கமகமக்கும் வாசத்துடன் குழம்பு மிளகாய் தூளை வீட்டிலேயே பக்குவமாக அரைப்பது எப்படி? இந்தப்பொடி இருந்தா போதுங்க. அசைவ குழம்பு, சைவ குழம்பு, வறுவல், எல்லாமே ஈசியா செஞ்சிடலாம்.

milagaithul
- Advertisement -

குழம்பு மிளகாய் தூளை பக்குவமாக எந்தெந்த பொருட்களை சேர்த்து, எந்தெந்த அளவுகளில் எப்படி அரைப்பது என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். கடைகளில் வாங்கும் குழம்பு மிளகாய் தூளை போலவே இந்தப் பொடி வாசமாகவும் சுவையாகவும் இருக்கும். அதே சமயம் 6 மாதம் வரை இந்தப் பொடியை இப்படி அரைத்தால் கெட்டுப் போகாமலும் இருக்கும். சுவையான குழம்பு மிளகாய் தூள் அரைப்பது எப்படி. தெரிஞ்சிக்கலாம் வாங்க.

milagaithul1

முதலில் இந்த குழம்பு மிளகாய் தூள் அரைப்பதற்கு எந்தெந்த பொருட்கள் எந்தெந்த அளவுகளில் தேவை என்பதை பார்த்துவிடுவோம். மிளகாய் – 1/2 கிலோ, வர மல்லி – 1/2 கிலோ, சீரகம் – 100 கிராம், மிளகு – 50 கிராம், கடலைப் பருப்பு – 50 கிராம், உளுந்தம்பருப்பு – 50 கிராம், துவரம்பருப்பு – 50 கிராம், இட்லி அரிசி – 50 கிராம், வெந்தயம் – 25 கிராம், கடுகு – 25 கிராம், கறிவேப்பிலை – 1 கைப்பிடி அளவு, விரலிமஞ்சள் – 25 கிராம். இந்தப் பொருட்களையெல்லாம் கடையில் வாங்கும்போதே இந்த அளவுகளில் வாங்கி வைத்துக்கொள்ளுங்கள்.

- Advertisement -

இப்போது இந்த எல்லாப் பொருட்களையும் கடாயில் ஒவ்வொரு பொருட்களாக சேர்த்து வறுத்து எடுக்க வேண்டும். எண்ணெய் ஊற்றி எல்லாம் வறுக்கக் கூடாது. டிரையாகத்தான் வறுக்க வேண்டும். ஒரு கனமான கடாயை அடுப்பில் வைத்து கொள்ளுங்கள். சீரகத்தை போட்டு முதலில் வறுக்க வேண்டும். சீரகம் கருதிவிடக்கூடாது. சீரகத்தை கடாயில் போட்டு வறுத்து, சீரகம் நன்றாக சூடானதும் கடாயில் இருந்து உடனே இன்னொரு தட்டுக்கு மாற்றி விடுங்கள்.

அடுத்தபடியாக மிளகை கடாயில் போட்டு மிளகு ஒன்றும் இரண்டுமாக பொரிந்து வெடித்து வரும் போதே இதை வேறொரு தட்டிற்கு மாற்றிவிட வேண்டும். அடுத்தபடியாக கடலை பருப்பு, உளுந்தம் பருப்பு, துவரம் பருப்பு, இந்த மூன்று பருப்புகளையும் ஒவ்வொன்றாக கடாயில் சேர்த்து பொன்னிறம் வரும் வரை சிவக்க வைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அடுத்தபடியாக இட்லி அரிசியை போட்டு பொரி அரிசி வருப்பது போல வறுத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். வெந்தயத்தை சேர்த்து வெந்தயம் பொன்னிறம் வரும் வரை வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும். அடுப்பை அணைத்துவிடுங்கள். கடாயில் நன்றாக சூடு இருக்கும். அதில் கடுகை போட்டு படபடவென பொரிய விட்டு அதையும் தனியாக ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

மீண்டும் அடுப்பை பற்ற வைத்துக் கொள்ளுங்கள். ஒரு கொத்து கறிவேப்பிலையை கடாயில் போட்டு மொறுமொறுவென்று வரும் அளவிற்கு வறுத்துக் கொள்ள வேண்டும். விரலி மஞ்சளையும் கடாயில் போட்டு 2 நிமிடங்கள் சூடு செய்து எடுத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

kashthuri-manjal

அடுத்தபடியாக வரமிளகாயை கொஞ்சம் கொஞ்சமாக கடாயில் போட்டு சூடு செய்த எடுத்துக் கொள்ள வேண்டும். இறுதியாக வர மல்லியை கொஞ்சம் கொஞ்சமாக கடாயில் போட்டு சூடு செய்து எடுத்துக் கொள்ள வேண்டும். வரமல்லியும் மிளகாயும் அதிகமாக சிவந்து விடக்கூடாது. பார்த்துக் கொள்ளுங்கள்.

masala podi

மேலே கொடுக்கப்பட்டுள்ள பொருட்களில் வறுக்கும் போது எந்த பொருள் கருகி விட்டாலும் குழம்பு மிளகாய் தூளின் நிறமும் மாறிவிடும். சுவையும் மாறிவிடும். பக்குவமாக வறுத்து எடுக்க வேண்டும். இந்த எல்லா பொருட்களையும் வெயிலில் இரண்டு மணி நேரம் உலர வைத்து விட்டு, ரைஸ் மில்லில் கொடுத்து நைசாக அரைத்து வாங்கிக்கொள்ளலாம். அப்படி இல்லை என்றால் வீட்டு மிக்ஸியில் நைஸாக அரைத்து சலித்து எடுத்து ஸ்டோர் செய்து வைத்துக்கொள்ளலாம். 6 மாதம் வரை இந்த குழம்பு மிளகாய் தூள் கெட்டுப் போகாது.

kuzambu7

காரக் குழம்பு, அசைவ குழம்பு, வறுவல், பொரியல், சாம்பார், எதற்கு வேண்டுமென்றாலும் இந்த பொடியை போட்டு நீங்கள் சமைத்துக் கொள்ளலாம். 1 ஸ்பூன் இந்த பொடியை போட்டு குழம்பு வைத்தால் இதனுடைய வாசம் அத்தனை அட்டகாசமாக இருக்கும். உங்களுக்கு இந்த குறிப்பு பிடிச்சிருந்தா உங்க வீட்ல ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -