வெயிட் லாஸ் செய்பவர்களும், உடல் ஆரோக்கியத்தில் கவனம் கொள்பவர்களும் இந்த கோதுமை ரவை இட்லியை செய்து சாப்பிட, உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் அதிக அளவில் கிடைக்கிறது

idli1
- Advertisement -

இப்பொழுதெல்லாம் ஆரோக்கியமான உணவு என்று அனைவரும் தேடித்தேடி சில உணவு வகைகளை சமைத்து வருகின்றனர். ஆனால் நமது முன்னோர்கள் பாரம்பரியமாக சாப்பிட்டு வந்த உணவு வகைகளின் மூலம் எவருக்கும் ஒபிசிட்டி என்ற பிரச்சனையே வந்ததில்லை. ஆனால் இன்றைய தலைமுறையினர் வயதிற்கு ஏற்ற எடையில் இல்லாமல் மிகவும் பருமனாக தான் இருக்கிறார்கள். இது போன்ற பிரச்சனையில் இருந்து உடல் ஆரோக்கியத்தை பராமரிப்பதற்கு இப்படி சத்து நிறைந்த உணவுகளை வீட்டில் செய்து கொடுப்பதன் மூலம் நல்ல பலனை அடைய முடியும்.

அது மட்டுமல்லாமல் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவு கொடுக்க வேண்டும் என்று நினைத்தாலும் இது போன்ற தானிய உணவுகளை சமைத்துக் கொடுப்பது உடலுக்கு மிகவும் நன்மை அளிக்கிறது. அவ்வாறு உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்ற கோதுமை ரவை இட்லியை எப்படி செய்ய வேண்டும் என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

- Advertisement -

தேவையான பொருட்கள்:
கோதுமை ரவை – ஒரு கப், பெரிய வெங்காயம் – 1, பச்சை மிளகாய் – 2, கடுகு – அரை ஸ்பூன், உளுத்தம்பருப்பு – அரை ஸ்பூன், கடலைப்பருப்பு – ஒரு ஸ்பூன், பெருங்காயத்தூள் – கால் ஸ்பூன், உப்பு – முக்கால் ஸ்பூன், தயிர் – ஒரு கப், நெய் ஒன்றரை ஸ்பூன், முந்திரிப்பருப்பு – 6, இஞ்சி சிறிய துண்டு – 1, கறிவேப்பிலை – ஒரு கொத்து, கொத்தமல்லி தழை – ஒரு கைப்பிடி.

செய்முறை:
முதலில் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவேண்டும். பிறகு இஞ்சியையும் சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் அடுப்பை பற்ற வைத்து, அதன் மீது ஒரு கடாயை வைத்து. ஒன்றரை ஸ்பூன் நெய் ஊற்ற வேண்டும்.

- Advertisement -

கடாய் நன்றாக சூடானதும் அதில் அரை ஸ்பூன் கடுகு, அரை ஸ்பூன் உளுத்தம் பருப்பு சேர்த்து தாளிக்க வேண்டும். பிறகு ஒரு ஸ்பூன் கடலைப் பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுக்க வேண்டும். பின்னர் 5 முந்திரிப் பருப்பையும் சேர்த்து நன்றாக வறுத்த பின்னர் கருவேப்பிலை சேர்த்து பொரிக்க வேண்டும்.

பிறகு பொடியாக நறுக்கிய இஞ்சி, வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும். பிறகு இவற்றுடன் ஒரு கப் கோதுமை ரவை சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து நன்றாக வறுத்துக் கொள்ள வேண்டும். பிறகு இந்த கலவையை ஒரு சிறிய பாத்திரத்தில் சேர்க்க வேண்டும்.

பின்னர் இவற்றுடன் உப்பு மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து கலந்து விட்டு, ஒரு கப் தயிர் சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும். பிறகு அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்து விட்டு, இட்லி மாவை விட சற்று கெட்டியான பதம் வந்ததும் தட்டு போட்டு மூடி, 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பிறகு மாவை கலந்து விடும் பொழுது மிகவும் கெட்டியாக இருந்தது என்றால் சிறிதளவு தண்ணீர் ஊற்றி கலந்து கொள்ள வேண்டும். பின்னர் இட்லி பாத்திரத்தில் இட்லி ஊற்றி வேக வைத்து எடுத்தால் போதும் சுவையான கோதுமை ரவை இட்லி தயாராகிவிடும்.

- Advertisement -