைப்பதற்கு முதலில் உளுந்து மாவு மற்றும் அரிசி மாவு இந்த இரண்டுமே நமக்கு தேவைப்படுகிறது. இதற்காக முதலில் ஒரு கப் அளவிற்கு முழு வெள்ளை உளுந்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதை ஒரு முறை நன்கு தண்ணீரில் அலசி கொஞ்சம் கூட ஈரப்பதம் இல்லாமல் ஃபேன் காற்றில் துடைத்து ஆற வைத்துக் கொள்ள வேண்டும். அதே போல பச்சரிசியையும் ஒரு முறை நன்கு அலசி ஃபேன் காற்றில் துடைத்து ஆற விட்டு கொள்ள வேண்டும்.

நன்கு ஆறியதும் ஒரு வாணலியில் போட்டு லேசான பொன்னிறமாக நன்கு வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இவை ஆறியதும் ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு ரவை பதத்திற்கு அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். ரொம்பவும் நைஸாக அரைக்க வேண்டிய அவசியம் இல்லை, ஏனென்றால் நாம் புட்டு செய்யும் பொழுது உதிரி உதிரியாக வர வேண்டும். இதை ஸ்டோர் செய்து வைத்துக் கொண்டால் செய்யும் பொழுது சுலபமாக இருக்கும். பிறகு மாவில் லேசாக தண்ணீர் தெளித்து கலந்து விடுங்கள்.

- Advertisement -

மாவைக் கையில் எடுத்து இறுக பிடித்தால் பிடிபட வேண்டும். பின்னர் உதிர்த்து விட்டால் உதிர்ந்து விட வேண்டும். அந்த அளவிற்கு தண்ணீர் சேர்த்தால் போதும், அதிகம் சேர்த்து விடக்கூடாது. பிறகு மாவை சல்லடையில் நன்கு கட்டிகளில்லாமல் சலித்துக் கொள்ளுங்கள். பின்பு இதை ஒரு இட்லி பாத்திரத்தில் காட்டன் துணியை விரித்து அதில் சேர்த்து 10 நிமிடம் நன்கு அவித்து எடுத்துக் கொள்ளுங்கள். அவித்து எடுத்ததும் அதனுடன் அரை கப் அளவிற்கு துருவிய தேங்காய், ஒரு சிறு ஸ்பூன் அளவில் ஏலக்காய்த் தூள், ஒரு சிட்டிகை உப்பு ஆகியவற்றை சேர்த்து கலந்து கொள்ளுங்கள். உளுந்து அவியும் பொழுது தேங்காய்த் துருவலையும் சேர்த்து அவித்தால் அதன் மணம் இன்னும் சூப்பராக இருக்கும்.

பிறகு தேவையான அளவிற்கு நாட்டு சர்க்கரை அல்லது துருவிய வெல்லம் ஆகியவற்றை உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப சேர்த்து மிதமான சூட்டில் பரிமாறினால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். இது உடல் ஆரோக்கியத்திற்கு ரொம்பவும் நன்மைகளை கொடுக்கிறது. கை, கால் வீக்கம், கை, கால் வலி, இடுப்பு வலி, முதுகு வலி, மூட்டு வலி போன்றவற்றை வரவிடாமல் பாதுகாக்கக்கூடிய அற்புதமான ஒரு புட்டு ஆகும், நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -