இளநரையை வரவிடாமல் தடுக்க இதைவிட பெஸ்ட் எண்ணெய் வேறு இருக்கவே முடியாது.

white-hair
- Advertisement -

இளநரை என்பது நிறைய பேருக்கு இப்போது ஒரு தொந்தரவாக உள்ளது. சீக்கிரம் வயதான தோற்றத்தை கொடுக்கக்கூடிய இந்த இளநரையை போக்குவதற்கு ஒரு சுலபமான எண்ணெயை எப்படி தயார் செய்வது என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இந்த எண்ணெயை தினமும் தலையில் வைத்து வந்தால் இளநரை வரவே வராது. இளநரை வந்தவர்களுக்கு கூடிய சீக்கிரத்தில் நரைமுடி கருப்பாக மாறிவிடும்.

இளநரையை தடுக்க, வெள்ளை முடியை கருப்பாக மாற்ற, நாம் வீட்டிலேயே இயற்கையான முறையில் நெல்லிக்காய் எண்ணெய் எப்படி தயார் செய்வது என்பதைப்பற்றித் தான் தெரிந்து கொள்ளப் போகின்றோம். 10 லிருந்து 15 பிரஷ்ஷாக இருக்கும் நெல்லிக்காய்களை எடுத்து கொள்ள வேண்டும். நெல்லிக்காயை வெட்டி அதில் இருக்கும் கொட்டைகளை மட்டும் தனியாக எடுத்து விடுங்கள்.

- Advertisement -

துண்டு துண்டாக நறுக்கிய நெல்லிக்காய்களை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்து அதை வடிகட்டி நெல்லிக்காய் சாறை மட்டும் தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு 100ml நெல்லிக்காய் சாறு கிடைத்தால் அதே 100ml அளவு மரச் செக்கு தேங்காய் எண்ணெயை எடுத்துக் கொள்ளுங்கள்.

அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் நெல்லிக்காய் சாறு, தேங்காய் எண்ணெய், இந்த இரண்டையும் ஒரே அளவுகளில் ஊற்றி நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். நெல்லிக்காய் சாறு எண்ணெயில் சேர்த்து இருப்பதால் இது சிடசிடப்போடு கொதிக்கத் தொடங்கும். நன்றாக கொதித்து சிட சிடப்பு அடங்கிய உடன், அடுப்பை சிம்மில் வைத்து விடுங்கள். எண்ணெய் நன்றாக காய்ந்து மேலே பிரவுன் கலரில் வந்த உடன், சிட சிடப்பு அடங்கி வந்தவுடன், உடனடியாக அடுப்பிலிருந்து இறக்கி விட வேண்டும். ஏனென்றால் இந்த எண்ணெயை உடனடியாக கருகி போவதற்கு வாய்ப்புகள் உள்ளது. கருகிப் போய் விட்டால் எண்ணெய் கருப்பு நிறமாக மாறிவிடும்.

- Advertisement -

காய்ச்சிய இந்த எண்ணெய் நன்றாக ஆறிய பின்பு வடிகட்டி ஒரு பாட்டிலில் ஸ்டோர் செய்து வைத்துக் கொண்டால், நமக்கு தேவையான நெல்லிக்காய் எண்ணெய் தயார். இந்த எண்ணெயை தினமும் தலையில் எண்ணெய் வைப்பது போல வைத்துக் கொண்டாலும் சரி, அல்லது வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாள் இந்த எண்ணெயை தலையில் வைத்து நன்றாக ஊறவைத்து தலைக்கு குளித்தாலும் சரி, அல்லது இரவு இந்த எண்ணெயை தலையில் வைத்துக்கொண்டு மறு நாள் காலை எழுந்து தலைக்கு குளித்தாலும் சரி, முடி உதிர்வு குறையும். முடி அடர்த்தியாக வளரும். இளநரை தள்ளிப்போகும். வெள்ளை முடி கருப்பாக மாறும். இத்தனை நன்மைகளையும் நமக்கு கொடுக்க கூடிய இந்த நெல்லிக்காய் எண்ணெய் ரெசிபி உங்களுக்குப் பிடிச்சிருந்தா உங்க வீட்ல ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க.

பின் குறிப்பு: கட்டாயமாக இந்த நெல்லிக்காய் எண்ணெயை இரும்பு கடாயில் காய்ச்ச கூடாது என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். எண்ணெய் சிடசிடப்பு அடங்கி வந்ததும் உடனே எண்ணெயை அடுப்பிலிருந்து இறக்க வேண்டும். சரியாக காய்ச்சாமல் எண்ணெயை ஸ்டோர் செய்தால், இந்த எண்ணெய் சீக்கிரம் கெட்டுப் போவதற்கு வாய்ப்புகள் உள்ளது. எண்ணெயை காய்ச்சும்போது கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும்.

- Advertisement -