மண்ணுக்குள் புதைந்து கிடந்த 1000 வருட பழமையான கோவில் கண்டுபிடிப்பு

hindu-temple-1

நமது பண்டைய பாரதம் என்பது இப்போது இன மற்றும் மத வேற்றுமைகளால் இந்திய நாட்டிலிருந்து பிரிந்த பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தின் பகுதிகளையும் சேர்த்து “அகண்ட பாரதமாக” இருந்தது. ஆயிரம் வருடங்களுக்கு முற்பட்ட காலத்தில் இந்தியாவின் பெரும்பான்மையான மதமாக இந்து மதம் மட்டுமே இருந்த காரணத்தினால் பாரத நாட்டின் அனைத்து பகுதிகளிலும் இந்து கோவில்கள் கட்டப்பட்டன. அப்படியான ஒரு பழமையான இந்து கோவில் வங்கதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. அதை பற்றி மேலும் அறியலாம்.

excavation

தற்போது வங்காள மொழி மற்றும் இனத்தை சார்ந்த இஸ்லாமியர்கள் பெரும்பான்மையினராக இருக்கும் இந்தியாவின் அண்டை நாடான “வங்காளதேசம்” சமீப நூற்றாண்டு வரை இந்திய நாட்டின் ஒரு பகுதியாகவே இருந்தது அனைவரும் அறிந்த ஒன்று தான். மகாபாரத இதிகாசத்தில் “வங்கதேச நாடு” அப்போதைய அகண்ட “பாரதத்தின் 56 தேசங்களில்” ஒன்றாக இருந்ததை பற்றி குறிப்பு இருக்கிறது.

சமீபத்தில் வங்கதேசத்தின் “மாதப்கவன்” என்ற பகுதியில் 1000 ஆண்டுகளுக்கும் மேல் பழமையான விஷ்ணு கோவில் ஒன்று, அந்நாட்டின் ஜஹாங்கீர்நகர் பல்கலைக்கழக ஆய்வுக்குழுவினர் அகழ்வாய்வில் ஈடுபட்ட போது கண்டுபிடித்தனர். இந்த பழமையான கோவிலில் “ஒன்பது ரதங்களின்” சிற்பங்கள் காணப்படுவதால், இது “நவரத கோவில்” என அழைக்கப்படுகிறது. இதனுடன் பல சிலைகளும், மண்பாண்டங்களும் கண்டெடுக்கப்பட்டன. இந்த கோவில் மேற்கு வங்கம் மாநிலத்தில் தற்போது இருக்கும் “சித்தேஸ்வர்” கோவிலை ஒத்திருப்பதாகவும், இக்கோவிலை பற்றி நவீன விஞ்ஞான முறைகளை கொண்டு ஆராயும் போது மட்டுமே இந்த கோவில் கட்டப்பட்ட உண்மையான காலகட்டத்தை கூறமுடியும் என ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

excavation

இதே ஆய்வு குழு கடந்த 2007 ஆம் ஆண்டு இந்நாட்டின் தினஜ்பூர் பகுதியில் “ஐந்து ரத சிற்பங்களை” கொண்ட “பஞ்ச ரத” கோவிலை அகழ்வாய்வின் போது கண்டுபிடித்தனர். இக்கோவிலில் நான்கு தூண் கொண்ட ஒரு மண்டபமும் இருப்பதை வெளிக்கொணர்ந்தனர். கடந்த 15 ஆண்டு அகழ்வாய்வில் இந்த தினஜ்பூர் பகுதியை சுற்றிலும் 1000 திற்கும் மேற்பட்ட இடங்களில் பல புராதான கட்டுமானங்களும், பொருட்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் 800 கும் மேற்பட்ட கண்டுபிடிப்புகள் 1000 திலிருந்து 1500 ஆண்டுகளுக்கு மேல் பழமையான சரித்திரத்தை கூறுவதாக இருப்பதாகவும் கூறுகிறார் இந்த ஆய்வுக்குழு தலைவர்.

இதையும் படிக்கலாமே:
சீன அருங்காட்சியகத்தில் 13 நூற்றாண்டில் கட்டப்பட்ட சிவன் கோவிலின் தகவல்

English Overview:
Here we discussed about the hindu temple which was recently found in the excavation happend in west bengal.