வெறும் 10 ரூபாய் செலவில் நம் வீட்டிலேயே வாஷிங் மெஷினில் துணி துவைக்க லிக்விட் தயார் செய்துவிடலாம். இந்த ஐடியா மட்டும் தெரிந்தால் போதும்.

washing-liquid
- Advertisement -

பொதுவாகவே வாஷிங்மெஷினில் துணி துவைக்க வேண்டும் என்றால் அதில் சேர்ப்பதற்கு கடைகளில் விற்கும் லிக்விடை வாங்கி பயன்படுத்துவோம். ஏனென்றால் பவுடரை வாஷிங் மிஷினில் போட்டால் துணிகளில் வெள்ளை வெள்ளையாக திட்டுக்கள் ஒட்டிக் கொள்கிறது. பவுடர் தண்ணீரில் கரைய கொஞ்சம் நேரம் எடுக்கிறது. அதனால் லிக்விட் பெஸ்ட் என்று சொல்லுவார்கள். ஆனால் பவுடரை கம்பேர் செய்யும் போது, லிக்விடின் விலை கொஞ்சம் அதிகம். பவுடர் வாங்கி வைத்தால் நீண்ட நாட்களுக்கு வரும். லிக்விடை வாங்கி வைத்தால் நீண்ட நாட்களுக்கு வராது. இதில் நடுத்தர வர்கத்தினருக்கு பட்ஜெட் பிரச்சனை. இந்த பிரச்சனையிலிருந்தும் தப்பிக்கணும். குறைந்த செலவில் லிக்யிடையும் தயார் செய்யணும். அதே சமயம் துணிகளும் வாசமாக இருக்கணும், அழுக்கும் சுத்தமாக போகணும், என்பதற்காக தான் இன்று ஒரு பயனுள்ள வீட்டுக்குறிப்பை தெரிந்து கொள்ள போகின்றோம்.

எளிமையான முறையில் வீட்டிலேயே வாஷிங் லிக்விட் தயார் செய்யும் முறை:
வெறும் பத்து ரூபாய் செலவு செய்து வாஷிங் மெஷின் லிக்விடை வீட்டிலேயே தயார் செய்வது எப்படி. இதற்கு நமக்கு முதலில் தேவைப்படக்கூடிய பொருள் 10 ரூபாய் பாக்கெட்டில் துணி துவைக்கும் பவுடர். எந்த பிராண்ட் தேவையோ வாங்கிக் கொள்ளுங்கள். ஏரியல், ஷர்ஃப், டைட் இப்படி நிறைய பிராண்ட் கடைகளில் கிடைக்கிறது.

- Advertisement -

ஒரு கடாயை அடுப்பில் வைத்து முதலில் இந்த பாக்கெட் பவுடரை பிரித்து அதில் கொட்டி விடுங்கள். இதோட 1 லிட்டர் அளவு தண்ணீரையும் ஊற்றிக் கொள்ளுங்கள். அடுத்து லெமன் ஜூஸ் 2 டேபிள் ஸ்பூன், உப்பு 1 ஸ்பூன், ஷாம்பு 1 ஸ்பூன் இந்த பொருட்களை எல்லாம் அந்த தண்ணீரில் ஊற்றி கலந்து அடுப்பை பற்ற வைத்து இந்த கலவையை ஒரு கரண்டியால் கலக்கி விட்டு, மிதமான தீயில் இதை கொதிக்க வைக்கவும்.

தண்ணீர் நன்றாக கொதித்து அந்த பவுடர் மெதுவாக கரைந்து விடும், ஒரு லிட்டர் தண்ணீர் ஆனது முக்கால் லிட்டர் தண்ணீர் அளவு வரை வந்ததும் அடுப்பை அணைத்து இதை நன்றாக ஆற வைத்து விடுங்கள். பிறகு இதை ஒரு பாட்டிலில் ஊற்றி நீங்கள் லிக்விட் போலவே பயன்படுத்திக் கொள்ளலாம். இதிலிருந்து ஒரு மூடி வாஷிங்மெஷினில் ஊற்றி துணிகளை துவைத்து பாருங்கள். நுரையும் நன்றாக வரும். அதேசமயம் அழுக்கும் சுத்தமாக போகும். இதில் ஷாம்பு சேர்த்து இருப்பதால் துணிகளில் இருந்து வீசக்கூடிய வாசமும் நல்ல நறுமணத்தை கொடுக்கும்.

- Advertisement -

நீங்கள் வெள்ளை துணிகளை துவைப்பதாக இருந்தால் அதற்காக இந்த லிக்விட் உடன் கொஞ்சம் படிகாரத் தூளை கலந்து வாஷிங்மெஷினில் ஊற்றி விட்டால் போதும். வெள்ளை துணிகள் எல்லாம் இன்னும் கொஞ்சம் கூடுதலான பளிச் நிறத்தை பெறும். வெள்ளை துணிகளில் இருக்கும் அழுக்கும் வாஷிங்மெஷினிலேயே சுத்தமாக நீங்கிவிடும் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.

இதையும் படிக்கலாமே: பூஜை பாத்திரங்கள் பளபளக்க அடிக்கடி பீதாம்பரி வாங்க வேண்டிய அவசியம் இனி இல்லை நம் வீட்டிலேயே எளிதாக தயார் செய்யலாம் எப்படி?

பத்து ரூபாய் செலவில் நாம் தயார் செய்த இந்த லிக்விட் கட்டாயம் ஏழு நாட்கள் வரை வரும். உங்களுடைய குடும்ப உறுப்பினர்கள் நான்கு பேர் அல்லது ஐந்து பேர் இருந்தால். நிறைய துணி இருக்கும் பட்சத்தில் அதற்கு ஏற்றது போல தேவைகள் மாறுபடும் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். எளிமையான இந்த சின்ன வீட்டு குறிப்பு உங்களுக்கு பிடிச்சிருந்தா முயற்சி செய்து பாருங்கள்.

- Advertisement -