பார்லருக்கு சென்று ஃபேஷியல் செய்ய நேரமோ, பணமோ வீணடிக்க முடியாதவர்கள், வீட்டிலேயே இத மட்டும் பண்ணுங்க வேற எதையுமே தேட வேண்டாம்!

potato-face-pack_tamil
- Advertisement -

நம்முடைய முகம் எப்போதுமே இளமையாக வைத்திருக்க, தினமும் சோப்பு மட்டும் போட்டு குளித்தால் போதுமா? மென்மையான சருமத்தை எந்த பராமரிப்பும் செய்யாவிடில் விரைவிலேயே முதுமை தட்டிவிடும். அது மட்டும் அல்லாமல் முகம் சுருங்க ஆரம்பித்து, தொங்கிப் போய்விடும். இது போன்ற விஷயங்களில் இருந்து தப்பித்து, நம்முடைய சருமத்தை மேலும் மெருகேற்ற ஃபேஷியல் செய்து கொள்வது வழக்கம். இப்படி பேசியல் செய்து கொள்ள பார்லருக்கு தான் போக வேண்டும் என்கிற அவசியமே கிடையாது.

நம் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து நமக்கு நாமே ஃபேஷியல் செய்து கொள்ளலாம். அவசரமாக வெளியே செல்ல வேண்டும் என்று நினைப்பவர்கள் மற்றும் அதிக அளவு நேரம் மற்றும் பணத்தை செலவு செய்ய விரும்பாமல் வீட்டிலேயே எளிதாக ஃபேஷியல் செய்து கொள்ள வேண்டும் என்கிற ஆர்வம் கொண்டவர்களுக்கு இந்த ஒரு அழகு குறிப்பு ரொம்பவே பயனுள்ளதாக இருக்கும். முதலில் ஒரு சிறிய அளவிலான உருளைக்கிழங்கு ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். அதன் மேல் தோலை நீக்கிவிட்டு நன்கு கழுவி கொள்ளுங்கள்.

- Advertisement -

பின்னர் இதை தேங்காய் துருவலில் இட்டு நன்கு துருவி எடுத்துக் கொள்ளுங்கள். துருவிய இந்த உருளைக்கிழங்கு துருவலுடன் ரெண்டு டீஸ்பூன் அளவிற்கு கெட்டியான தயிரை சேர்த்து கலந்து கொள்ளுங்கள். தயிருடன் அரை ஸ்பூன் அளவிற்கு மஞ்சள் தூள் சேர்த்துக் கொள்ளுங்கள். இவற்றுடன் நீங்கள் பேபி ஆயில் அல்லது ஆலிவ் ஆயில் 4 சொட்டுக்கள் சேர்த்துக் கொள்ளுங்கள். அப்படி எதுவும் இல்லை என்றால் நீங்கள் தேங்காய் எண்ணெய் நான்கு சொட்டுகள் சேர்க்கலாம்.

பின்னர் உங்களிடம் தேன் இருந்தால் அரை ஸ்பூன் சேர்த்துக் கொள்ளலாம், இல்லை என்றால் விட்டுவிடலாம். இவற்றுடன் கடைசியாக அரை மூடி அளவிற்கு எலுமிச்சை சாறு பிழிந்து சேர்த்துக் கொள்ளுங்கள். கடைசியாக விட்டமின் ஈ கேப்ஸ்யூல் இருந்தால் அதையும் சேர்த்துக் கொள்ளுங்கள். அப்படி உங்களிடம் இல்லை என்றால் நீங்கள் இதை ஸ்கிப் செய்து கொள்ளுங்கள். இப்போது இதை ஒரு நைஸ் பேஸ்ட்டாக நன்கு ஸ்பூனால் அடித்து வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் இதை முகம் முழுவதும் கெட்டியாக தடவி அப்ளை செய்து கொள்ள வேண்டும்.

- Advertisement -

முகம் மட்டுமல்லாமல் கழுத்து பகுதிகளிலும் தடவிக் கொள்ளுங்கள். கழுத்து மற்றும் முகம் ஒரே மாதிரியான ஈவன் டோனில் இருக்க, இந்த ஒரு ஃபேஸ் பேக் ரொம்பவே உபயோகமாக இருக்கும். உருளைக்கிழங்கில் இருக்கும் சத்துக்கள் நம்முடைய சருமத்தை வறண்டு போகாமல் எப்பொழுதும், ஈரப்பதத்துடன் தக்க வைத்துக் கொள்ளும். தயிர் மற்றும் தேன் சிறந்த ஒரு மாய்ஸ்ரைசராக நம்முடைய சருமத்திற்கு செயல்பட்டு முக துவாரங்களை இறுக செய்து, இளமையை தக்க வைத்து கொள்ள உதவுகிறது. மேலும் நீங்கள் சேர்த்த எண்ணெய் முகத்தில் இருக்கும் தழும்புகளை அகற்றி, முகப்பருக்கள், மருக்கள், கரும்புள்ளிகள் போன்றவற்றை நீக்கும்.

இப்படி இதில் சேர்க்கப்பட்டுள்ள ஒவ்வொரு பொருட்களுக்கும் ஒவ்வொரு குணாதிசயங்கள் உண்டு. இவை அனைத்தும் ஒன்றாக கலந்து நீங்கள் உங்களுடைய முகத்திற்கு ஃபேஸ் பேக் போல போட்டுக் கொள்ள வேண்டும். பின்னர் 20 நிமிடம் கழித்து லேசாக மசாஜ் செய்துவிட்டு ஈரமான துணியால் துடைத்து எடுத்துக் கொள்ளுங்கள். இந்த ஃபேஸ் பேக் போட்ட பிறகு நீங்கள் பவுடர் அல்லது சோப் எதுவும் பயன்படுத்தக் கூடாது. ஒரு நாள் முழுவதும் அப்படியே விட்டுவிடுங்கள். மறுநாள் நீங்கள் பார்த்தால் அவ்வளவு ஜொலிப்பாக ஜொலிப்பீர்கள். உங்கள் முகத்தில் இறந்த செல்கள் நீங்கி, புதிய செல்கள் உருவாகி இருக்கும். கருமை அகன்று நல்ல ஒரு வெண்மை நிறத்தை கொடுக்கும்.

- Advertisement -