ஒவ்வொரு முறை முகம் கழுவும் போதும் உங்களுடைய முகம் இப்படி முழுமையாக சுத்தமாக, வெள்ளையாக மாற இந்த சோப் போதும்.

face15
- Advertisement -

என்னதான் விதவிதமாக பேக்குகளை நம்முடைய முகத்திற்கு பயன்படுத்தினாலும் சில பேருக்கு சோப்புப் போட்டு முகத்தைக் கழுவினால் தான் ஒரு திருப்தி கிடைக்கும். ஆனால் கடையில் இருந்து வாங்கக்கூடிய எல்லா சோப்பும் நம்முடைய முகத்தை சுத்தமாக சரியான முறையில் பராமரிக்குமா என்று கேட்டால் நிச்சயம் கிடையாது. நம்முடைய சருமத்திற்கு அடியில் தங்கியிருக்கக் கூடிய எல்லா பிரச்சினைகளையும் இழுத்து நீக்கக்கூடிய சூப்பரான ஒரு சோப்பை நம்முடைய வீட்டிலேயே எப்படி தயார் செய்வது என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

இந்த சோப்பை மிக மிக சுலபமாக தயார் செய்து கொள்ளலாம். இந்த சோப் தயாரிக்க கண்ணாடி போல இருக்கக்கூடிய சோப் – 1, உருளைக்கிழங்கு சாறு – 1/2 கப், காய்ச்சாத திக்கான பால் – 1/2 கப், பசும்பால் கிடைத்தால் மிகவும் நல்லது. கண்ணாடி போல இருக்கும் சோப்பில் எது வேண்டும் என்றாலும் பயன்படுத்திக் கொள்ளலாம். பியர்ஸ் சோப்பு இருக்குது அல்லவா அதுபோல. பியர்ஸ் சோப்பில் எந்த கலர் சோப்பை வேண்டும் என்றாலும் நீங்கள் இதற்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

- Advertisement -

ஒரு உருளைக்கிழங்கை சுத்தமாக கழுவி விட்டு, சிறிய துண்டுகளாக வெட்டி மிக்சியில் போட்டு அரைத்து பிழிந்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். உருளைக்கிழங்கு சாறு எவ்வளவு இருக்கிறதோ அதே அளவுக்கு காய்ச்சாத பால் எடுத்துக் கொள்ளுங்கள்.

முதலில் ஒரு சிறிய கிண்ணத்தில் காய்ச்சாத பால் உருளைக்கிழங்கு சாறு இந்த இரண்டு பொருட்களையும் ஊற்றி இதை டபுள் பாய்லிங் மெத்தடில் 5 லிருந்து 7 நிமிடங்கள் வரை லேசாக சூடு செய்ய வேண்டும். சூடு செய்த இந்த இரண்டு பொருட்களையும் தனியாக எடுத்து ஒரு கிண்ணத்தில் அப்படியே வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அதன்பின்பு எடுத்து வைத்திருக்கும் கண்ணாடி சோப்பை சிறிய துண்டுகளாக வெட்டி ஒரு சிறிய கிண்ணத்தில் போட்டு இதையும் டபுள் பாய்லிங் செய்ய வேண்டும். இப்படி டபுள் பாய்லிங்மெதடில் சோப்பு சூடாகும் போது தண்ணீராக கரைய தொடங்கும். அப்போது ஏற்கனவே கிண்ணத்தில் சூடு செய்து வைத்திருக்கும் பால் உருளைக்கிழங்குச் சாரையும் இந்த சோப்பில் ஊற்றி கைவிடாமல் கலந்து கொண்டே இருக்க வேண்டும். முழுமையாக கரையும் வரை.

அதன் பின்பு சோப் உருளைக்கிழங்கு சாறு பால் சேர்த்த இந்த கலவையை எடுத்து ஒரு ஓரமாக வைத்துவிட்டு ஒரு ஸ்பூனை வைத்து கலந்து கொண்டே இருக்க வேண்டும். இதனுடைய சூடு முழுமையாக ஆறிய பின்பு, இதை ஒரு பிளாஸ்டிக் டப்பா அல்லது சில்வர் டப்பாவில் ஊற்றி அப்படியே ஃப்ரீசரில் வைத்து விடுங்கள். இரண்டு நாள் இந்த கலவை ஃப்ரீசரியிலேயே இருக்கவேண்டும்.

இரண்டு நாள் கழித்து கிண்ணத்தை எடுத்து கவிழ்ந்து போட்டால் உங்களுக்கு சோப் சூப்பராக கிடைத்துவிடும். ஒரு மாதம் வரை இந்த சோப் ரூம் டெம்பரேச்சரிலேயே வைத்து பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த சோப்பை முகத்திற்கு போடலாம். உடம்பிற்கும் போடலாம். எப்போதும் போல சோப்பை பயன்படுத்தி எப்படி முகம் கழுவுவீங்கலோ அப்படித்தான் கழுவவேண்டும். சோப்பை முகத்தில் போட்டு 2 நிமிடங்கள் மசாஜ் செய்து விட்டு அதன் பின்பு முகம் கழுவும் போது சூப்பரான ரிசல்ட் கிடைக்கும். நீங்க வேணும்னா இப்படி ஒரு முறை உங்க வீட்ல சோப் தயார் செய்து பயன்படுத்திப்பாருங்களேன். இந்த சோப்பை பிறகு விடவே மாட்டீர்கள்.

- Advertisement -