- Advertisement -
Homeஅழகு குறிப்புகள் | Beauty tips in Tamilதலைமுடி ஆரோக்கியத்திற்கு உதவும் பூ

தலைமுடி ஆரோக்கியத்திற்கு உதவும் பூ

- Advertisement -

இன்றைய காலத்தில் பலரும் தங்களுடைய தலைமுடிக்கு செயற்கையாக தயாரிக்க கூடிய ஹேர் சீரம், ஹேர் கண்டிஷனர் போன்றவற்றை பயன்படுத்தி தங்களுடைய தலை முடியின் தன்மையை மாற்றுவதோடு அதனுடைய வாழ்நாளையும் குறைத்து கொள்கிறார்கள். பிறகு தலைமுடி கொட்டுகிறது என்று வருத்தப்படுகிறார்கள். இதை தவிர்ப்பதற்கு இயற்கை கொடுத்த அற்புத வரமான ஒரு பூவை பயன்படுத்தி எப்படி வீட்டிலேயே ஆரோக்கியமான ஹேர் சீரம், ஹேர் கண்டிஷனர், ஹேர் பேக் தயார் செய்வது என்றுதான் இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்.

இயற்கையிடமிருந்து கிடைக்காத பொருட்களே இல்லை என்று கூறலாம். அந்த பொருட்களை வைத்து நம்முடைய உடல் ஆரோக்கியத்தை நம்மால் மேம்படுத்திக் கொள்ள முடியும். நம்முடைய உடலுக்கு தேவையான அனைத்து விதமான சத்துக்களையும் தரக்கூடிய பொருட்கள் பல இருக்கின்றன. அந்த பொருட்களை உணர்ந்து சரியாக பயன்படுத்தினால் ஆரோக்கியமாக நம்மால் வாழ முடியும். இது உடல் ஆரோக்கியத்தை மட்டுமல்லாமல், முக அழகிற்கும், தலைமுடியின் ஆரோக்கியத்திற்கும், மன ஆரோக்கியத்திற்கும் பொதுவாகவே கருதப்படுகிறது. அந்த வகையில் தலைமுடி ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடிய ஒன்றை பற்றி தான் பார்க்கப் போகிறோம்.

- Advertisement -

தலைமுடி ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடிய பொருளாக திகழ்வதுதான் செம்பருத்தி பூ. இது சர்வசாதாரணமாக எளிதில் கிடைக்கக்கூடிய ஒரு பொருளாகவே திகழ்கிறது. இதை காசு கொடுத்து வாங்க வேண்டும் என்ற அவசியமே இல்லை. இந்த செம்பருத்திப் பூவில் அமினோ ஆசிட் அதிக அளவில் இருக்கிறது. மேலும் விடமின்ஸ், மினரல்ஸ், அயன் போன்ற சத்துக்களும் இந்த பூவில் நிறைந்திருக்கின்றன. இந்த பூவை நம்முடைய தலைமுடிக்கு நாம் உபயோகப்படுத்துவதன் மூலம் தலைமுடி உதிர்தல் என்பது முற்றிலும் நின்றுவிடும். தலைமுடி ஆரோக்கியமாக வளர ஆரம்பிக்கும். இளநரை பிரச்சினை முற்றிலும் நீங்கும். பொடுகு தொல்லை, அரிப்பு தொல்லை போன்றவை நீங்கி ஆரோக்கியமான தலைமுடியை பெற முடியும். இப்பொழுது ஹேர் கண்டிஷனர், ஹேர் ஷுரம், ஹேர் பேக் எப்படி செய்வது என்று பார்ப்போம்.

உங்களால் முடிந்த அளவிற்கு எவ்வளவு செம்பருத்தி பூக்கள் கிடைக்குமோ அவ்வளவு செம்பருத்தி பூக்களையும் பறித்து வந்து தண்ணீர் ஊற்றி கழுவி சுத்தமான தண்ணீரை அந்த பூக்கள் மூழ்கும் அளவிற்கு ஊற்றி ஒரு நாள் முழுவதும் ஊற வைத்துக் கொள்ளுங்கள். இதோடு மூன்று துண்டு பாதாம் பிசினையும் தண்ணீர் ஊற்றி ஊற வைத்துக் கொள்ளுங்கள். மறுநாள் காலையில் எழுந்து இந்த செம்பருத்தி பூ இருக்கும் தண்ணீரை கைகளை வைத்து நன்றாக செம்பருத்தி பூவை கசக்க வேண்டும்.

- Advertisement -

இப்படி நாம் நன்றாக கரைக்கும் பொழுது அதிலிருந்து ஒருவித ஜெல் வெளியேறி அந்த தண்ணீரே நிறம் மாறி ஜெல் பதத்திற்கு வந்திருக்கும். இதேபோல் நாம் ஊற வைத்திருக்கும் பாதாம் பிசினும் ஜில்லாக மாறியிருக்கும். இப்பொழுது நாம் கரைத்த இந்த செம்பருத்தி பூ ஜெல்லை வடிகட்டி தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். மிக்ஸி ஜாரில் ஊற வைத்திருந்த பாதாம் பிசினையும் அது மூழ்கும் அளவிற்கு செம்பருத்தி பூ தண்ணீரையும் ஊற்றி நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள். இது தான் ஹேர் கண்டிஷனர்.

அடுத்ததாக நாம் வடிகட்டி வைத்திருக்கும் அந்த ஜெல்லுடன் இரண்டு விட்டமின் இ கேப்சூலை சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். இதை அப்படியே ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி வைத்துக் கொள்ள வேண்டும். இது தான் ஹேர் ஷுரம். இதை நம்முடைய தலையில் நாம் பயன்படுத்துவதன் மூலம் தலைமுடி உதிர்தல் பிரச்சனை என்பது முற்றிலும் நீங்கி தலைமுடி ஆரோக்கியமாக வளர ஆரம்பிக்கும்.

- Advertisement -

நாம் வடிகட்டி வைத்திருக்கும் அந்த செம்பருத்திப் பூவை மிக்சி ஜாரில் போட்டு நன்றாக அரைத்து பேஸ்ட் ஆக தயார் செய்து கொள்ள வேண்டும். இந்த பேஸ்டை தலையில் தடவி அரை மணி நேரம் அப்படியே விட்டு விட வேண்டும். இந்த ஹேர் பேக்கை போடுவதற்கு முன்பாக தலையில் எண்ணெய் இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. அரை மணி நேரம் கழித்து எப்பொழுதும் போல் தலைக்கு குளித்துவிட்டு வரவேண்டும். இப்படி செய்வதன் மூலம் தலையில் இருக்கக்கூடிய பொடுகு பிரச்சனைகள், இளநரை போன்ற பிரச்சனைகள் அனைத்தும் நீங்கி முடி பட்டு போன்று மிருதுவாக திகழும்.

இதையும் படிக்கலாமே வசீகரமான முகத்தைப் பெற டிப்ஸ்

ஒரே ஒரு பூவால் தலைமுடிக்கு ஆரோக்கியம் தரக்கூடிய இவ்வளவு பொருட்களை தயார் செய்ய முடியும் என்பதால் எளிதில் கிடைக்கக்கூடிய இந்த பூவை பயன்படுத்தி நம்முடைய தலைமுடி ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்வோம்.

சற்று முன்