வீட்டில் சின்ன சின்ன விஷயங்களை இப்படிப் பராமரித்தால் உங்களுக்கு அதிகமான நேரமும், பணமும் மிச்சமாகும் அல்லவா!

home
- Advertisement -

வீட்டில் இருக்கும் ஒவ்வொரு பொருட்களும் ஒவ்வொரு நேரத்தில் நமக்கு எரிச்சலை உண்டாக்கிவிடும். சரியான நேரத்தில் சரியான வேலை அது செய்து கொடுக்காத பட்சத்தில் நமக்கு அவற்றை தூக்கிப் போட்டு விட்டு புதிதாகவே வாங்கி விடலாம் என்று தோன்றி விடும். ஆனால் நம் வீட்டில் இருக்கும் ஒவ்வொரு பொருளும் நமக்கு முக்கியமானவை தான். கஷ்டப்பட்டு சம்பாதித்து கிடைக்கும் பணத்தில் ஒவ்வொரு பொருளாக வாங்கி வைப்போம் ஆனால் அதை முறையாக பராமரிக்காமல் விட்டு விடுவோம். இப்படியான சில பொருட்களையும் அதனை பராமரிக்கும் எளிய முறையையும் பற்றி தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.

bucket

டிப் 1
உங்கள் வீட்டில் இருக்கும் பழைய பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில் விரிசல் அல்லது ஓட்டை விழுந்தால் அதனை உடனே தூக்கி போட்டு விடாதீர்கள். பழைய பல் துலக்கும் பிரஷ் ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள் அதனை நெருப்பில் காட்டினால் பிளாஸ்டிக் உருகும் அந்த உருகும் திரவத்தை கொண்டு ஓட்டையை தேய்த்து விட்டால் போதும் ஓட்டை அடைந்து நீர் ஒழுகுவது தவிர்க்கப்படும்.

- Advertisement -

டிப் 2
துணி துவைக்க கம்போர்ட் போன்ற வாசனை திரவியங்களை காசு கொடுத்து வாங்க வேண்டிய அவசியம் இல்லை. நாம் பயன்படுத்திவிட்டு தூக்கி எறியும் ஷாம்பூ கவர்களை துணி துவைக்கும் விழுது சேர்த்து ஊற வைத்து விட்டால் போதும். துணிமணிகள் அவ்வளவு வாசனையாக இருக்கும்.

washing-mechine

டிப் 3
அசைவம் சமைத்த பாத்திரங்கள் துர்நாற்றம் வீசாமல் இருக்க அதில் கொஞ்சம் சோப்பு தூள் மற்றும் புளி சேர்த்து தண்ணீர் தெளித்து ஊற வைத்து விடுங்கள். அதன் பிறகு எங்கள் பாத்திரம் துலக்கினால் கொஞ்சம் கூட அசைவ துர்நாற்றம் வீசாது.

- Advertisement -

டிப் 4
நீங்கள் வெள்ளை துணிகளுக்கு நீலம் பயன்படுத்துபவரா? நீலம் கலந்த தண்ணீரை வாஸ்பேஷன், பாத்ரூம், டைல்ஸ் போன்ற இடங்களில் கழுவி முடித்ததும் ஊற்றி விட்டால் போதும் புதியது போல பளபளப்பாக மின்னும்.

ujala

டிப் 5
வெயிலின் தாக்கம் வீட்டில் அதிகம் இருக்கும் சமயங்களில் உங்கள் வீட்டு ஜன்னல்களுக்கு அடர்த்தியான கரும்பச்சை அல்லது நீல நிறத்தில் இருக்கும் திரைச் சீலைகளை பயன்படுத்திப் பாருங்கள். கொஞ்சம் கூட வெயிலின் தாக்கம் வீட்டிற்குள் ஏற்படாமல் இருக்கும்.

- Advertisement -

டிப் 6
நீங்கள் சமையல் செய்யும் பொழுது கீரையை தவிர மற்ற எந்த வகையாக இருந்தாலும் அதனை மூடி வைத்து சமைக்க வேண்டும் அப்போது தான் உங்களுடைய எரிவாயு விரைவாக வீணாவது தடுக்கப்படும். அது போல் ஒவ்வொரு முறையும் சமைத்து முடித்த பிறகு நீங்கள் கீழே இருக்கும் சிலிண்டரின் பட்டனை ஆஃப் செய்து விட வேண்டும். இப்படிப் பராமரித்தால் கூடுதல் நாட்கள் எரிவாயு உங்களுக்கு பயன் தரும்.

sink-water

டிப் 7
சமையல்கட்டில் இருக்கும் பாத்திரம் கழுவும் சிங்க் பாசி பிடித்து அசிங்கமாக காட்சி அளித்தால் நீங்கள் அதற்கு கொஞ்சம் நியூஸ் பேப்பரை சுற்றி துடைத்து எடுத்து பாருங்கள் சிங் பளிச்சிடும்.

டிப் 8
உங்கள் வீட்டில் இருக்கும் தையல் மிஷின் நைலான் துணியை தைக்கும் போது ஊசி இறங்காமல் பாடாய்படுத்துகிறதா? அந்த ஊசியை சோப்பு கட்டில் குத்தி குத்தி எடுத்து பின்னர் பயன்படுத்திப் பாருங்கள். எளிதாக நைலான் துணியை தைத்து விட முடியும்.

tooth-brush-holder

டிப் 9
நீங்கள் பயன்படுத்தும் டூத் பேஸ்டை கடைசி துளி வரை பயன்படுத்த வேண்டும் என்று நினைக்கிறீர்களா? இறுதிகட்டத்தில் அதனை கொஞ்ச நேரம் வெந்நீரில் போட்டு வைத்தால் போதும் ஒரு சொட்டு கூட உள்ளே இல்லாமல் முழுவதுமாக வந்துவிடும்.

டிப் 10
வீட்டில் கரண்ட் இல்லாத சமயங்களில் மெழுகுவர்த்தி ஏற்றி வைக்கும் பொழுது, மெழுகுவர்த்தியின் பின்புறம் ஒரு முகம் பார்க்கும் கண்ணாடியை வைத்து கொள்ளுங்கள். உங்களுடைய வெளிச்சம் இரண்டு மடங்காக வீடு முழுவதும் பரவும்.

- Advertisement -