பிளாக் ஹெட்ஸ், ஒயிட் ஹெட்ஸை முகத்திலிருந்து சுலபமாக நீக்க வீட்டில் இருந்தபடியே PEEL OF MASK தயாரிப்பது எப்படி? இதற்கு வெறும் 3 பொருள் போதும்.

face11
- Advertisement -

கடைகளில் எத்தனையோ பீல் ஆஃப் மஸ்க் நமக்கு கிடைக்கிறது. ஆனால் அது அனைத்தும் விலை உயர்ந்ததாக இருக்கும். அதோடு மட்டுமல்லாமல் அதில் சேர்க்கக்கூடிய பொருட்கள் என்ன என்ன என்பது நமக்குத் தெரியாது. சருமத்திற்கு எந்த பாதிப்பும் வராமல் முகத்தில் இருக்கும் தேவையற்ற முடிகளை நீக்க, பிளாக் ஹெட்ஸ், ஒயிட் ஹெட்ஸை அகற்ற முகத்தை பொலிவாக மாற்ற வீட்டில் இருந்தபடியே சுலபமாக பீல் ஆஃப் மாஸ்க் எப்படி தயாரிப்பது என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

இந்த பீல் ஆஃப் மாஸ்க் தயாரிக்க நமக்கு தேவையான பொருட்கள் 3. ஜெலட்டின் பவுடர், பால், கஸ்தூரி மஞ்சள் தூள், அவ்வளவு தான். எல்லா டிபார்ட்மெண்டல் ஸ்டோரில் ஜெலட்டின் பவுடர் கிடைக்கின்றது. எந்த ஒரு ஃபிலேவர் கலக்காத, ப்ளைன் ஜெலட்டின் பவுடர் என்று கேட்டு வாங்கிக் கொள்ளுங்கள்.

- Advertisement -

ஒரு சிறிய கிண்ணத்தில் சூடாக நன்றாக காய்ச்சிய பால் 2 டேபிள்ஸ்பூன் எடுத்துக் கொள்ள வேண்டும். இதில் 1/4 ஸ்பூன் கஸ்தூரி மஞ்சள் தூளை போட்டுக் கலந்து உடனடியாக 1 டேபிள்ஸ்பூன் ஜெலட்டின் பவுடரை போட்டு கலக்க வேண்டும். பால் சூடாக இருந்தால்தான் ஜெலட்டின் பவுடர் கரையும். இல்லை என்றால் கரையாது. நன்றாக இந்த மூன்று பொருட்களையும் கலந்து வெதுவெதுப்பாக சூடு இருக்கும்போதே முகத்தில் மேல் பக்கத்தில் இருந்து கீழ் பக்கமாக அப்ளை செய்து கொள்ளுங்கள்.

அப்ளை செய்யும்போது ஜெலட்டின் பவுடர் ஆறிவிட்டால் உடனே பயப்படவேண்டாம். சுடு தண்ணீரின் மேலே வைத்து சூடு செய்தால், மீண்டும் அப்ளை செய்யும் பக்குவத்திற்கு வந்துவிடும்‌. ஓரளவுக்கு திக்காக இந்த ஜெலட்டின் ஜெல்லை முகத்தில் அப்பளை செய்துவிட்டு, நன்றாக காய வைக்க வேண்டும். அதன் பின்பு கீழ் பக்கத்திலிருந்து மேல் பக்கமாக உரித்த எடுக்கும்போது இது அப்படியே தோல் போல உரிந்து வந்துவிடும்.

- Advertisement -

நீங்கள் உரித்து எடுத்த அந்த தோலில் உங்களுடைய முகத்தில் இருக்கும் பிளாக் ஹெட்ஸ் வொயிட் ஹெட்ஸ் அனைத்தும் ஒட்டிக் கொண்டு வந்துவிடும். சில தேவையற்ற சிறிய முடிகள் கூட இதன் மூலம் நீங்கும். ஆனால் முகத்தில் முடிகள் மீண்டும் வளரத்தான் செய்யும். இதில் நாம் கஸ்தூரி மஞ்சள் சேர்த்து இருப்பதால் காலப் போக்கில் முடி வளர்ச்சி குறையும் அவ்வளவு தான்.

வாரத்தில் ஒருநாள் மட்டும் இந்த பேக் பயன்படுத்திக் கொள்ளுங்கள். தினம்தோறும் இந்த பேக்கை போட்டு பீல் செய்யக் கூடாது. தேவைப்பட்டால் 15 நாட்களுக்கு ஒரு முறை கூட இந்த பேக்கை பயன்படுத்தலாம். அடிக்கடி பயன்படுத்தக்கூடாது. ட்ரை பண்ணி பாருங்க. நிச்சயமாக நல்ல ரிசல்ட் கிடைக்கும்.

- Advertisement -