வாஷிங் மெஷின் லிக்விட் வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?

cloth
- Advertisement -

பெரும்பாலும் வாஷிங் மெஷின் பயன்படுத்துபவர்கள் வீட்டில் டிடர்ஜென்ட் லிக்விட் பயன்படுத்துவது வழக்கமாக இருக்கும். அந்த லிக்விடுக்கு விலை கொஞ்சம் கூடுதலாகவும் இருக்கும். அதே போல வாஷிங்மெஷினில் துணி துவைத்தால் அழுக்கு சுத்தமாக போகவில்லை என்ற கம்ப்ளைன்ட் இருக்கும்.

விலை அதிகமாக கொடுத்து லிக்விடை ஊற்றி, துணி துவைத்தும் பிரயோஜனம் இல்லை என்பவர்கள் இந்த பயனுள்ள வீட்டு குறிப்பு பயன்படுத்தி பாருங்கள். நிச்சயமாக செல்லவும் குறையும். துணியில் இருக்கும் அழுக்கும் சுலபமாக நீங்கும்.

- Advertisement -

வாஷிங் மெஷின் லிக்விட் வீட்டிலேயே தயார் செய்யும் முறை

ஒரு சோப்பு வாங்கிக் கொள்ளுங்கள். துணி துவைக்கும் சோப்பு எந்த பிராண்ட் சோப்பாக இருந்தாலும் பரவாயில்லை. அந்த சோப்பை முதலில் தூளாக நறுக்கிக் கொள்ளவும். அப்படி இல்லை என்றால் ஒரு கிரேட்டரில் இந்த சோப்பை நன்றாக துருவி ஒரு அகலமான பாத்திரத்தில் போட்டுக் கொள்ளுங்கள்.

1/4 கப் அளவு மட்டும் தண்ணீரை ஊற்றி இந்த சோப்பை நன்றாக கரைத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது சோப்பு லிக்விட் கிடைத்திருக்கும். அதில் 1/2 கப் வினிகர், 1/4 கப் வாசனைக்காக கம்ஃபோர்ட் அல்லது வேறு எந்த பிராண்ட் ஃபேப்ரிக் கண்டிஷனரை சேர்த்துக் கொள்ளலாம். அது உங்கள் விருப்பம். இறுதியாக 1 ஸ்பூன் தூள் உப்பு போட்டு இதை நன்றாக கரைத்து ஒரு பாட்டிலில் ஸ்டோர் செய்து வைத்துக் கொண்டால், தினமும் துணி துவைக்க பயன்படுத்தலாம்.

- Advertisement -

நீங்கள் கையில் துணி துவைப்பார்களாக இருந்தாலும், இந்த லிக்விடை ஊற்றி துணிகளை ஊற வைத்து துவைத்து பாருங்கள். அழுக்கு சுலபமாக சுத்தமாக நீங்கிவிடும். ஊற வைக்கும் தண்ணீரிலேயே முக்கால்வாசி அழுக்து போய்விடும். தேவைப்படுபவர்கள் வாஷிங்மெஷினிலும் இந்த லிக்விடை ஊற்றி பயன்படுத்திக் கொள்ளலாம்.

வாஷிங்மெஷினில் நிறைய தண்ணீர் எடுக்கும்போது, நீங்கள் ஊற்றும் குறைவான லிக்விட் சரியாக வேலை செய்யாது. ஆகவே துணிகளை எல்லாம் ஒரு பக்கெட் தண்ணீரில், லிக்விடை ஊற்றி ஊற வைத்து பிறகு, அதை எடுத்து வாஷிங்மெஷினில் போட்டு துவைத்தால் சுத்தமாக அழுக்கு போகும்.

- Advertisement -

இதற்கும் சோம்பேறித்தனம். எங்களுக்கு இதெல்லாம் முடியாது என்பவர்கள் வாஷிங் மிஷினிலேயே துணியை போட்டு, முதலில் குறைந்த அளவு தண்ணீரை வாஷிங்மெஷினில் எடுக்கும்படி செட் செய்து விடுங்கள். பிறகு பத்து நிமிடங்கள் குறைவான தண்ணீரில் துணிகள் நன்றாக ஊறிய பிறகு, நிறைய தண்ணீர் வைத்து வாஷிங்மெஷினிலேயே துணியை துவைக்கலாம்.

இதையும் படிக்கலாமே: ஒட்டுமொத்த கண் திருஷ்டியையும் ஒழித்துக்கட்டும் பரிகாரம்

அழுக்குத் துணிகளை பிரஷ் போடாமல், சோப்பு போடாமல், வாஷிங் மெஷினில் போட்டு துவைக்கும் போது அழுக்கு சுத்தமாக போகும். இந்த வீட்டு குறிப்பு தேவைப்படுபவர்கள் பின்பற்றி பாருங்கள். நிச்சயம் நல்ல ரிசல்ட் கிடைக்கும். உங்களுக்கு நல்ல ரிசல்ட் கிடைத்தால் உங்களுக்கு தெரிந்தவர்களுக்கும் இந்த டிப்ஸை சொல்லிக் கொடுங்கள். இந்த குறிப்பை பின்பற்றும்போது நிறைய பணம் சேமிப்பீர்கள்.

- Advertisement -