கடையில் வாங்கிய ஹேர் கண்டிஷனரை முடிக்கு பயன்படுத்தினால் முடி நிறைய கொட்டுதா? வீட்டிலேயே பெஸ்ட் கண்டிஷனர் தயாரிப்பது எப்படி?

hair7
- Advertisement -

சில பேருக்கு கடையில் வாங்கிய ஹேர் கண்டிஷனரை தலைக்கு பயன்படுத்தினால் முடி கொட்ட தொடங்கி விடும். வீட்டிலேயே சில பொருட்களை வைத்து நம் கையாலேயே ஹேர் கண்டிஷனர் எப்படி தயாரிப்பது என்பதை பற்றி தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். இந்த ஹேர் கண்டிஷனரை நீங்களே செய்து ஒரு பாட்டிலில் ஸ்டோர் செய்து வைத்துக் கொண்டால், கடையில் வாங்கிய ஹேர் கண்டிஷனர் போலவே உங்களுக்கு நல்லதொரு ரிசல்ட் கிடைக்கும். நல்லதொரு வாசத்தையும் கொடுக்கும். இந்த ஹேர் கண்டிஷனரை தலைக்கு போட்டால் எண்ணெய் போட்டது போல பிசுபிசுப்பு இருக்காது. தலை முடி பளபளப்பாக சைனிங்காக அழகாக மாறும்.

இந்த ஹேர் கண்டிஷனர் தயார் செய்ய தேவையான பொருட்கள் ஆல்லோவேரா ஜெல் – 1 டேபிள் ஸ்பூன், ரோஸ் வாட்டர் – 2 டேபிள் ஸ்பூன், வெஜிடபிள் கிளசரின் (vegetable glycerine for hair) – 1/4 ஸ்பூன், ரோஸ் எஸ்ஸென்சியல் ஆயில் (rose essential oil for hair) – 5 சொட்டு.

- Advertisement -

இந்த கண்டிஷனர் தயார் செய்ய தேவையான நான்கு பொருட்களையும் வாங்கும் போது கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். அதாவது அலோவேரா ஜெல்லில், கலர் வாசனை தீவிரவியம் சேர்க்காமல் இருக்க வேண்டும். ரோஸ் வாட்டரை வாங்கும்போது மிகவும் மலிவாக கிடைக்கும் ரோஸ்வாட்டரை தவிர்த்து விடுங்கள். கிளிசரின் மற்றும் ரோஸ் எசன்சியல் ஆயில் ஆன்லைனில் நமக்கு சுலபமாக கிடைக்கின்றது.

ஒரு சிறிய பவுலை எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் அலோவேரா ஜெல், ரோஸ் வாட்டர், வெஜிடபிள் கிளசரின், ரோஸ் எசன்ஷியல் ஆயில், இந்த 4 பொருட்களையும் மேலே சொன்ன அளவுகளில் போட்டு ஒரு ஸ்பூனை வைத்து நன்றாக அடித்து கலக்கினால் ஒரு ஜெல் நமக்கு தயாராக கிடைத்திருக்கும். இந்த ஜெல்லை கண்ணாடி பாட்டிலில் ஸ்டோர் செய்து பிரிட்ஜில் வைத்தால் ஒரு மாதம் வரை கெட்டுப் போகாது.

- Advertisement -

தலைக்கு குளித்து முடித்துவிட்டு தலையை நன்றாக துவட்டி முக்கால் பாகம் தலை காய்ந்த பின்பு, தலையை லேசாக சிக்கு எடுத்து விட்டு அதன் பின்பு இரண்டு சொட்டு நீங்கள் தயார் செய்து வைத்திருக்கும் இந்த கண்டிஷனரை உள்ளங்கையில் போட்டு நன்றாக தேய்த்து அப்படியே தலைக்கு மேல் பக்கம் எண்ணெய் தடவுவது போல தடவி விட்டு விடுங்கள். அவ்வளவு தான்.

தலை முடி நன்றாக காய்ந்ததும் உங்களுடைய முடி அவ்வளவு சில்கியாக ஷைனிங்காக பள பளப்பாக இருக்கும். எண்ணெய் தடவியது போன்ற தோற்றத்தை நிச்சயம் கொடுக்காது. தலையில் பிசுபிசுப்பு இருக்காது. இந்த கண்டிஷனர் உங்களுடைய முடிக்கு எந்த ஒரு பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது. அதே சமயம் இதில் ரோஸ் எசன்ஷியல் ஆயில் சேர்த்திருப்பதால் உங்கள் முடி அவ்வளவு வாசமாகவும் இருக்கும். உங்களுக்கு இந்த குறிப்பு பிடிச்சிருந்தா ஒருமுறை உங்க வீட்ல ட்ரை பண்ணி பாருங்க. சிரமம் பார்க்காமல் நம்முடைய தலைமுடிக்கு நாம் எடுக்கக்கூடிய அக்கறை நம்முடைய அழகை நீண்ட நாட்களுக்கு பராமரிக்கும்.

- Advertisement -