சீயக்காய் அரைக்க 4 பொருள் போதும்! 100 வருட பாரம்பரிய சீயக்காய் நீங்களும் இப்படி தயாரிச்சு தலைக்கு தேச்சு பாருங்க, முடி பிரச்சனை ஒன்னு கூட இனி உங்களுக்கு இருக்காது, உங்களுடைய முடியும் கருகருன்னு நீளமா அடர்த்தியா வளரும்!

hair-seeyakkai-podi
- Advertisement -

தலைக்கு தேய்க்க ஷாம்பூ, கண்டிஷனர் எல்லாம் இப்போது சமீப காலமாக பயன்படுத்தி வரும் ஒரு வழக்கம் தான். ஆனால் 100 வருடமாக பாரம்பரிய முறையில் சீயக்காய் தயாரித்து தான் நம் தமிழ் பெண்கள் தங்களுடைய முடியை பராமரித்து வந்தனர். அவர்களுக்கு முடி கொட்டுதல் பிரச்சனையும் இருந்ததில்லை! இளநரை, அடர்த்தி இன்மை, நுனி பிளவு, பேன், பொடுகு என்று எந்த பிரச்சனையும் அண்டியது இல்லை. மாறி வரும் காலத்திற்கு ஏற்ப நாமும் மாறாமல் நம் பாரம்பரியத்தை கடைபிடித்து வந்தாலே ஆரோக்கியமும், நீண்ட கேசமும் நிச்சயம் நமக்கு மீண்டும் கிடைத்து விடும்.

இளநரை, தலைமுடி உதிர்தல், நுனி பிளவு, முடி உடைதல் போன்ற எல்லா பிரச்சினையும் சரி செய்யக்கூடிய இந்த பாரம்பரிய சீயக்காய் அரைப்பதற்கு அதிக பொருட்கள் எதுவும் தேவையில்லை. சாதாரணமாக மற்றும் முக்கியமாக தேவைப்படக் கூடிய இந்த நாலு பொருட்களை மட்டும் சேர்த்து ரொம்பவே சுலபமாக மெஷினில் கொடுத்து அரைத்து வைத்துக் கொண்டால் போதும். ஷாம்புவும் தேவையில்லை, கண்டிஷனர் தேவையில்லை உங்களுடைய முடி பளபளன்னு அலைபாயத் தொடங்கும்.

- Advertisement -

பொதுவாக சீயக்காய் தயாரிக்க சீயக்காய் தேவை! அரை கிலோ அல்லது ஒரு கிலோ சீயக்காய் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். அதனுடன் நுரை வருவதற்கு பூந்திக் கொட்டை சேர்க்க வேண்டும். பாதி அளவிற்கு பூந்திக் கொட்டைகளை சேர்த்துக் கொள்ளுங்கள். 200 கிராம் பச்சரிசி எடுத்துக் கொள்ளுங்கள். 50 கிராம் வெந்தயம் எடுத்து கொள்ளுங்கள். அவ்வளவுதான் இந்த 4 பொருட்கள் மட்டும் இருந்தால் ஆரோக்கியமான பாரம்பரிய முறையில் சீயக்காய் நாமே தயாரித்துக் கொள்ளலாம்.

சீயக்காயை முதலில் வெயிலில் இரண்டு நாட்கள் நன்கு காய விட்டு விடுங்கள். அடிக்கிற வெயிலுக்கு சீயக்காய் மொரமொரவென்று ஆகிவிடும். அதனுடன் சுத்தம் செய்து எடுத்து வைத்துள்ள பச்சரிசி மற்றும் வெந்தயத்தை சேர்த்துக் கொள்ளுங்கள். பூந்திக் கொட்டைகளையும் அது போல வெயிலில் உலர்த்தி எடுத்து கலந்து கொள்ளுங்கள். பின்னர் இவற்றை மிஷினில் கொடுத்து நைசாக அரைத்து வைத்துக் கொண்டால் நீண்ட நாட்களுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.

- Advertisement -

சீயக்காய் பயன்படுத்துபவர்கள் குறை சொல்லக் கூடிய ஒரு முக்கியமான விஷயமும் உண்டு. சீயக்காய் போட்டு தேய்த்து குளித்தால் குளித்த ஒரு உணர்வே இல்லாமல் இருக்கிறது, தலைமுடி நைசாக இல்லாமல் ரஃப்பாகி விடுகிறது என்று நினைப்பவர்கள் சீயக்காயை எப்படி பயன்படுத்த வேண்டும்? என்று தெரிந்து கொள்ளுங்கள். ஒரு டேபிள் ஸ்பூன் அல்லது உங்கள் தலை முடிக்கு ஏற்ப சீயக்காய் பொடியை எடுத்துக் கொள்ளுங்கள். அதனுடன் சாதம் வடித்த கஞ்சியை சேர்த்து நன்கு கட்டிகளில்லாமல் கலந்து கொள்ளுங்கள்.

சாதம் வடித்த கஞ்சியுடன் சீயக்காய் சேரும் பொழுது தான் நம் தலை முடி ரஃப்பாக இல்லாமல், நல்ல நைசாக கண்டிஷனர் போட்டது போல புசுபுசுன்னு, சிக்கல்கள் விழாமல் இருக்கும். இதை அப்படியே நேரடியாகவும் பயன்படுத்தக்கூடாது. அடுப்பில் 5 நிமிடம் வைத்து இடைவிடாமல் கொதிக்க விடுங்கள். இதன் பிறகு நன்கு ஆற வைத்து விட்டு பின்னர் தலைக்கு தேய்த்து குளித்து பாருங்கள். உங்களுடைய தலை முடி பிரச்சனைகள் அனைத்தும் நீங்கி, மீண்டும் இழந்த கேசத்தை சுலபமாக மீட்டெடுத்து விடலாம். நல்ல கருகருன்னு, நீளமான, அடர்த்தியான கேசத்திற்கு இந்த பாரம்பரிய சீயக்காய் பவுடர் உங்களுக்கும் உதவியாக இருக்கும்.

- Advertisement -