முடி உதிர்வை தடுக்கும் கசாயம்

bay leaf water
- Advertisement -

ஆரோக்கியமான தலைமுடியை பெற வேண்டும் என்பது அனைவரின் விருப்பமாக திகழ்கிறது. இதில் ஆண் பெண் என்ற எந்த வேறுபாடும் கிடையாது. முடி உதிராமல் அடர்த்தியாக இருந்தால்தான் தங்களுக்கு பிடித்தார் போல் சிகை அலங்காரம் செய்து கொள்ள முடியும் என்பதற்காகவே முடியை ஆரோக்கியமாக பராமரிக்க வேண்டும் என்று பலரும் விரும்புகிறார்கள். இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் எந்த இலையை பயன்படுத்தி கஷாயம் செய்து தலையில் தேய்த்தால் முடி உதிர்தல் பிரச்சனை என்பது முற்றிலும் நின்று முடி அடர்த்தியாக வளரும் என்றுதான் பார்க்கப் போகிறோம்.

முடி உதிர்தல் பிரச்சனை ஏற்பட பல காரணங்கள் இருந்தாலும் மிகவும் முக்கியமான காரணமாக திகழ்வது ஊட்டச்சத்து இல்லாத ஆரோக்கியமற்ற உணவு முறைதான். இதை சரி செய்வதற்கு நாம் ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ள வேண்டும் என்றாலும் அதோடு சேர்த்து இன்னும் சில ஆரோக்கியமான செயல்களை நாம் செய்வதன் மூலம் முடி உதிர்வை நிறுத்த முடியும் அதை நிறுத்துவதோடு மட்டுமல்லாமல் புதிய முடிகளை வளர வைக்க முடியும்.

- Advertisement -

இந்த கசாயத்தை தயார் செய்வதற்கு நமக்கு ஒரே ஒரு இலை இருந்தால் போதும். அந்த இலையும் மிகவும் எளிதாக அனைவரின் இல்லங்களிலும் பலதரப்பட்ட பயன்பாட்டிற்காக பயன்படுத்தக்கூடிய இலையாக தான் ததிகழ்கிறது. விலையும் மிகவும் மலிவாக இருக்கும். அந்த இலை தான் பிரிஞ்சி இலை. ஆம் நாம் பிரியாணி தயார் செய்யும் பொழுது தாளிப்பதற்காக உபயோகப்படுத்தும் பிரிஞ்சி இலையை தான் கூறுகிறோம்.

10 பிரிஞ்சி இலைகளை எடுத்துக் கொள்ளுங்கள். அதை நன்றாக கைகளிலேயே நொறுக்கி ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் ஒரு கப் அளவிற்கு தண்ணீரை ஊற்றி அடுப்பில் வைத்து கொதிக்க விட வேண்டும். கொதிக்க ஆரம்பித்து பத்திலிருந்து 15 நிமிடம் வரை குறைந்த தீயில் கொதிக்க விட வேண்டும் கொதிக்க ஆரம்பித்ததும் குறைந்த தீயில் 10 லிருந்து 15 நிமிடம் வரை வைத்திருக்க வேண்டும். அதாவது ஒரு கப் அளவு தண்ணீர் என்பது அரை கப் அளவிற்கு ஆகும் வரை கொதிக்க விட வேண்டும்.

- Advertisement -

பிறகு அது முற்றிலுமாக ஆரிய பிறகு அதை வடிகட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். எடுத்த இந்த கஷாயத்தில் ஒரு விட்டமின் இ கேப்ஸ்யூல் சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும். இப்பொழுது இந்த கசாயத்தை முடியின் வேர்க்கால்களில் நன்றாக படும் அளவிற்கு தடவி நன்றாக மசாஜ் செய்து அரை மணி நேரம் அப்படியே விட்டுவிட்டு பிறகு எப்பொழுதும் போல் தலையை அலசி விடலாம்.

வாரத்திற்கு இரண்டு முறை என்று இந்த கஷாயத்தை தலைக்கு பயன்படுத்துவதன் மூலம் முடி உதிர்தல் பிரச்சனை என்பது முற்றிலும் நீங்கிவிடும் என்பதோடு மட்டுமல்லாமல் அதிகப்படியான முடி வளர்ச்சியை தூண்டக்கூடிய அற்புத ஆற்றலும் இந்த பிரியாணி இலைக்கு இருப்பதால் முடி அடர்த்தியாகவும் வேகமாகவும் வளர ஆரம்பிக்கும்.

இதையும் படிக்கலாமே: உடல் கருமை நீங்க எளிய வழி

அதிக அளவு ஆன்டி-ஆக்சைடு நிறைந்த இந்த பிரியாணி இலையை சமைப்பதற்கு மட்டும் பயன்படுத்தாமல் நம் தலைமுடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உபயோகப்படுத்தலாம்.

- Advertisement -