இந்த 1 மூலிகை இலையை பச்சையாக தீபம் ஏற்றினால் உங்கள் வீட்டில் பண மழை தான்.

cash-pei-viratti

ஒவ்வொரு மூலிகைக்கும் ஒவ்வொரு சக்தி இருக்கும். சித்தர்கள் அறிந்து வைத்து இந்த உலகிற்கு உணர்த்தியது ஏராளமான மூலிகை ரகசியங்கள் இன்றும் வழக்கத்தில் உள்ளன. ஆனால் அவற்றில் சிலவற்றை சிலர் தெரிந்தும், தெரியாமலும் மறைத்து வைத்துள்ளனர். அரிய வகை குறிப்புகளில் சில அழிந்தும் போயிருக்கின்றன. மனித இனத்திற்கு இருக்கும் மாபெரும் ஒரு சாபம் என்றால் அது அவர்களுக்கு இருக்கும் பொறாமை குணம் தான். தனக்கு தெரிந்த ஒன்றை பிறருக்கு கற்று கொடுப்பதில் ஆர்வம் காட்டினால் நீங்கள் குருவாகப்படுவீர்கள். ஆனால் அதையே மறைத்து தனக்கு மட்டும் தெரிந்தால் போதும் என்று பொறாமையால் உங்களுக்குள்ளேயே வைத்து கொண்டால் உலகம் உங்களை மறந்துவிடும். ஏனோ இது பலருக்கு புரிவதில்லை.

pei-viratti

எந்த வியாதிக்கும் மூலிகையில் இருக்கும் மகத்துவ சக்தியில் தீர்வு உள்ளது. கடந்து வரும் காலத்தை திரும்பி பார்த்தால் அழிந்து போனது மூலிகைகள் மட்டும் அல்ல. மனித இனத்தின் பரிணாம வளர்ச்சியும் தான். 90 வயதில் வரக்கூடிய நோய்கள் எல்லாம் இன்று 30 வயதிலேயே வந்து விடுகிறது. காரணம் என்ன தெரியுமா? முதல் காரணம் சோம்பல். உட்கார்ந்த இடத்திலேயே எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற மனோபாவம். எழுந்து நடந்தால் உடம்பு தேய்ந்து விடும் அல்லவோ! இதனை பயன்படுத்தி வியாபாரமாக்கி வணிகத்தை பெருக்கி கொண்டிருக்கிறது மிகப்பெரிய கூட்டம் ஒன்று. உங்களின் வாழ்நாள் உங்களை அறியாமலே சுரண்டபட்டு கொண்டிருக்கிறது. அறியாமையால், அலட்சியத்தால் நீங்கள் இழந்தது எண்ணற்றவை என்று உணரும் காலம் விரைவில் வரும். சரி விஷயத்திற்கு வருவோம்.

அபூர்வ வகை மூலிகை எல்லாம் ஒன்றும் இல்லை. சாதாரணமாக நம் கண் முன்னே உள்ள செடிகளில் இருக்கும் மருத்துவம் மற்றும் மகத்துவம் வாய்ந்த குணங்கள் கூட நமக்கு தெரிவதில்லை. அத்தகைய மூலிகை செடி வகைகளில் ஒன்று தான் இந்த பரிகாரம் செய்ய உகந்தது. இது அபூர்வ சக்தி கொண்டது. இதன் பெயர் பெருந்தும்பை என்று கூறப்படும் பேய் விரட்டி மூலிகையாகும். இது பச்சையாக பற்றி எரியும் தன்மை கொண்டது. குபேர மூலிகை என்றும் வழக்கத்தில் உள்ளது.

pei-viratti3

இந்த இலையில் குபேர தீபம் ஏற்றினால் எல்லா வளமும் பெருகும் என்று கூறப்படுகிறது. 48 நாட்கள் தினமும் இந்த ஒரே ஒரு இலையை திரியாக கொண்டு தீபம் ஏற்றி வழிபட்டு வாருங்கள். சகல தோஷங்களும் நீங்க பெற்று முன்னேற்றம் காணப்படும். சாதாரண அகல் விளக்கில் இந்த இலையை திரித்து அப்படியே பச்சையாக திரி போன்று உருவாக்கி கொள்ளுங்கள். மண் விளக்கில் நல்லெண்ணை, நெய் அல்லது இழுப்பை எண்ணெய் ஊற்றி இந்த திரியை நனைத்து தீபம் ஏற்ற வேண்டும். அவ்வளவு தான்.

- Advertisement -

pei-viratti1

இந்த மூலிகை தீபத்தின் புகை உங்கள் இல்லம் முழுவதும் சூழ்ந்து கொண்டு நல்ல சக்திகளை திரட்டி தரும். எந்த வகையான தீய சக்திகள் உங்கள் வீட்டில் இருந்தாலும் இதன் வாசத்தில் ஓடி விடும். குபேரனுக்கு மிகவும் பிடித்த மூலிகையாம் இது. எனவே இதில் ஏற்றப்படும் தீபத்தின் ஒளியில் உங்கள் வாழ்வில் உள்ள இருள் அனைத்தும் நீங்கி ஒளிமயமான எதிர்காலம் நோக்கி பயணம் தொடரும் என்பதில் சந்தேகம் இல்லை.

இதையும் படிக்கலாமே
தொடர்ந்து வரக்கூடிய கஷ்டத்திற்கு செய்வினை தான் காரணமா? எப்படி கண்டுபிடிப்பது? இதற்கு பரிகாரம் தான் என்ன?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Pei viratti deepam. Pei viratti leaf uses. Pei viratti plant benefits in Tamil. Pei mirati leaf benefits in Tamil. Pei mirati vasiyam. Pei viratti mooligai in Tamil.