அட பல்பொடியை கூட வீட்டிலேயே இவ்வளவு சுலபமாக செய்யலாமா? அதுவும் வெறும் 4 பொருட்களை வைத்து. இந்த குறிப்பு தெரியாமல் இத்தனை நாட்களாக பல்லை வீணடித்து விட்டோமே.

tooth-powder
- Advertisement -

என்னதான் கடையில் இருந்து வாசம் நிறைந்த பற்பசை, பல் தேய்க்கும் பொடி வாங்கி பல் தேய்த்தாலும், நம் கையால் பல்பொடியை அரைத்து அதில் பல் தேய்க்கும் சுகமே தனிதான். உதாரணத்திற்கு அந்த காலத்தில் சாம்பல் வைத்து பல் தேய்த்து வாழ்ந்தவர்கள் எல்லாம் ஆரோக்கியமாக சொத்தைப்பல் இல்லாமல் தான் வாழ்ந்தார்கள். அந்த சுகத்தை நீங்கள் அனுபவிக்க வேண்டாமா. ரொம்ப சிரமப்பட தேவை இல்லை. கொஞ்சம் வேலை செய்தால் போதும். ஆரோக்கியம் நிறைந்த சூப்பரான பல்பொடியை நம் வீட்டிலேயே குறைந்து செலவில் தயார் செய்து விடலாம். அது எப்படி என்று தெரிந்து கொள்ளும் ஆர்வம் உங்களுக்கு இருந்தால் பயனுள்ள வீட்டு குறிப்பு இதோ உங்களுக்காக.

பல்பொடி வீட்டிலேயே தயாரிக்கும் முறை:
ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக்கோங்க. அதில் கிராம்பு – 15, பட்டை துண்டு – 5 இலிருந்து 6, சுக்குத்தூள் – 4 டேபிள் ஸ்பூன், சார்கோல் பவுடர் – 4 டேபிள் ஸ்பூன், இந்த நான்கு பொருட்கள் இருந்தால் போதும். மிக்சி ஜாரில் போட்டு நைசாக அரைத்தால், பல்பொடி தயார். முழுசுக்கை வாங்கி இடித்து ஒன்றும் இரண்டுமாக மிக்ஸி ஜாரில் போட்டால் மைய அரை பட்டுவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்த சார்கோல் பவுடரை நம்முடைய வீட்டில் எப்படி தயார் செய்வது? அதில் தான் கொஞ்சம் வேலை இருக்கிறது. உங்களுடைய வீட்டில் இருக்கும் கொட்டாங்குச்சி நெருப்பில் போட்டு அனல் மூட்ட வேண்டும். அந்த கொட்டாங்குச்சி நெருப்பில் நன்றாக எரிய வேண்டும். ஒரேடியாக எரித்து சாம்பல் ஆகி விடக்கூடாது. கொட்டாங்குச்சி நெருப்பில் வெந்து கருகரு என்று வந்தவுடன் நெருப்பிலிருந்து கொட்டாங்குச்சிகளை தனியாக எடுத்து விடுங்கள்.

நன்றாக எரிந்த கருப்பு நிறத்தில் இருக்கும் கொட்டாங்குச்சி மட்டும் இப்போது ஒரு தட்டின் மேல் இருக்கிறது அல்லவா. அது சூடாக இருக்கும் போதே அதன் மேல் அரை எலுமிச்சைப்பழம் சாறை பிழிந்து, அப்படியே ஒரு நாள் இரவு முழுவதும் ஆறவிட்டு விடுங்கள். மறுநாள் காலை அதை எடுத்து தண்ணீரில் நன்றாக கழுவி விடுங்கள்.

- Advertisement -

இந்த ஈரமான கருப்பாக இருக்கும் கொட்டாங்குச்சிகளை அப்படியே வெயிலில் நன்றாக காய வைத்து, மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்தால் 100% சுத்தமான சார்கோல் பவுடர் தயார். இதை பாட்டிலில் போட்டு ஸ்டோர் செய்து வைத்துக் கொள்ளுங்கள். வருடம் ஆனாலும் கெட்டுப் போகாது.

மேலே சொன்னபடி பல்பொடி தயாரிக்கவும் இந்தச் சார்கோல் பவுடர் நமக்கு உதவும். சில அழகு குறிப்புக்காகவும் இந்த சார்கோல் பவுடரை பயன்படுத்தலாம். இந்தச் சார்கோல் பவுடரை பயன்படுத்தி மூக்கின் மேல் இருக்கும் பிளாகெட்ஸ் நீக்கலாம்.

- Advertisement -

சிறிய கிண்ணத்தில் சார்கோல் பவுடரை தேவையான அளவு போட்டு, அதில் கொஞ்சமாக தண்ணீர் விட்டு, கலந்து அதை அப்படியே எடுத்து மூக்கின் மேல் ஜென்டில் ஆக மசாஜ் செய்தால் மூக்கின் மேல் இருக்கும் அந்த கருப்பு நிறம் நீங்கிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல, சார்கோல் பவுடரை வைத்து முகம் முழுவதும் லேசாக ஸ்கிராப் செய்தால் டெட் செல்கள் அனைத்தும் நீங்கிவிடும்.

இதையும் படிக்கலாமே: பாலக் பன்னீர் செய்வது இவ்வளவு ஈஸியா? சத்தான உணவை, சுவையாக செய்து கொடுத்தால் யாரும் வேண்டாம் என்று சொல்லவே மாட்டாங்க.

இந்த சார்கோல் பவுடரில் கொஞ்சமாக தேங்காய் எண்ணெய் விட்டு, கலந்து அதை வெள்ளை முடிகளுக்கு மேல் தடவி இரண்டு நிமிடம் காய வைத்தால் உடனடியாக வெள்ளை முடி கருப்பாக மாறும். இதே போல நிறைய குறிப்புகளுக்கு இதை பயன்படுத்திக் கொள்ளலாம். மேலே சொன்ன இந்த பயனுள்ள வீட்டு குறிப்புகள் உங்களுக்கு பிடித்திருந்தால் முயற்சி செய்து பாருங்கள்.

- Advertisement -