பணத்தை இந்த இடத்தில் மட்டும் வைத்து விட்டால் பணம் 1 ரூபாய் கூட சேரவே சேராது! வீட்டில் பணம் வைக்கக்கூடாத இடம் எது?

bero1

பணம் என்பது சாட்சாத் மகாலட்சுமியின் அம்சம் என்றாலும், அது பல இடங்களில் போய், பல பேருடைய கைகளில் புழங்கி, நம்மிடம் நம் வீட்டில் வந்து சேர்கிறது. இப்படி சேரும் பணம் வீட்டில் எங்கெல்லாம் வைக்கலாம்? எப்படி வைக்க வேண்டும்? எங்கு கட்டாயம் வைக்கவே கூடாது? அப்படி வைத்தால் என்ன நடக்கும்? பணம் மேலும் மேலும் பெருக என்ன செய்ய வேண்டும்? பணத்தை ஈர்க்கும் தந்திரம் தான் என்ன?

money

பணம் என்பது நிரந்தரமான ஒன்று அல்ல, இன்று உங்கள் கையில் இருக்கும் பணம், நாளை வேறு ஒருவருடைய கைகளில் இருக்கும். இப்படி நிலை இல்லாத பணத்தை நம்மிடம் நிலைபெற செய்வது எப்படி? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம். வாருங்கள் பதிவிற்குள் போவோமா?

பணம் நம்முடைய கைகளில் முதலில் தேக்கி வைத்திருக்கக் கூடாது. பணத்தைத் தேக்கி வைத்திருந்தால், அந்த பணம் மேலும் மேலும் எப்படி பெருகும்? வருகின்ற பணத்தை செலவு செய்து கொண்டே இருந்தால் தான், அது மேலும் பெருகும். இது பணத்தினுடைய சூட்சம விதி. இதை தெரிந்தவர்கள் பணத்தை ஒருபோதும் தேக்கி வைப்பது இல்லை.

money-1

பல பேருடைய கைகளில் பட்ட பணம் தோஷம் ஆகிறது. ஆகவே பணத்தை மட்டும் ஒரு போதும் பூஜை அறையில் வைத்து விடக்கூடாது. பணம் மகாலட்சுமியின் அம்சமாக இருந்தாலும், மொத்தமாக பணத்தை பூஜை அறையில் வைத்தால் பண தடை உண்டாகும் என்பது ஐதீகம். பூஜைக்காக ரூபாய் நோட்டுகளை பூஜை அறையில் வைத்தாலும், பின்னொரு நேரத்தில் அதனை உடனடியாக அப்புறப்படுத்தி விட வேண்டும். சில்லரை காசுகள் பூஜை அறையில் இருக்கலாம். ஆனால் நோட்டுகள் பூஜையறையில் வைப்பது முறையல்ல என்கிறது பண ஈர்ப்பு விதி.

- Advertisement -

‘இறைக்கிற கிணறு தான் சுரக்கும்’, என்பது பழமொழி. வைரத்தை வைரத்தால் வெட்ட முடியும் என்பது போல, பணத்தைப் பயன்படுத்தி தான் பணத்தை ஈர்க்கும் யுக்தியை கையாள வேண்டும். வீட்டை விட்டு வெளியே செல்கிறீர்கள் என்றால், பாக்கெட்டில் 10 பைசா கூட இல்லாமல் எப்பொழுதும் சென்று விடாதீர்கள். உங்கள் பாக்கெட்டில் பணம் இருந்தால் தான், அந்தப் பணம் வேறு ஒரு பணத்தை கொண்டு வந்து உங்கள் பாக்கெட்டை நிரப்பும். காலியாக வைத்திருந்தால் ஒரு ரூபாய் கூட உங்களுக்கு கிடைக்காது.

shirt-pocket

பணத்தை வடக்கு முகமாக பார்த்து வைக்க வேண்டும் என்பது வாஸ்து முறை. பணத்தை பீரோவில் வைத்தால் பீரோவுடைய கதவு வடக்கு பார்த்து இருக்க வேண்டும். அப்படி பணம் வைக்கும் பொழுது, நறுமணத்துடன் வைத்துக் கொள்வது கட்டாயம் ஆகும். சில்லரை காசுகளை ஒருபோதும் வீட்டில் அதிகமாக வைத்துக் கொள்ளாதீர்கள். சில்லறை சில்லரையை தான் ஈர்க்கும்.

coins

உங்களுக்கு சில்லறை வேண்டுமா? பணம் வேண்டுமா? என்பதை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும். வீட்டிலிருக்கும் சில்லரை காசுகளை ஆங்காங்கே நிறைய போட்டு வைக்காமல், முதலில் அதனை காலி செய்து விடுங்கள். நோட்டுகளாக எப்போதும் வீட்டிலும், பர்சிலும் வைத்துக் கொள்ளுங்கள். வீட்டை விட்டு வெளியே கிளம்பும் பொழுது, பாக்கெட்டில் சில ரூபாய் நோட்டுகளை வைத்துக் கொண்டு வெளியில் சென்று பாருங்கள். வருமானம் பெருகும்.

dairy

பணத்தை செலவு செய்து விட்டு கணக்கு பார்ப்பது கஞ்சத்தனம் ஆகாது. பணத்தைச் செலவு செய்யவே, கணக்கு பார்ப்பது தான் கஞ்சத்தனம் ஆகும். சிக்கனத்திற்கும், கஞ்ச தனத்திற்கும் இருக்கும் வேறுபாடு இது தான். நீங்கள் சிக்கனமாக இருக்கிறீர்களா? கஞ்சனாக இருக்கிறீர்களா? என்பதை நீங்களே யோசித்துப் பாருங்கள்.

money

கஞ்சனிடம் ஒருபொழுதும் பணம் சேராது. உங்களிடம் எவ்வளவு பணம் வந்தாலும், அதனை நல்ல வழியிலும், உங்களுடைய ஆசைகளுக்கும் செலவு செய்து கொண்டே இருங்கள். சென்ற இளமை திரும்ப வராது. பின்னால் வாழ்ந்து கொள்ளலாம் என்று நினைக்கும் பொழுது, உங்கள் உடம்பில் பலம் இருக்காது. இன்றே வாழ பழகிக் கொள்ளுங்கள். இன்று மட்டுமே நிலையானது என்பதை நினைவில் வையுங்கள்.

money bag

1000 ரூபாய் கிடைத்தாலும், கோடி ரூபாய் கிடைத்தாலும் அதனை செலவு செய்து கொண்டே இருக்க வேண்டும். அப்போது தான் நீங்கள் கேட்கின்ற பணம் மீண்டும் மீண்டும் உங்களிடம் வந்து சேரும். தேக்கி வைத்தால் வாழ்க்கையும் தேங்கிவிடும். இது 100% எல்லோருக்கும் நடக்கும். நீங்களும் ஒருமுறை முயற்சி செய்து தான் பாருங்களேன்.

இதையும் படிக்கலாமே
நாளை(6/1/2021) தேய்பிறை அஷ்டமியில் இவரை வணங்க எப்பேர்பட்ட கடனும் உடனே தீரும் தெரிந்து கொள்ளுங்கள்! இவரை வணங்கும் முறைகளும், அதனுடைய பலன்களும்!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.