அடிக்கிற வெயிலில் உங்களுடைய முடி உடையாமல் கருகருவென வளர, இந்த ஒரு சீரம் போதும். வீட்டிலேயே இந்த சீரம் சுலபமாக தயாரிப்பது எப்படி?

hair16
- Advertisement -

நம்மில் நிறைய பேர் முடி சில்கியாக, சாஃப்டாக, ஷைனிங் ஆக இருக்க வேண்டும் என்பதற்காக நிறைய சீரமை கடையிலிருந்து வாங்கி பயன்படுத்தி கொள்வோம். இது முடிக்கு கட்டாயம் சூப்பரான லுக் கொடுக்கும். ஆனால் அதில் ஒரு பிரச்சனை உள்ளது. கடையிலிருந்து வாங்கக்கூடிய ஸசீரமில் சிலிகான் கட்டாயம் இருக்கும். இந்த சிலிகான் சேர்த்த சீரமை நாம் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம் எதிர்காலத்தில் நம்முடைய முடி உடைந்து உதிர்வதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளது. ஆகவே எந்த கலப்படமும் இல்லாமல் வீட்டிலேயே சூப்பரான சிரம், சுலபமாக தயாரிப்பது எப்படி என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இந்த சீரம் உங்களுடைய முடிக்கு ஒரு பாதுகாப்பு வட்டமாக இருக்கும் என்பதில் ஒரு துளி சந்தேகமும் கிடையாது.

முதலில் இந்த சீரம் தயாரிக்க என்னென்ன பொருட்கள் தேவை என்பதை பார்த்துவிடுவோம். செம்பருத்திப்பூ – 10, துளசி இலை – 1 கைப்பிடி அளவு, ரோஜா இதழ் – 1 கைப்பிடியளவு, வெட்டி வேர் – 1 கைப்பிடி அளவு, இந்த நான்கு பொருட்களையும் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். பிறகு அலோ வேரா ஜெல் – 1/2 ஸ்பூன், வைட்டமின் E கேப்ஸ்யூல் – 2, நமக்கு தேவைப்படும்.

- Advertisement -

அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து கொள்ளுங்கள். அதில் சுத்தமான குடிதண்ணீரை 1 டம்ளர் அளவு ஊற்றி செம்பருத்திப் பூ, துளசி இலை, வெட்டிவேர், ரோஜா இதழ், இந்த நான்கு பொருட்களையும் போட்டு அடுப்பை சிம்மில் வைத்து விட்டு, ஒரு மூடி போட்டு 5 நிமிடம் போல இந்த பொருட்களெல்லாம் தண்ணீரில் நன்றாகக் கொதிக்க வைக்க வேண்டும். நாம் சேர்த்து இருக்கக்கூடிய பொருட்களின் எசன்ஸ் அனைத்தும் தண்ணீரில் இறங்கி விடும். 5 நிமிடம் கழித்து அடுப்பை அணைத்துவிடுங்கள். சூடு ஆறும் வரை ஒரு மூடி போட்டு அப்படியே இந்த தண்ணீரை வைத்து விடுங்கள்.

சூடு ஆறிய பின்பு ஒரு வடிகட்டியின் மூலம் இதை வடிகட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். சிவப்பு நிறத்தில் ஒரு சிரம் நமக்கு கிடைத்திருக்கும். இதோடு அலோ வேரா ஜெல் – 1/2 ஸ்பூன், வைட்டமின் E கேப்ஸ்யூல் – 2 உள்ளே இருக்கும் ஜெல்லை மட்டும் எடுத்து இந்த சீரமில் ஊற்றி, நன்றாக அடித்துக் கலக்க வேண்டும். முடியவில்லை என்றால் தயார் செய்த சீரமை மிக்ஸி ஜாரில் ஊற்றி ஒரு ஓட்டு ஓட்டி கொண்டால் கூட பரவாயில்லை. (சீரமோடே அலோவேரா ஜெல்லும், விட்டமின் ஈ கேப்ஸ்யூலும் நன்றாக கலக்க வேண்டும்.)

- Advertisement -

இப்போது நமக்குத் தேவையான சீரம் தயாராகிவிட்டது. இதை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி ஃப்ரிட்ஜில் வைத்து விட்டால் 15 நாட்கள் வரை கெட்டுப் போகாது. இந்த சீரமை தலைக்கு எப்படி அப்ளை செய்வது. வாரத்தில் இரண்டு நாட்கள் அல்லது மூன்று நாட்கள் தலையில் அப்ளை செய்யலாம். தலைக்கு குளித்து விட்டு தலையை துவட்டிவிட்டு, தலையில் லேசாக ஈரம் இருக்கும்போது இந்த ஸ்ப்ரேவை ஸ்கால்பில் ஸ்ப்ரே செய்ய வேண்டும்.

அதன் பின்பு கீழே நீளமாக இருக்கக்கூடிய முடியையும் கொஞ்சம் கொஞ்சமாகப் பிரித்து எல்லா இடங்களிலும் படும்படி ஸ்பிரே செய்து விட்டு, அதன் பின்பு எப்போதும் போல உங்கள் தலையை சிவிக் கொள்ளலாம். (ஸ்பிரே செய்ய சீரமை பயன்படுத்துவதற்கு முன்பு பாட்டிலை நன்றாக குலுக்கி விட்டு பயன்படுத்த வேண்டும்.) இந்த சீரம் உங்களுடைய முடிக்கு நல்ல ஷைனிங் கைகொடுக்கும்.

அடிக்கிற வெயிலுக்கு முடி ட்ரையாகி உடையாமல் இருக்கும். காற்றில் வரக்கூடிய தூசு தும்பு முடியில் சேர்வதன் மூலம் முடிக்கு எந்த தீமையும் ஏற்படாது. முடி கருகருவென பாதுகாப்பாக வளர செய்ய இந்த சீரம் உதவியாக இருக்கும். உங்களுக்கு இந்த டிப்ஸ் பிடித்திருந்தால் உங்க வீட்ல ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -