பூஜை பாத்திரங்கள் பளபளக்க அடிக்கடி பீதாம்பரி வாங்க வேண்டிய அவசியம் இனி இல்லை நம் வீட்டிலேயே எளிதாக தயார் செய்யலாம் எப்படி?

pitambari-pooja-items
- Advertisement -

அடிக்கடி அதன் நிறத்தில் இருந்து மங்கிப் போய் கறுத்து காணப்படும் பூஜை பாத்திரங்களை சுத்தம் செய்வது கொஞ்சம் கடினமாக காரியமாகத் தான் இருக்கும். அதிலும் பித்தளை மற்றும் செம்பு பாத்திரங்களை கழுவி முடிப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிடும். கை வலிக்க தேய்த்து சுத்தம் செய்யக் கூடிய இந்த பூஜை பாத்திரங்களை ரொம்ப எளிதாக சுத்தம் செய்து கொடுக்கக் கூடிய ஒரு பவுடர் தான் பீதாம்பரி!

இந்த பீதாம்பரியை நாம் காசு கொடுத்து இனி வாங்க வேண்டிய அவசியம் இல்லை. நம் வீட்டிலேயே இப்படி எளிமையாக செய்து வைத்துக் கொள்ளலாம். பீதாம்பரி செய்வதற்கு தேவையான பொருட்கள் என்னென்ன? அதை எப்படி தயார் செய்வது? என்பதைத் தான் இந்த வீட்டு குறிப்பு பதிவின் மூலம் இனி நாம் தொடர்ந்து காண இருக்கிறோம்.

- Advertisement -

பீதாம்பரி பவுடர் தயாரிக்க தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு – ஒரு கப், சிட்ரிக் ஆசிட் – கால் கப், டிடர்ஜென்ட் பவுடர் – கால் கப், பேக்கிங் சோடா – கால் கப், தூள் உப்பு – கால் கப், ஃபுட் கலர் ரெட் – கால் ஸ்பூன்.

பீதாம்பரி பவுடர் தயாரிக்க செய்முறை விளக்கம்:
பீதாம்பரி பவுடர் தயாரிக்க முதலில் வீட்டில் இருக்கக் கூடிய ஏதாவது ஒரு மாவு பொருள் தேவை. கோதுமை மாவு, கடலை மாவு, மைதா மாவு, அரிசி மாவு என்று எந்த மாவாக இருந்தாலும் பரவாயில்லை. அதில் ஒரு கப் அளவிற்கு சரியாக அளந்து எடுத்து ஒரு மிக்சர் ஜாரில் சேர்த்துக் கொள்ளுங்கள். உதாரணத்திற்கு ஒரு கப் கோதுமை மாவு எடுத்துக் கொள்கிறோம் என்று வைத்துக் கொள்வோம்.

- Advertisement -

கோதுமை மாவுடன் சிட்ரிக் ஆசிட் கால் கப் அளவிற்கு தேவை. சிட்ரிக் ஆசிட் சூப்பர் மார்க்கெட்டுகளில் மிக மலிவான விலைகளில் கிடைக்கப் பெறுகிறது. இது எலுமிச்சையில் இருக்கக்கூடிய ஒரு முக்கிய அமிலம் ஆகும். பின்னர் இவற்றுடன் துணி துவைக்க பயன்படுத்தப்படும் டிடர்ஜென்ட் பவுடர் எந்த பிராண்டட் ஆக இருந்தாலும் பரவாயில்லை, அதில் கால் கப் அளவிற்கு சேர்த்துக் கொள்ளுங்கள்.

இதனுடன் சமையல் சோடா எனப்படும் ஆப்ப சோடா கால் கப் அளவிற்கு சேர்த்துக் கொள்ள வேண்டும். இதை பேக்கிங் சோடா என்பார்கள். இதனுடன் தூள் உப்பு கால் கப் அளவிற்கு சேர்த்துக் கொள்ளுங்கள். முதலில் சேர்த்த ஒரு கப் மாவுடன் மற்ற எல்லா பொருட்களையும் கால் கப் அளவிற்கு சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதனுடன் தேவைப்பட்டால் ஃபுட் கலர் சேர்த்துக் கொள்ளுங்கள். அப்பொழுது தான் நிறம் பார்ப்பதற்கு பீதாம்பரி போன்றே தோற்றமளிக்கும். இல்லை என்றால் வெள்ளையாக இருக்கும்.

இதையும் படிக்கலாமே:
புளிச்சு போன தயிர் கொஞ்சம் இருந்தா போதும் பழைய கொலுசு எல்லாமே புதுசா மின்னுமே! எப்படி?

ஃபுட் கலர் சேர்த்த பின்பு மிக்சியை இயக்கி நன்கு நைசாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். அரைத்து எடுத்த இந்த பவுடரை நன்கு பேன் காற்றில் ஆறவிட்டு விட்டு பின்னர் ஒரு டப்பாவில் ஸ்டோர் செய்து கொள்ளுங்கள். அவ்வளவுதான், பீதாம்பரி ரெடி! இப்பொழுது நீங்கள் உங்களுடைய செம்பு அல்லது பித்தளை பாத்திரத்தை எடுத்து இந்த பவுடரால் கைகளை வைத்தே துலக்கி பாருங்கள். அவ்வளவு சுலபமாக பளிச்சு பளிச்சுன்னு எல்லா பூஜை பாத்திரங்களும் புதுசு போலவே சுத்தமாகிவிடும்.

- Advertisement -