உங்களுடைய முகம் மட்டும் அழகாக இருந்தால் போதுமா? கால் பாதங்களுக்கு அழகு வேண்டாமா? பாதங்களையும் வெள்ளையாக, அழகாக வைத்துக்கொள்ள 10 நிமிடம் போதுமே!

pedicure
- Advertisement -

நிறையப் பேருக்கு முகம் அழகாக இருக்கும். அவர்களுடைய கால் பாதங்களை பார்க்கும்போது, இந்த முகத்திற்கு சொந்தமான கால் பாதமா இது! என்று கேள்வி கேட்கும் அளவிற்கு கருப்பு நிறமாக தோற்றமளிக்கும். நம்முடைய பர்சனாலிட்டி முழுவதும் அழகாக இருக்க வேண்டும் என்றால், முகம் மட்டும் அல்ல, கால் பாதங்களையும் நாம் அழகாக வைத்துக் கொள்ள வேண்டும். நம்முடைய அழகை மேலும் அழகு படுத்திக் காட்டுவது நம்முடைய கால் பாதங்களும், காலில் நாம் பயன்படுத்தும் செருப்பும் கூட ஒரு முக்கியமான அங்கம் தான்.

pedicure3

எவரொருவர் அழகான ஆடையை அணிந்து, அழகாக தலையை சீவி, அழகான காலணிகளை அணிந்து கொண்டிருக்கிறார்களோ, அவர்களது அழகு மேலும் அதிகரிக்கும் என்று கூட சொல்லலாம். இந்த இடத்தில் அழகு என்பது ஆடம்பரத்தை குறிப்பது அல்ல. சிம்பிளாக இருந்தாலும் சூப்பரா இருப்பாங்க அவர்களை குறிப்பது. நம் அழகை அதிகப்படுத்த பெரிய பெரிய, ஆபரணங்கள் கூட தேவை இருக்காது. சரி இப்போது உங்களுடைய பாதங்களை உடனடியாக சுத்தம் செய்வது எப்படி என்பதைப் பற்றி தெரிந்து கொள்ளலாமா?

- Advertisement -

முதலில் ஒரு அகலமான டப்பில் வெதுவெதுப்பான தண்ணீரை ஊற்றிக் கொள்ளுங்கள். குளிக்கின்ற கப்பில் நான்கிலிருந்து ஐந்து கப் அளவு வெதுவெதுப்பான தண்ணீர் எடுத்துக் கொண்டால் போதும். அதில் 2 ஸ்பூன் பேக்கிங் சோடா, 2 ஸ்பூன் கல்லுப்பு சேர்த்து நன்றாக கலக்கி விட்டு, உங்களது கால் பாதங்களை அந்த தண்ணீரில் மூழ்கும் படி, வைத்து 10 நிமிடங்கள் வரை ஊற வைக்க வேண்டும்.

pedicure1

அதன்பின்பு பல் தேய்க்கும் பிரஷ் உங்களிடம் இருந்தால், உங்களது கால் பாதம் மேல் பகுதி, நகக்கண் இந்த இடத்தில் எல்லாம் அந்த பிரஷ் கொண்டு தேய்த்து, அந்த தண்ணீரிலேயே அலசி கழுவி விடவேண்டும். அந்த பிரஷ்ஷில் கொஞ்சமாக ஷாம்புவை தொட்டுக் கொள்ளுங்கள். அழுக்கு சுத்தமாக வெளியே வந்துவிடும். அதன் பின்பு நல்ல தண்ணீரை கொண்டு உங்களது காலை கழுவி விட வேண்டும்.

- Advertisement -

அதன் பின்பாக, ஒரு காட்டன் துணியை வைத்து உங்களது கால் பாதங்களை நன்றாக துடைத்து விடுங்கள். இப்படி செய்யும்போது கால் பாதத்தில் இருக்கும் அழுக்கு பாதி அளவு நீங்கி இருக்கும். இறுதியாக, ஒரு சிறிய கிண்ணத்தில் 1 ஸ்பூன் அளவு தேங்காய் எண்ணெய் ஊற்றிக் கொள்ளுங்கள். எலுமிச்சை பழ ஜூஸ் 2 டேபிள்ஸ்பூன் அளவு ஊற்றிக் கொள்ளுங்கள். பேக்கிங் சோடா 1 ஸ்பூன் சேர்த்து, எல்லாவற்றையும் ஒன்றாக பேஸ்ட் போல் கலந்து, உங்களது கால் பாதங்களை நன்றாக 5 நிமிடங்கள் மசாஜ் செய்து கொடுத்தாலே போதும். உங்கள் கைகளாலேயே தொட்டு மசாஜ் செய்து கொடுத்தால் போதும்.

pedicure2

சொன்னா நீங்க நம்ப மாட்டீங்க! ஒருவாட்டி இந்த டிப்ஸை யூஸ் பண்ணி பாருங்க. ஒருவாட்டி இந்த டிப்ஸ் பாலோ பண்ணாலே, உங்களுடைய கால் பளபளப்பாக மாறும் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் பக்கவிளைவுகள் எதுவும் இருக்காது. ஆனால், இதை அடிக்கடி செய்யக்கூடாது. மாதத்திற்கு ஒரு முறை இப்படி செய்து வரும் பட்சத்தில் உங்களது கால் பாதங்களில் இருக்கும் அழுக்கு நீங்கி சுத்தமாகவும் அழகாகவும் காட்சி தரும்.

- Advertisement -

pedicure4

நிறைய பேருக்கு காலில் நெயில் பாலிஷ் போட்டுக் கொள்வது மிகவும் பிடிக்கும். உங்களது கால் வெண்மை நிறமாக மாறிய பின்பு, உங்களுக்கு பிடித்த நிறத்தில் நெயில் பாலிஷ் போட்டு பாருங்கள்! அது பார்ப்பதற்கு மேலும் மன திருப்தியை கொடுக்கும். இதோடு சேர்த்து சிம்பிளான அழகான காலணியை அணிந்தால் கூட, உங்களது கால்களை மற்றவர்கள் உற்றுநோக்கி தான் பார்ப்பார்கள். உங்களுக்கு இந்த குறிப்பு பிடித்திருந்தால் நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்.

இதையும் படிக்கலாமே
மஹாளய பட்சத்தில், இந்த ஒரு விஷயத்தை செய்ய மறந்து விடாதீர்கள். இப்படி செய்தால் உங்களுடைய 21 தலைமுறையும் சுபிட்சம் அடையும்.

இது போன்ற மேலும் பல அழகு சார்ந்த குறிப்புகளை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

- Advertisement -