உங்கள் ஜாதகத்தில் குரு பகவான் எங்கு இருந்தால் ஹம்ச யோகம் உண்டு

Guru astrology

ஜோதிடத்தில் பல வகையான யோகங்கள் உண்டு. அதில் பெரும்பாலானவை நன்மை தரக் கூடியதாகவும், ஒரு சில யோகங்கள் சிறிது கஷ்டங்களை தரக்கூடியதாகவும் இருக்கின்றன. பொதுவாக யோகம் என்பது ஒரு மனிதனை மற்றவர்கள் உயர்வாகக் கருதக்கூடிய வகையில் அவருக்கு பலன்களை தருவதே என்று பெரும்பாலானோரால் கருதப்படுகிறது. அந்த வகையில் ஒரு மனிதனின் ஜாதகத்தில் பிறரின் மதிப்பை எப்போதும் பெற்றுத்தர கூடிய “குரு” பகவானால் ஏற்படும் “ஹம்ச” யோகத்தைப் பற்றி இங்கு காண்போம்.

astrology

ஒருவரது ஜாதகத்தில் குரு பகவான் அவரது சொந்த ராசியான “தனுசு” ராசியிலேயோ, “மீன” ராசியிலேயோ இருந்தாலும், குரு பகவானின் உச்ச ராசியான “கடக” ராசியிலேயோ இருந்தாலும் அந்த ஜாதகருக்கு “ஹம்ச யோகம்” ஏற்படுகிறது. அதோடு 1, 4, 7,10 ஆகிய நான்கு இடங்களில் ஏதேனும் ஒன்றில் குரு இருக்க வேண்டும். இதை தெளிவாக விளக்கக்கூடிய படம் கீழே உள்ளது.

Guru in Dhanusu
தனுசில் குரு
Guru in Meenam
மீனத்தில் குரு
Guru in Kadagam
கடகத்தில் குரு

இந்த “ஹம்ச யோகத்தில்” பிறந்த ஜாதகர்களின் குடும்பம் பெரும்பாலும் பாரம்பரியங்களை மதித்து போற்றுவதாகவும், ஊர் மக்களின் நன்மதிப்பை பெற்றதாகவும் இருக்க வாய்ப்புகள் அதிகம். இந்த யோகத்தில் பிறந்தவர்கள் நல்ல உயரமான தோற்றத்தையும், வெளிர் நிற மேனியையும் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களின் முகத்தில் இயற்கையாகவே ஒரு தெய்வீக தேஜஸ் இருக்கும். தங்களது தோற்ற அமைப்பிலேயே பிறரை வசீகரிக்கக்கூடிய தன்மை கொண்டவர்களாக இருப்பார்கள். பல விதமான சாஸ்திரங்களை கற்றுத்தேர்ந்து பண்டிதர்களாக இருப்பார்கள். அதை பிறருக்கு உபதேசிக்கவும் செய்வார்கள்.

ஒரு சிலர் மிகச் சிறந்த பேராசிரியர்களாக மிளிர்வார்கள். மஞ்சள் நிறம் கொண்ட தங்கம், மஞ்சள் போன்ற பொருட்களின் வியாபாரத்தில் பெருமளவில் லாபமீட்டுவார்கள். பொன் நகைகளின் சேர்க்கையும் இவர்களுக்கு அதிகளவு உண்டாகும். அரசியலில் ஈடுபட்டால் மிகப்பெரிய பதவிகளை பெறக்கூடிய அதிர்ஷ்டமும் உண்டாகும். தர்ம நெறி, நேர்மை குணம் தவறாமல் வாழக்கூடியவர்களாக இருப்பார்கள். ஆன்மிகத்தில் ஈடுபட்டால் இந்த உலகமே போற்றக்கூட அளவிற்கு “ஜெகத் குருவாக” உயர்வார்கள். கோவில், மதம் பாரம்பரிய சம்பிரதாயங்களில் மிகுந்த ஈடுபாடு கொண்டு, அக்காரியங்களில் தாமாக ஈடுபட்டு எல்லோருக்கும் நன்மை அளிக்கக் கூடிய காரியங்களை புரிவார்கள்.

இதையும் படிக்கலாமே:
சுக்கிரனால் ஏற்படும் யோகம் உங்கள் ஜாதகத்தில் உண்டா பார்ப்போம்

English Overview:
Here we described about Hamsa Yogam in Tamil astrology. This yogam basically depend on the place of Lord Guru in horoscope.