கரப்பான் பூச்சியை ஒழிக்க எளிய குறிப்புகள்.

cockroach spray
- Advertisement -

நம் வீட்டில் நம்மை தவிர இன்னும் பிற ஜீவன்கள் நம்மிடம் அனுமதி கேட்காமலேயே நம்முடன் இருக்கும். அவை தான் கரப்பான் பூச்சி, எலி, பல்லி, சிலந்தி போன்ற உயிரினங்கள். இதில் மிகவும் நமக்கு தொந்தரவு தரக்கூடியது தான் கரப்பான் பூச்சி. ஒரு வீட்டில் ஒரு கரப்பான் பூச்சி இருந்தால் கூட அந்த வீட்டு முழுவதும் கரப்பான் பூச்சிகளை உற்பத்தி செய்து விடும். அப்படிப்பட்ட கரப்பான் பூச்சிகளை எளிய முறையில் எப்படி அழிப்பது என்று தான் இந்த வீட்டு குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்.

பூச்சிகளுக்கு சில வாசனைகள் பிடிக்காது என்று கூறப்படுகிறது. அந்த வாசனைகள் நிறைந்த பொருட்களை நாம் முறையாக உபயோகப்படுத்தினோம் என்றால் கரப்பான் பூச்சிகள் முற்றிலுமாக ஒழிந்து விடும். இயற்கையாக தயாரிக்கப்படும் இந்த பொருட்களை பயன்படுத்தாமல் கெமிக்கல் நிறைந்த பொருட்களை பயன்படுத்தும் பொழுது அதனால் நமக்கு பல பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்புகள் இருக்கிறது.

- Advertisement -

மூன்று பிரியாணி இலை மற்றும் ஒரு துண்டு பட்டை இவை இரண்டையும் ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து கொதிக்க விட வேண்டும். இவை அனைத்தும் நன்றாக கொதித்த பிறகு இந்த தண்ணீரை ஆரவைத்து ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி கரப்பான் பூச்சிகள் இருக்கும் இடங்களில் ஸ்ப்ரே செய்து விடலாம் அல்லது வீடு துடைக்கும் தண்ணீரில் இதை கலந்து வீட்டை துடைத்து விடலாம்.

ஒரு பாத்திரத்தில் தண்ணீரை எடுத்துக்கொண்டு அதை அடுப்பில் வைத்து தண்ணீர் சூடானதும் அதில் ஒரு கைப்பிடி அளவு வேப்பிலையை போட வேண்டும். பிறகு பாதி எலுமிச்சம் பழத்தை பிழிந்து தோலுடன் அதில் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். இந்த தண்ணீர் ஆரிய பிறகு இதையும் கரப்பான் பூச்சி இருக்கும் இடத்தில் தெளிப்பதன் மூலம் கரப்பான் பூச்சிகள் ஓடிவிடும்.

- Advertisement -

ஒரு கிளாஸ் அளவு தண்ணீரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு ஸ்பூன் அளவிற்கு வினிகரை ஊற்றி பிறகு ஐந்து சொட்டுக்கள் பெப்பர்மென்ட் ஆயிலை சேர்த்து ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி கரப்பான் பூச்சி இருக்கும் இடத்தில் ஸ்பிரே செய்வதன் மூலமும் கரப்பான் பூச்சிகள் ஒழிந்து விடும்.

இதில் சொல்லப்பட்ட தண்ணீரை ஸ்ப்ரே பாட்டில் ஊற்றி ஸ்ப்ரே செய்யலாம் அல்லது வீடு துடைக்கும் தண்ணீரில் சேர்த்து துடைக்கலாம் அல்லது சிறிதளவு தண்ணீரில் கலந்து தெளித்து விடலாம்.

இதையும் படிக்கலாமே: கறை படிந்த டாய்லெட்டை சுத்தப்படுத்த இந்த தண்ணீரை கொஞ்சம் ஊத்தி விடுங்க போதும்.

இந்த இயற்கையான முறையில் ஸ்ப்ரே தயார் செய்து உபயோகப்படுத்துவதன் மூலம் நமக்கு எந்தவித பக்க விளைவுகளும் ஏற்படாது என்பது மிகவும் குறிப்பிடத்தக்கதாகும். மேலும் இதிலிருந்து வரக்கூடிய வாசனைக்கு வீட்டில் இருக்கக்கூடிய கரப்பான் பூச்சிகள் அனைத்தும் முற்றிலுமாக ஒழிந்து விடும் என்பது நிதர்சனமான உண்மை.

- Advertisement -