கறை படிந்த டாய்லெட்டை சுத்தப்படுத்த இந்த தண்ணீரை கொஞ்சம் ஊத்தி விடுங்க போதும்.

Toilet Cleaning hacks
- Advertisement -

இந்த டாய்லெட் கறை பிடித்து விட்டால் மட்டும் அதை சுத்தம் செய்வது அவ்வளவு சுலபமான காரியம் கிடையாது. அதனாலையே பெரும்பாலானோர் இதை தினமும் அல்லது ஒரு நாள் விட்டு ஒரு நாளும் சுத்தம் செய்து கொண்டே இருப்பார்கள். அதுமட்டுமின்றி டாய்லெட் சுத்தமாக இருப்பது நம்முடைய ஆரோக்கியத்தை சார்ந்த ஒரு விஷயமும் கூட, எனவே எந்த காரணத்திற்காகவும் இதில் கவனக்குறைவாக இருந்து விடக் கூடாது. அப்படி இருந்தும் சில நேரங்களில் கடைப்பிடித்து அது விடாப்பிடியான கரையாக மாறி விடும். அது போன்ற சமயத்தில் அதை சுத்தப்படுத்துவது பெரிய தலைவலி பிடித்த வேலையாகி விடும். இந்த சிக்கல்களை சமாளிக்க இந்த ஒரு குறிப்பு உங்களுக்கு தெரிந்தால் போதும். எவ்வளவு கறை படிந்தாக இருந்தாலும் சுலபத்தில் சுத்தம் செய்து விடலாம்.

டாய்லெட்டை சுலபமாக சுத்தம் செய்வது எப்படி
பாத்ரூமில் சுத்தப்படுத்த செய்யப் போகும் இந்த லிக்விட்டை தயார் செய்ய நாம் அதிகம் செலவழித்து எந்த பொருளையும் வாங்க போவது கிடையாது. நாம் வீட்டில் அன்றாடம் பயன்படுத்தும் சில பொருட்களை வைத்து தான் இதை செய்யப் போகிறோம். இதனால் நம்முடைய பணம் மிச்சமாவது மட்டுமின்றி இதில் சேர்க்கும் பொருள் தான் கறை மட்டும் இன்றி வாடை ஏதும் வராமல் இருப்பதோடு சீக்கிரத்திலும் கரையாமல் நீண்ட நாட்கள் பளிச்சென்று இருக்கும். வாங்க இப்ப அந்த லிக்விட் எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

இதற்கு முதலில் ரெண்டு பாக்கெட் சீயக்காய் தூள் எடுத்துக் கொள்ளுங்கள். இதற்கு நீங்கள் எந்த பிராண்ட் சீயக்காய் வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம். அடுத்து ஒரு ரூபாய் ஷாம்பு பாக்கெட் ஒன்றை வாங்கிக் கொள்ளுங்கள். இது இரண்டையும் கத்தரித்து ஒரு பவுலில் போட்டு நன்றாக கலந்து விடுங்கள். அடுத்ததாக இதில் ஒரு டேபிள் ஸ்பூன் சமையல் சோடா, ஒரு எலுமிச்சை பழத்தின் சாறு முழுவதுமாக பிழிந்து விடுங்கள். இவை அனைத்தையும் சேர்த்த பிறகு இது முறைத்து பொங்கி வரும்.

அதன் பிறகு ஒரு ஸ்பூன் வைத்து இதை நன்றாக கலந்த பிறகு கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி கலந்து கொள்ளுங்கள். உங்கள் பாத்ரூமில் அதிகமான விடாப்பிடி கறையாக இருந்தால் இதை கொஞ்சம் திக்காக கரைத்துக் கொள்ளுங்கள் ஓரளவிற்கு தான் கறையாக இருக்கிறது என்றால் இதை கொஞ்சம் தண்ணீராகவே கலந்து கொள்ளலாம். இப்போது ஒரு ஸ்ப்ரே பாட்டில் நீங்கள் தயார் செய்து வைத்த இந்த லிக்விடை ஊற்றி விடுங்கள். ஸ்பிரே பாட்டில் இல்லை என்றால் வீட்டில் இருக்கும் பழைய பாட்டில் மூடியில் துளைகள் போட்டு அதையும் பயன்படுத்தி கொள்ளலாம்.

- Advertisement -

இப்போது தயாரித்த இந்த லிக்விடை டாய்லெட்டில் எல்லா புறமும் ஸ்ப்ரே செய்து விட்டு பத்து நிமிடம் அப்படியே விட்டு விடுங்கள். அதன் பிறகு பாத்ரூம் தேய்க்க பயன்படுத்தும் பிரஷ் கொண்டு லேசாக தேய்த்து விட்டாலே போதும் அனைத்து விடாப்பிடி கறைகளும் சுலபமாக நீங்கி விடும். இதற்காக நீங்கள் கைவலிக்க தேய்க்க வேண்டிய அவசியமே கிடையாது. இதன் பிறகு தண்ணீர் ஊற்றி டாய்லெட்டை சுத்தம் செய்து விடுங்கள். டாய்லெட் பளிங்கு போல பளிச்சென்று மின்னும்.

இதையும் படிக்கலாமே: இந்த டிப்ஸ் மட்டும் உங்களுக்கு தெரிஞ்சா 100 சப்பாத்தியை கூட அசால்டா செஞ்சு முடிச்சிடலாம். அட! இத்தனை நாள் இது தெரியாம இவ்வளவு கஷ்டப்பட்டுட்டோமே அப்படின்னு கண்டிப்பா நினைப்பீங்க.

இந்த முறையில் சுத்தம் செய்யும் பொழுது நாம் அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டிய அவசியமும் கிடையாது. அது மட்டும் இன்றி இதில் எலுமிச்சை சாறு பேக்கிங் சோடா ஷாம்பூ சீயக்காய் என அனைத்தும் கலந்து இருப்பதால் பாத்ரூமில் பூச்சி தொந்தரவுகள் ஏதும் இல்லாமல் இருப்பதுடன் நல்ல நறுமணத்துடன் இருக்கும் எனவே டாய்லெட்டில் வாடை வராமல் இருப்பதற்காக எந்த ஒரு பொருளையும் விலை கொடுத்து வாங்கி வேண்டாம். இந்த குறிப்பு உங்களுக்கு பிடித்திருந்தால் முயற்சி செய்து பாருங்கள்.

- Advertisement -