- Advertisement -
Homeசமையல் குறிப்புகள்இந்த ஒரு பொடியை வீட்டில் தயார் செய்து கொள்ளுங்கள். இனிமேல் பஜ்ஜி, போண்டா மாவை கடைகளில்...

இந்த ஒரு பொடியை வீட்டில் தயார் செய்து கொள்ளுங்கள். இனிமேல் பஜ்ஜி, போண்டா மாவை கடைகளில் வாங்க வேண்டிய அவசியம் இருக்காது

- Advertisement -

மாலை நேரம் டீ குடிக்கும் வேலை வந்தவுடன் டீயுடன் சேர்த்து சாப்பிட ஏதேனும் பலகாரங்கள் இருந்தால் நன்றாக இருக்கும். அதிலும் குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் இருந்தால் நிச்சயம் டீயுடன் சேர்த்து சாப்பிட ஏதாவது ஒரு உணவை கேட்பார்கள். அவ்வாறு பலரும் கேட்கின்ற ஒரு ஸ்நாக்ஸ் என்னவென்றால் பஜ்ஜி, போண்டா இவை இரண்டில் ஏதாவது ஒன்று இருந்தால் அருமையாக இருக்கும் என்று தான் சொல்வார்கள். அந்த நேரத்தில் கடைக்குச் சென்று, பஜ்ஜி போண்டா மிக்சர் வாங்கி வந்து, அதன் பிறகு இதனை செய்ய வேண்டும் என்று யோசிக்கும் பொழுது நாம் அதனை மறுத்து விடுவோம். ஆனால் இந்த பஜ்ஜி, போண்டா மிக்சரை வீட்டிலேயே தயார் செய்து வைத்துக் கொண்டால் தேவைப்படும் நேரத்தில் எல்லாம் சுலபமாக பயன்படுத்திக் கொள்ளலாம். வாருங்கள் இந்த பஜ்ஜி, போண்டா மாவை எப்படி தயார் செய்வது என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:
கடலை மாவு – ஒரு கப், அரிசி மாவு – கால் கப், காஷ்மீரி மிளகாய்த்தூள் – 5 ஸ்பூன், பெருங்காயத்தூள் – கால் ஸ்பூன், மஞ்சள் தூள் – கால் ஸ்பூன், உப்பு – ஒரு ஸ்பூன்.

- Advertisement -

செய்முறை:
முதலில் ஒரு பெரிய கிண்ணத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். அதன் மீது மாவு சல்லடையை வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதில் ஒரு கப் கடலை மாவு சேர்த்து நன்றாக சலித்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதே சல்லடையில் கால் கப் அரிசி மாவையும் சேர்த்து சலித்து எடுக்க வேண்டும்.

பின்னர் அதனுடன் 5 ஸ்பூன் மிளகாய்தூள், ஒரு ஸ்பூன் உப்பு, கால் ஸ்பூன் மஞ்சள் தூள், கால் ஸ்பூன் பெருங்காயத்தூள் இவற்றையும் சேர்த்து நன்றாக சலித்துக் கொள்ள வேண்டும். பின்னர் இவை அனைத்தையும் ஒரு கரண்டி வைத்து நன்றாக கலந்துவிட வேண்டும். பிறகு இதனை ஒரு காற்றுப் புகாத டப்பாவில் போட்டு மூடி வைத்துக் கொள்ளலாம். தேவைப்படும் நேரத்தில் எல்லாம் இதனை கலந்து பஜ்ஜி அல்லது போண்டா செய்து கொடுக்கலாம்.

- Advertisement -

பஜ்ஜி செய்வதற்கு முதலில் வெங்காயம், உருளைக்கிழங்கு, அல்லது வாழைக்காய் இவற்றை மெல்லியதாக அரிந்து கொள்ள வேண்டும். பின்னர் இந்த மாவை கொஞ்சம் எடுத்து அதனுடன் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு அடுப்பின் மீது ஒரு கடாயை வைத்து எண்ணெய் ஊற்றிக் கொள்ள வேண்டும். பின்னர் வெட்டி வைத்துள்ள வெங்காயம் அல்லது உருளைக்கிழங்கை இந்த பஜ்ஜி மாவில் தோய்த்து, எண்ணையில் சேர்த்து பொரித்து எடுக்க வேண்டும். ஒருமுறை இவ்வாறு செய்து பாருங்கள். கடையில் வாங்கும் அதே பஜ்ஜி மாவு பதத்திற்கு இதன் சுவையும் அவ்வளவு சூப்பராக இருக்கும். இனிமேல் கடைக்கு சென்று இந்த பஜ்ஜி மாவை வாங்க மாட்டீர்கள்.

சற்று முன்