தலை முடியை உதிராமல் வளர்ப்பதற்கு இதை விட பெஸ்ட் ஷாம்பு வேறு இருக்கவே முடியாது. 100% கலப்படமே இல்லாத ஹோம் மேட் ஷாம்பு.

hair9
- Advertisement -

தலைமுடியை உதிராமல் அடர்த்தியாக வளர வைப்பதற்கு எத்தனையோ வழிகள் உள்ளது. ஆனால் இன்று நாம் பார்க்கக்கூடிய இந்த குறிப்பு முழுமையாக இயற்கையான பொருட்களை வைத்து தயாரிக்கக்கூடிய ஹோம் மேட் ஷாம்பு குறிப்பு. இதில் பக்கவிளைவுகள் வருவதற்கு வாய்ப்பே இல்லை. பெரும்பாலும் எல்லோருடைய தலைக்கும் செட்டாகர மாதிரியான ஒரு குறிப்பு தான் இது. இந்த குறிப்பை பின்பற்றி தலைக்கு குளித்து வந்தாலே தலைமுடி பிரச்சனையில் பாதி குறைந்துவிடும். உங்களுக்கும் இந்த இன்ட்ரஸ்டிங்கான ஷாம்பூ ரெசிபியை தெரிந்து கொள்ள ஆசை இருக்கா. வாங்க பார்க்கலாம்.

ஒரு சின்ன கிண்ணத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் இடித்த பூந்திக்கொட்டை 4, நெல்லிமுள்ளி என்று சொல்லப்படும் காய்ந்த நெல்லிக்காய் – 10, சீயக்காய் – 8 துண்டுகள், வெந்தயம் – 1 டேபிள் ஸ்பூன், இந்த பொருட்களை எல்லாம் போட்டு இது மூழ்கும் அளவிற்கு தண்ணீரை ஊற்றிக் கொள்ள வேண்டும். கொஞ்சம் அதிகமாகவே தண்ணீரை ஊற்றிக் கொள்ளலாம். அதாவது இரண்டு சொம்பு அளவு தண்ணீரை ஊற்றி மூடி போட்டு இரவு முழுவதும் இதை ஊறவிட்டு விடுங்கள்.

- Advertisement -

மறுநாள் காலை இந்த கிண்ணத்தை அப்படியே அடுப்பில் வைத்து, தண்ணீரில் ஊறியிருக்கும் பொருட்களை அப்படியே கொதிக்க வைக்க வேண்டும். 10 நிமிடங்கள் மிதமான தீயில் இந்த பொருட்கள் அனைத்தும் அந்த தண்ணீரிலேயே வேகட்டும். பத்து நிமிடம் கழித்து அடுப்பை அணைத்து விடுங்கள். ஒரு மூடி போட்டு அப்படியே இந்த தண்ணீரை ஆறவிடுங்கள்.

நாம் சேர்த்திருக்க கூடிய பொருட்களின் அனைத்து சத்தும் அந்த தண்ணீரில் இறங்கியிருக்கும். இப்போது இதை ஒரு வெள்ளை காட்டன் துணியில் ஊற்றி நன்றாக புழிந்து வடிகட்டிக் கொள்ளுங்கள். நேச்சுரல் ஷாம்பு தயார். இதை தான் தலைக்கு அப்ளை செய்து குளிக்கப் போகின்றோம். தேவையான அளவு ஷாம்புவை எடுத்து தலைக்கு குளித்துக் கொள்ளுங்கள். மீதும் இருக்கும் ஷாம்புவை ஐஸ் ட்ரேவில் ஊற்றி, ஃப்ரீசரில் வைத்தால் ஐஸ் கட்டிகளாக மாறிவிடும். அந்த ஐஸ் க்யூபுகளை ஒரு கண்டெய்னரில் போட்டு மீண்டும் ப்ரீசரில் ஸ்டோர் செய்தால், தேவைப்படும் போது எடுத்து கிண்ணத்தில் போட்டு, ஐஸ் கட்டிகளை உருகவிட்டு மீண்டும் தலைக்கு குளிக்க பயன்படுத்திக் கொள்ளலாம்.

- Advertisement -

இயற்கையான பொருட்களில் கிடைத்த ஷாம்பு இது. இந்த ஷாம்பூவை தலைக்கு போட்டு குளித்தால் தலையில் சீயக்காய் தூள் ஒட்டிக் கொள்ளும் என்ற கவலை கூட இருக்காது. ஈசியாக தலைக்கு குளிக்கலாம். அதே சமயம் பக்க விளைவுகள் இருக்காது. முடி நன்றாக வளரும். முடி கொட்டுவது நிற்கும்.

குறிப்பாக இளநரையை தடுப்பதற்கு இதில் ட்ரை ஆம்லா என்று சொல்லப்படும் நெல்லிமுள்ளிகளை சேர்த்து இருக்கின்றோம். இந்த குறிப்பை தொடர்ந்து பின்பற்றி வந்தால் ஆரோக்கியமான முடி நிரந்தரமாக இருக்கும். இந்த குறிப்பு உங்களுக்கு பிடிச்சிருந்தா மிஸ் பண்ணாம உங்க வீட்ல ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -