10 நிமிடம் போதும். சுவையான பட்டாணி குழம்பை இவ்வாறு குக்கரில் ஒரு முறை செய்து பாருங்கள்

green-peas-gravy
- Advertisement -

அசைவ உணவான சிக்கன், முட்டை இவற்றில் இருக்கும் புரதச் சத்துக்களை விட காய்கறிகளில் அதிக அளவு புரதச்சத்து இருக்கிறது. அந்த வகையில் பச்சை பட்டாணியில் உடலுக்குத் தேவையான அதிக அளவு புரதச்சத்து இருக்கிறது. வெறும் பட்டாணியை அவித்து கொடுத்தால் குழந்தைகள் அதனை தவிர்த்து விடுகின்றனர். எனவே காய்கறிகள் சேர்த்து குழம்பு வைக்கின்ற முறையில் இந்த பட்டாணியை சேர்த்து குக்கரில் 2 விசில் வைத்து குழம்பு செய்து பாருங்கள். இதனை சாதத்துடன் சேர்த்து சாப்பிடவும் அல்லது இட்லி, தோசையுடன் சேர்த்து சாப்பிட மிகவும் அருமையான சுவையில் இருக்கும். இந்த பச்சை பட்டாணி குழம்பு எவ்வாறு செய்வது என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

Egg

தேவையான பொருட்கள்:
பச்சை பட்டாணி – கால் கிலோ, பெரிய வெங்காயம் – 2, தக்காளி – 2, புளி – நெல்லிக்காய் அளவு, மஞ்சள்தூள் – அரை ஸ்பூன், மிளகாய்த்தூள் – ஒன்றரை ஸ்பூன், உப்பு – ஒரு ஸ்பூன், எண்ணெய் – 5 ஸ்பூன், கடுகு – அரை ஸ்பூன், சீரகம் – அரை ஸ்பூன், பூண்டு – பத்து பல், கறிவேப்பிலை – ஒரு கொத்து, கொத்தமல்லித்தழை – ஒரு கொத்து.

- Advertisement -

செய்முறை:
முதலில் பச்சை பட்டாணியை தோலுரித்து, தண்ணீரில் அலசி வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு புளியைத் தண்ணீரில் ஊற வைத்து, கரைத்து புளித் தண்ணீர் எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் வெங்காயம், தக்காளி இவற்றை பொடியாக நறுக்கி வைக்க வேண்டும்.

pachai pattani

பிறகு அடுப்பை பற்ற வைத்து, அதன் மீது ஒரு குக்கரை வைத்து, 5 ஸ்பூன் எண்ணெய் ஊற்றவேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் அரை ஸ்பூன் கடுகு, அரை ஸ்பூன் சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும். பிறகு 10 பல் பூண்டை தோலுரித்து சேர்த்து, நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

பின்னர் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், தக்காளி சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். இவை வதங்கியதும் இவற்றுடன் பச்சைப் பட்டாணி சேர்த்து, அதனுடன் அரை ஸ்பூன் மஞ்சள் தூ,ள் ஒரு ஸ்பூன் உப்பு சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். இவை அனைத்தும் எண்ணெயில் முழுவதுமாக வதங்கியதும் ஒன்றரை ஸ்பூன் மிளகாய்த் தூள் சேர்க்க வேண்டும்.

onion-rice1

மிளகாய்த்தூள் எண்ணெயில் லேசாக வதங்கிய பின்னர் இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்ற வேண்டும். தண்ணீர் நன்றாகக் கொதிக்க ஆரம்பித்ததும் கரைத்து வைத்துள்ள புளித்தண்ணீரை ஊற்றி, நன்றாக கலந்து விட்டு, குக்கரை மூடி விசில் போட்டு, 2 விசில் வரும் வரை வேக வைக்க வேண்டும்.

green-

பின்னர் அடுப்பை அனைத்து, குக்கரை கீழே இறக்கி வைத்து, குக்கரில் பிரஷர் குறைந்ததும் மூடியைத் திறந்து கருவேப்பிலை, கொத்தமல்லி இலைகளை தூவி ஒரு முறை கலைந்து விடவேண்டும். இதில் தேங்காய் எதுவும் சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை. பட்டாணி நன்றாக வெந்து குழம்பு கெட்டியான பதத்திற்கு வந்துவிடும். இவ்வாறு ஒரு முறை செய்து சுவைத்துப் பாருங்கள். பின்னர் அடிக்கடி உங்கள் வீட்டில் இந்த குழம்பை செய்யத் துவங்கி விடுவீர்கள்.

- Advertisement -