சீன அருங்காட்சியகத்தில் 13 நூற்றாண்டில் கட்டப்பட்ட சிவன் கோவிலின் தகவல்

kalvettu-gopuram-1
- Advertisement -

பல்வேறு வேறுபாடுகள் கொண்ட மக்கள் உலகம் முழுவதும் வாழ்கின்றனர். அந்தந்த பகுதிகளில் வாழும் மக்களின் இறை வழிபாட்டு முறை பிற பகுதிகளில் வாழும் மக்களின் வழிபாட்டு முறைகளில் இருந்து வேறுபட்டிருக்கின்றன. சில கடவுள் வழிபாட்டு முறைகள் மற்றும் அதன் தாக்கம் பிற நாடுகளிலும் ஏற்பட்டிருக்கின்றன. அப்படி உலகின் பெரும் பகுதியை ஆண்ட மங்கோலிய மன்னனின் நினைவாக கட்டப்பட்டுள்ள சிவன் கோவிலை பற்றிய விடயங்களை தெரிந்து கொள்ளலாம்.

king

முற்காலத்தில் பாரதத்திற்கு வெளியே ஆசிய கண்டத்தின் வடக்கு பகுதியின் பல நாடுகளிலும் சனாதன தர்மமாகிய “இந்து” மதத்தின் கொள்கைகளும் வாழ்வியல் முறைகளும் பரவியிருந்தன. மத்திய ஆசியாவில் பல நூறாண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த “ஹூண” இன மக்கள் சூரியனையும், சிவபெருமானையும் இறைவனாக வழிபட்டிருக்கின்றனர். அக்காலத்தில் ஆசிய கண்டம் முழுதும் அதிகமாக புத்த மதம் தங்கள் பகுதிகளில் பரவாமல் தடுத்திருக்கின்றனர். மத்திய ஆசிய பகுதி பெரும்பாலும் விவசாயம் செய்ய முடியாத கரடு முரடான, அதே நேரத்தில் குளிர் பாலைவன நிலப்பரப்பை கொண்ட பகுதியாகும். எனவே இங்கு ஆடுகள் வளர்ப்பது ஒரு முக்கிய தொழில். இதில் கைதேர்ந்தவர்கள் மங்கோலியர்கள்.

- Advertisement -

12 ஆம் நூற்றாண்டில் சிறு சிறு இன குழுக்களாக பிரிந்திருந்த மங்கோலியர்களை ஒன்றிணைத்து, ஒரு வலிமை வாய்ந்த படையை உருவாக்கி, பல நாடுகளின் மீது படையெடுத்து உலகின் மிக பெரும் நிலப்பகுதியை ஆண்டான் மங்கோலிய சக்ரவத்தி “ஜெங்கிஸ் கான்”. தனது அண்டை நாடான சீனாவின் மீது படையெடுத்து அந்த நாட்டை வென்று ஆட்சிபுரியலானான் ஜெங்கிஸ் கான். வீரமிகுந்த மன்னனாக இருந்தாலும் ஆன்மீகத்திலும் மதங்களின் கோட்பாடுகள் பற்றி அறிந்துகொள்வதிலும் ஆர்வம் கொண்டிருந்தான்.

king

இவனது பேரனான “குப்ளாய் கான்” தன் ஆட்சிக் காலத்தில் சீன தேசத்தில் வியாபார நிமித்தமாக வாழ்ந்து கொண்டிருந்த தமிழர்களின் மூலமாக “சைவ” மதத்தின் அருமைகளை தெரிந்து கொண்டான். அது மட்டுமில்லாமல் அந்த தமிழர்களின் உதவியுடன் தனது தாத்தா ஜெங்கிஸ் கான் நினைவாக ஒரு சிவன் கோவிலை எழுப்பினான் குப்ளாய் கான். இக்கோவில் கட்டப்பட்டதை குறித்த 13 ஆம் நூற்றாண்டின் தமிழ் கல்வெட்டு ஒன்று சீனாவில் கண்டெடுக்கப்பட்டு அங்குள்ள அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

- Advertisement -

இதையும் படிக்கலாமே:
காளியை நேரில் கண்ட சித்தரை பற்றி தெரியுமா

இது போன்ற மேலும் பல ஆன்மீக தகவல்களை படிக்க எங்களோடு இணைந்திருங்கள்

- Advertisement -