இந்த விளக்கில் தீபம் ஏற்றுவதன் மூலம் வீட்டில் ஹோமம் செய்ததற்கான பலனை பெற முடியும்

deepam
- Advertisement -

புது வீடு கட்டி அந்த வீட்டிற்குள் குடியேறுவதற்கு முன்னர் பலவித பூஜைகள் செய்வதும், ஹோமங்கள் செய்வதும், பசுவை வீட்டிற்குள் அழைத்தும் இவ்வாறான பல சாஸ்திர சம்பிரதாயங்களை பின்பற்றிய பிறகுதான் வீட்டிற்குள் குடியேருகிறோம். பஞ்சபூதங்களின் அருள் கிடைக்கவும், கடவுள்கள் ஆசீர்வாதம் கிடைக்கவும் தான் இவ்வாறான ஹோமங்களையும் செய்கின்றோம். ஆறு மாதத்திற்கு ஒரு முறையோ அல்லது வருடத்திற்கு ஒரு முறையோ ஹோமங்கள் செய்வது நமது குடும்ப வாழ்க்கைக்கு மிகவும் நன்மையை கொடுக்கிறது. வீட்டிலிருக்கும் துன்பங்கள், கஷ்டங்கள், கண் திருஷ்டிகள், மனக் குறைகள் அனைத்தையும் தீர்த்து சுகமான வாழ்வை கொடுக்கவல்லது இவ்வாறான ஹோமங்களின் மூலம் கிடைக்கும் பலன். பலராலும் இதனை தொடர்ந்து செய்ய இயலுவதில்லை. எனவே அதற்கு பதிலாக இந்த ஒரு விளக்கை ஏற்றுவதன் மூலம் ஹோமங்கள் செய்வதன் பலனை பெற முடியும். அவ்வாறு அது என்ன விளக்கு என்றும் அந்த விளக்கினால் நமக்கு கிடைக்கும் பலன்கள் என்ன என்பதனையும் பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

new home

ஹோமங்களின் பலன்களையும், புண்ணியங்களையும் தரக்கக்கூடிய ஒரு விளக்கு பஞ்சகவ்ய விளக்கு. இந்த விளக்கைப் பற்றியம் அதன் பலன்கள் பற்றியும் ஒரு சிலர் அறிந்திருப்பார்கள்.
ஆனால் இதனை எவ்வாறு வீட்டிலேயே செய்யது என்று பலருக்கும் தெரிவதில்லை. பஞ்சகவ்ய விளக்கை நமது வீட்டிலேயே தயாரித்து அதன் பின்னர் விளக்கு ஏற்றி பூஜை செய்வதென்பது குடும்பத்திற்கு நன்மை தரக்கூடிய பலனை அளிக்கிறது.

- Advertisement -

அவ்வாறு பஞ்சகவ்ய விளக்கு செய்வதற்காக முதலில் பசுவின் சாணம், நெய், தயிர், கோமியம் மற்றும் பசும்பால் இந்த ஐந்து பொருட்களையும் எடுத்துக்கொள்ளவேண்டும். பஞ்ச என்றால் ஐந்து என்றும், கவ்யம் என்றால் பசுவிடமிருந்து கிடைக்கக் கூடியது என்றும் பொருள்படும்.

cow

முதலில் பசுவின் சாணத்துடன் ஒரு ஸ்பூன் நெய், ஒரு ஸ்பூன் தயிர், ஒரு ஸ்பூன் பால், ஒரு ஸ்பூன் கோமியம் இவை அனைத்தையும் சேர்த்து அதனுடன் சிறிதளவு மஞ்சள் தூளையும் சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ள வேண்டும்.

- Advertisement -

அதன்பின் வரட்டியை நன்றாக பொடி செய்து கொண்டு ஒரு அகல் விளக்கை எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அகல்விளக்கில் லேசாக நெய் தடவி வரட்டியின் தூளை அதன் மீது தூவி விடவேண்டும். பின்னர் கலந்து வைத்துள்ள பஞ்சகவ்யத்தை எடுத்து சிறு உருண்டையாக பிடித்துக் கொண்டு அதனை அகல்விளக்கின் மீது வைத்து அழுத்தி அகல்விளக்கின் வடிவம் போன்று செய்து கொள்ள வேண்டும்.

cow dung

இவ்வாறு பிசைந்து வைத்துள்ள பஞ்சகவ்யத்தில் எத்தனை விளக்குகள் செய்ய முடியுமோ அவை அனைத்தையும் செய்து கொள்ள வேண்டும். அதன்பின் அனைத்து விளக்குகளையும் வெயிலில் மிதமான சூட்டில் காய வைக்க வேண்டும். இவ்வாறு இரண்டு நாட்கள் காய வைத்த பின்னர் அந்த விளக்குகளை எடுத்து ஒரு டப்பாவில் வைத்துக் கொள்ளலாம்.

Panjakavya-vilakku

பிறகு ஒவ்வொரு வெள்ளிக்கிழமை, அமாவாசை, பௌர்ணமி, கிருத்திகை போன்ற தினங்களில் இந்த விளக்கில் நெய் ஊற்றி தீபம் ஏற்றி இறைவனை வணங்க வேண்டும். இவ்வாறு தீபம் ஏற்றுவதால் ஒரு ஹோமம் செய்வதால் எவ்வளவு பலன்கள் கிடைக்குமோ அவ்வளவு பலனும் இந்த ஒரு விளக்கினை ஏற்றுவதில் கிடைத்துவிடும். பஞ்சகவ்ய விளக்கு ஏற்றி பூஜை செய்த பின் அந்த விளக்கின் சாம்பலை நெற்றியில் வைத்துக்கொள்ளலாம். மீதம் உள்ள சாம்பலை செடியில் சேர்ப்பதன் மூலம் செடிக்கு உரமாகவும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

- Advertisement -