ரோஜா பூ போல் முகம் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுபவர்கள் தங்கள் முகத்தில் ரோஜா பூவை வைத்து எப்படி வெண்மையாகவும் அழகாகவும் இளமையாகவும் வைத்துக்கொள்ள முடியும் என்றுதான் இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்கப் போகிறோம்.
மருத்துவ குணம் வாய்ந்த பூக்களுள் ஒன்றாக ரோஜா பூ திகழ்கிறது. அதிலும் நாட்டு ரோஜா என்று சொல்லக்கூடிய பன்னீர் ரோஜாக்கள் மிகவும் அற்புதமான மருத்துவ குணம் கொண்டவை. இந்த பன்னீர் ரோஜாக்களை தினமும் ஒரு ரோஜா என்ற வீதம் அதன் இதழ்களை மட்டும் நாம் சாப்பிடும் பொழுது உடல் குளிர்ச்சி ஏற்படுகிறது. அனைத்து விதமான வயிற்றுப் புண்களும் ஆறும் என்று கூறப்படுகிறது. இதே பூவை நம் முகத்தை அழகுப்படுத்த எவ்வாறு உபயோகப்படுத்துவது என்று பார்ப்போம்.
இதற்கு நமக்கு முதலில் மூன்று நாட்டு ரோஜாக்கள் வேண்டும். அதாவது பன்னீர் ரோஜா பூக்கள் வேண்டும். வேற ரோஜா பூக்களை உபயோகப்படுத்த கூடாது. அதன் இதழ்களை மட்டும் எடுத்து நன்றாக கழுவி விட்டு மிக்ஸி ஜாரில் சேர்த்துக் கொள்ள வேண்டும். பிறகு அதில் மூன்று ஸ்பூன் அளவிற்கு காய்ச்சாத பசும்பாலை சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும். பால் சேர்க்க விருப்பம் இல்லாதவர்கள் பன்னீரை சேர்த்துக் கொள்ளலாம்.
அரைத்த இந்த ரோஜா இதழ்களை வடிகட்டியை பயன்படுத்தி நன்றாக வடிகட்டி அதன் சாரை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது ஒரு கிண்ணத்தில் இரண்டு ஸ்பூன் அளவிற்கு கற்றாழை ஜெல்லை சேர்க்க வேண்டும். பிறகு அதில் இரண்டு சொட்டு அளவிற்கு பாதாம் எண்ணெய் சேர்க்க வேண்டும். அடுத்ததாக மூன்று சொட்டு அளவு கிளிசரின் சேர்க்க வேண்டும். விட்டமின் ஈ கேப்ஸ்யூல் இரண்டு அதில் சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.
நாம் வடிகட்டி வைத்திருக்கும் ரோஜா சாரை இந்த கலவையில் சேர்த்து நன்றாக கலந்தால் அது ஒரு கிரீம் பதத்திற்கு வரும். இந்த கிரீமை ஏர் டைட் கண்டெய்னரில் போட்டு வைத்துக்கொள்ள வேண்டும். இந்த கிரீமை காலையிலும் மாலையிலும் என்று இரண்டு வேளை முகத்தை சுத்தம் செய்த பிறகு முகத்தில் தடவி அப்படியே விட்டு விட வேண்டும்.
ரோஜா பூ நம் முகத்தின் நிறத்தை மேம்படுத்த உதவுகிறது. கற்றாழை ஜெல் ஒரு இயற்கை மாய்ஸ்டரசாகவும் அதேசமயம் முகத்திற்கு ஒருவித குளோயிங்கை தரும். இதில் சேர்க்கப்பட்டுள்ள பாதாம் எண்ணையும் முகத்திற்கு தேவையான ஈரப்பதத்தை தக்க வைக்க உதவுகிறது. கிளிசரின் மற்றும் விட்டமின் ஈ முகத்திற்கு வெண்மை நிறத்தை தர உதவுகிறது.
இதையும் படிக்கலாமே: முடி உதிர்வை தடுக்கும் கசாயம்
இவை அனைத்தையும் நம் முறையாக இப்படி பயன்படுத்துவதன் மூலம் நம் முகத்தில் இருக்கக்கூடிய கருமைகள் அனைத்தும் நீங்கி முகம் பொலிவுடன் இளமையுடனும் திகழும்.