செலவே இல்லாமல் செக்கச் செவேலென என அழகான சருமத்தை பெற வேண்டுமா? ஊரே உங்கள் முகத்தை பாத்து கண் வைக்கும் அளவுக்கு பேரழகை தரும் செம்பருத்திப்பூ.

face3
- Advertisement -

தலைமுடிக்குத்தான் செம்பருத்தி பூ பயன்படுத்துவார்கள். ஆனால் சரும அழகுக்கும் செம்பருத்தி பூ பயன்படுமா. ஆமாங்க, செம்பருத்திப் பூவையும் நம் சமையல் அறையில் இருக்கும் இன்னும் ஒரு சில பொருட்களையும் வைத்து தான் இந்த அழகு குறிப்பு சொல்லப்பட்டுள்ளது. வயதான தோற்றத்தை தள்ளி போட வேண்டும், அழகு இரண்டு கன்னங்களிலும் ஜொலிக்க வேண்டும் என்பவர்கள் இந்த அழகு குறிப்பை படித்து பலன் பெறலாம். ஒரு சில வாரங்களில் இதற்கான ரிசல்ட் கண்ணாடி முன்பு தெரியும்.

செக்கச் செவேல் என மாற ஐஸ் கியூப் மசாஜ்:
முதலில் இதற்கு நமக்கு தேவையான பொருள் 5 செம்பருத்திப்பூ. ஒரு அகலமான பாத்திரத்தில் இந்த செம்பருத்தி பூ இதழ்களை மட்டும் கிள்ளி போட்டு சுட சுட தண்ணீரை ஊற்றி, அப்படியே மூடி போட்டு வைத்து விடுங்கள். பத்து நிமிடத்தில் தண்ணீர் சிவப்பு நிறமாக மாறி இருக்கும். அப்போது செம்பருத்தி பூவை எல்லாம் தூக்கி போட்டுவிட்டு, அந்த தண்ணீரை மட்டும் அப்படியே தனியாக வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அதன் பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் நறுக்கிய பீட்ரூட் துண்டுகள் 5 லிருந்து 6, நறுக்கிய தக்காளிப் பழம் 1, போட்டு தண்ணீர் ஊற்றாமல் அரைத்து இதை வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு காட்டன் துணியில் ஊற்றி வடிகட்டி எடுத்தால் வெறும் ஜூஸ் மட்டும் உங்களுக்கு கிடைக்கும். இதுவும் சிவப்பு நிறத்தில் தான் இருக்கும்.

இப்போது எடுத்து வைத்திருக்கும் செம்பருத்திப்பூ டீ, வடிகட்டி வைத்திருக்கும் இந்த பீட்ரூட் தக்காளி பழச்சாறையும் ஒன்றாக கலந்து ஐஸ் ட்ரேவில் ஊற்றி, ஐஸ் கட்டிகளாக தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த ஐஸ் கியூப்களை ஒரு நாளைக்கு ஒன்று என்ற கணக்கில் எடுத்து முகத்தில் ஐஸ் மசாஜ் செய்ய வேண்டும். சில பேருக்கு ஐஸ் கட்டிகளை அப்படியே முகத்தில் வைத்தால் செட் ஆகாது. அப்படிப்பட்டவர்கள் மெல்லிசான காட்டன் துணியில் இந்த ஐஸ் கட்டிகளை வைத்து முகத்தில் வைத்து வட்ட வடிவில் லேசாக மசாஜ் செய்து கொடுங்கள்.

- Advertisement -

உங்கள் முகத்தில் முகப்பரு இருந்தால் ஐஸ் கியூபை வைத்து மசாஜ் செய்யக்கூடாது. அப்படியே அந்த ஐஸ் கட்டிகளை முகப்பரு இருக்கும் இடத்தில் மட்டும் ஒத்தடம் கொடுத்து எடுப்பது போல ஒத்தி ஒத்தி எடுத்துக் கொள்ளுங்கள். சில பேருக்கு ஐஸ் க்யூப் மசாஜ் அலர்ஜியாக இருக்கும். அப்படிப்பட்டவர்கள் என்ன செய்யலாம்.

இதை ஜுஸை அப்படியே ஒரு பாட்டிலில் ஊற்றி ஃப்ரிட்ஜில் வைத்துக் கொள்ளுங்கள். ஜில்லுனு கூல்டிரிங்ஸ் மாதிரி ஒரு மாதத்திற்கு கெட்டுப் போகாமல் ஃப்ரிட்ஜில் இருக்கும். ஒரு அகலமான பவுலில் அரிசி மாவு 1 ஸ்பூன், கஸ்தூரி மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன், போட்டு இந்த பாட்டிலில் ஊற்றி வைத்திருக்கும் சாறை அந்த அரிசி மாவில் ஊற்றி கலந்தால் சூப்பரான பேக் கிடைத்திருக்கும்.

இதையும் படிக்கலாமே: எப்பேற்பட்ட கறுத்த முகமும் செக்க செவேரென்னு சிவப்பாக மாற, அழகை அள்ளி அள்ளி கொடுக்கக் கூடிய இந்த ஆயிலை தினமும் ஒரு சொட்டு உங்கள் முகத்தில் தேய்த்தாலே போதும்.

அதை முகத்தில் ஃபேஸ் பேக்காக போட்டுக் கொள்ளுங்கள். 15 நிமிடம் கழித்து முகத்தை கழுவி கொள்ளுங்கள். இதையும் வாரத்தில் 2 லிருந்து 3 நாட்கள் செய்து வரலாம். தொடர்ந்து இப்படி செய்து வர உங்களுடைய சருமம் தானாக பளபளன்னு ஜொலிக்க தொடங்கி விடும்.

- Advertisement -