தொடர்ந்து வரக்கூடிய கஷ்டத்திற்கு செய்வினை தான் காரணமா? எப்படி கண்டுபிடிப்பது? இதற்கு பரிகாரம் தான் என்ன?

seivinai-parihar

கலியுகத்தில் செய்வினையா? என்று கேள்வி எழுப்பும் நபர்களாக இருந்தால், நீங்கள் இந்த பதிவை படிக்க வேண்டாம். ஒருவருக்கு வாழ்க்கையில் தொடர்ந்து நல்லதே நடந்துகொண்டு வருகிறது என்றால் அவர்களுக்கு பில்லி, சூனியம், ஏவல் செய்வினை இப்படிப்பட்ட தீய சக்திகளில் நிச்சயமாக நம்பிக்கை இருக்காது. ஆனால் படாத கஷ்டங்களை தொடர்ந்து அனுபவித்துக் கொண்டிருக்கும் ஒரு குடும்பத்திற்கு, ‘அந்த பிரச்சனையை எப்படி தீர்த்துக் கொள்வது?’ என்ற கேள்விக்கு பதில் தெரியாமல் தத்தளித்துக் கொண்டிருப்பார்கள். உங்களது வீட்டிலிருக்கும் தீர்க்கமுடியாத பிரச்சினைகளுக்கு, கண்ணுக்கு புலப்படாத கெட்ட சக்திகள் தான் காரணம் என்று நினைப்பவர்களாக இருந்தால் இந்த பதிவு உங்களுக்கு உபயோகமானதாக இருக்கும்.

Devil

அதிகப்படியான பொறாமை குணம் கொண்டவர்களின் அடுத்த செயல்பாடு தான் செய்வினை. செய்வினையால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தில்  பிரச்சினைக்கு பஞ்சமிருக்காது. நீங்கள் நம்ப முடியாத அளவிற்கு வினோதமான செயல்பாடுகள் உங்களது கண்முன்னே நிகழும். பிரச்சனை எதனால் வந்தது என்று வழியே தெரியாது. பிரச்சனைக்கு விடிவுகாலம் என்ன என்பதும் புரியாது. பிரச்சனை எதனால் என்பதை யோசிப்பதற்குள், அடுத்த பிரச்சனை வந்து நிற்கும். இவை அனைத்தும் விதிப்படி நடக்கிறது என்றாலும், சில அமானுஷ்யமான அறிகுறிகள் உங்களுக்கு தெரிந்திருக்கும். அடிக்கடி இரவில் கெட்ட கனவுகள் வருவது. யாராவது ஒருவர் உங்களை கூப்பிடுவது போல் பிரம்மை. தூக்கத்தில் கண்களுக்கு தெரியாத ஒரு சக்தி நம்மை அழுத்துவது, போன்ற அறிகுறிகள் இருந்தால் நிச்சயம் அது தீய சக்திகளால் தான் நடக்கும். இந்த அறிகுறிகள் ஒருபக்கம் இருக்க, நம் வீட்டில் கட்டாயம் செய்வினை தான் இருக்கின்றது என்பதை உறுதிப்படுத்துவதற்கு சில வழிமுறைகளையும் நம் முன்னோர்கள் நமக்கு கூறியுள்ளார்கள்.

அதில் முதலாவதாக நான்கைந்து துளசி இலைகளை எடுத்து, ஒரு மண் பானையில் போட்டு வைத்துவிடுங்கள். துளசி இலைகள் இயற்கையாக வாட கூடியது தான். ஆனால் ஒரு நாள் பொழுது வாடாமல் இருக்கும். உங்களது வீட்டில் மண்பானையில் துளசி இலைகளை வைத்த ஒரு மணி நேரத்திலேயே வாடி, வதங்கி விட்டால், உங்கள் வீட்டில் கட்டாயம் கெட்ட சக்தி இருக்கிறது என்பதை உறுதி செய்து கொள்ளலாம். இது மட்டுமல்ல உங்கள் வீட்டில் நடும் சிறிய செடி கூட தழைக்காது. காய்ந்து போய்க் கொண்டே இருக்கும்.

Thulasi

இரண்டாவதாக துர்க்கை அம்மனுக்கு மனதார வேண்டிக்கொண்டு எலுமிச்சை பழத்தால் மாலை கட்டி, அம்மனுக்கு சாத்தி அர்ச்சனை செய்துவிட்டு, அதிலிருந்து ஒரு எலுமிச்சை பழத்தை வாங்கி உங்கள் வீட்டு பூஜையறையில் வைத்து விடுங்கள். ஒரு வாரம் கழித்து அந்த எலுமிச்சை பழம் காய்ந்தால் எந்த ஒரு தவறும் இல்லை. ஆனால், அந்த எலுமிச்சை பழமானது அழுகி இருந்தால் நிச்சயம் உங்களது வீட்டில் ஏதோ ஒரு கெட்ட சக்தி இருக்கின்றது என்பதை குறிக்கும்.

- Advertisement -

இப்படிப்பட்ட பிரச்சனைகளை எல்லாம், என்ன செய்வது என்று தெரியாமல், ‘பிரச்சனையை விரைவாக தீர்க்க வேண்டும் என்று’ சிலர் எக்குத்தப்பாக, பணத்திற்காக ஏமாற்றுபவர்களிடம் போய் சிக்கிக் கொள்வார்கள். இதில் பாதிக்கப்பட்டவர்களை நம்மால் எந்த குறையும் கூற முடியாது. அவருடைய சூழ்நிலை அப்படி. இந்த மாதிரியான சமயத்தில் சில பரிகாரங்களை செய்வதன் மூலம் நம்மை நாமே காத்துக் கொள்ள முடியும்.

durga-devi-amman

உங்களது வீட்டில் கெட்ட சக்தி இருப்பதாக நீங்கள் நினைத்தால், வடக்குப் பக்கமாகவோ அல்லது கிழக்கு பக்கமாகவோ ஒரு மண் அகல் விளக்கில் வேப்பெண்ணை தீபமேற்றி உங்களது வீட்டிற்குள் வைத்துவிட்டு, எல்லா ஜன்னல்களையும், வீட்டு கதவையும் அடைத்து விடவேண்டும். அந்த சமயம் உங்களது வீட்டில் இருக்கும் மின் விளக்குகள் எல்லாம் அணைக்கப்பட்டு, மண் விளக்கில் வேப்பெண்ணை தீபம் மட்டும் எரிய வேண்டும். இப்படி செய்யும் பட்சத்தில் உங்களது வீட்டில் ஏழு நாட்களுக்குள்ளேயே முன்னேற்றம் தெரிகிறதா என்று சோதித்துப் பாருங்கள். ஒரு வாரத்திற்குள் நல்ல முன்னேற்றத்தை நீங்கள் உணர்ந்தால், நல்லெண்ணெய் மற்றும் வேப்பெண்ணையை சமமாக எடுத்து உங்களது வீட்டின் பூஜை அறையில் மூன்று மாதங்கள் தொடர்ந்து தீபம் தீபம் ஏற்றி வரலாம் இது நல்ல பலனைக் கொடுக்கும்.

மேலே கூறப்பட்டுள்ள கூற்றுகள் எவ்வளவு உண்மையோ, அதேபோல்தான் தைரியமான, வலிமையான, நேர்மறையான மனம் எவரிடம் உள்ளதோ அவர்களே கெட்ட சக்தியானது தாக்காது என்பதும் உண்மை. இதேபோல் எவர் வீட்டின் முற்றத்தில் துளசி செடி உள்ளதோ அவர்களது வீட்டில் செய்வினை அண்டாது என்பதும், யாரால் செய்வினை ஏவப்பட்டதோ, அந்த தீவினையானது அவரை நோக்கியே திரும்பி செல்லும் என்பது நிதர்சனமான உண்மை. தினமும் காயத்ரி மந்திரம் சொல்பவர்களிடம் நிச்சயம் கேட்ட சக்தி நெருங்காது என்பது உண்மை.

இதையும் படிக்கலாமே
கடன் பிரச்சனையா? வெற்றிலை வைத்து பணத்தை வசியம் செய்யும் ரகசியத்தை தெரிந்து கொள்ளுங்கள்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Seivinai pariharam in Tamil. Seivinai agala Tamil. Seivinai kolaru pariharam Tamil. Seivinai neenga Tamil. Seivinai removal Tamil.