சுவையான பூண்டு சாதம் செய்வது இவ்வளவு ஈஸியா? ஆரோக்கியமான இந்த பூண்டு சாதத்தை செய்ய வெறும் 10 நிமிடம் போதுமே!

garlic-rice

லன்ச் பாக்ஸில் பேக் செய்து கொடுப்பதற்கு வெறும் புளி சாதம், தயிர் சாதம், எலுமிச்சை சாதம்  மட்டும் தானா? புதியதாக இந்த பூண்டு சாதத்தை செய்து ஒரு நாள் கொடுத்து பாருங்கள்! இது உடலுக்கு ஆரோக்கியத்திற்கும் நல்லது. நாவிற்க்கு நல்ல சுவையையும் கொடுக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் இந்த பூண்டு சாதத்தை நம்முடைய வீட்டில் சுலபமாக எப்படி செய்வது என்பதைப் பற்றித் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

garlic

Step 1:
முதலில் சாதத்தை, உப்பு சேர்த்து பக்குவமாக குழைய விடாமல் வடித்து எடுத்து ஆற வைத்துக் கொள்ள வேண்டும். இந்த பூண்டு சாதத்தை பாசுமதி அரிசியிலும் செய்யலாம். பச்சரிசியிலும் செய்யலாம். சாப்பாட்டு அரிசியிலும் செய்யலாம். அரிசிக்கு ஏற்றவாறு சுவையிருக்கும் முடிந்த வரை பச்சரிசி, பாசுமதி அரிசியில் செய்தால் ருசி நன்றாக இருக்கும்.

Step 2:
ஒரு பெரிய கப் அளவு சாதம் எடுத்துக்கொண்டால், முதலில் அதற்கு 100 கிராம் அளவு பூண்டை நன்றாக தோலுரித்து விட்டு, நீளவாக்கில் பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளுங்கள். ஒரு வாணலியில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய், 1 ஸ்பூன் நெய் ஊற்றி நறுக்கிய பூண்டுகளை போட்டு சிவந்த நிறம் வருமளவிற்கு வறுத்து எடுக்க வேண்டும். கருக விட்டு விடக்கூடாது. பொன்னிறம் வரும் அளவிற்கு வறுத்தால் போதும்.

choped-veg

Step 3:
இப்போது வறுபட்ட பூண்டிலிருந்து, கொஞ்சம் மட்டும் தனியாக ஒரு கிண்ணத்தில் வைத்துக் கொள்ளுங்கள். மீதம் கடாயில் எண்ணெயும், பூண்டும் இருக்குமல்லவா? இதோடு 1 ஸ்பூன் சீரகம், 1 கிராம்பு, 1 பட்டை, 1 பிரியாணி இலை, தாளித்துவிட்டு, பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் – 1, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் – 1, பொடியாக நறுக்கிய கேரட், பீன்ஸ், குடைமிளகாய், இவைகளை சேர்த்து இரண்டு நிமிடங்கள் வரை வதக்க வேண்டும்.

- Advertisement -

வெங்காயம் வதங்கிய உடன் காய்கறிகளை சேர்க்க வேண்டும் என்பது குறிப்பிடதக்கது. காய்கறிகள் அனைத்தும் முக்கால் பாகம் வேக வேண்டும். காய்கறிகளை சேர்த்த பின்பு காய்கறிகளுக்கு தேவையான உப்பை சேர்த்துக் கொள்ளவேண்டும். அடுத்த படியாக மிளகாய்தூள் – 1 ஸ்பூன், மல்லித் தூள் – 1/2 ஸ்பூன், மிளகுத்தூள் – 1/2 ஸ்பூன், கைப்பிடி புதினா, கைப்பிடி கொத்தமல்லி தழையை சேர்த்து ஒரு நிமிடம் வரை நன்றாக வதக்க வேண்டும். அதாவது மசாலாவின் பச்சை வாடை போக வேண்டும்.

garlic-rice2

Step 4:
இறுதியாக வடித்து வைத்திருக்கும் சாப்பாட்டை எடுத்து, உதிரி உதிரியாக மசாலாவில் சேர்த்து, கொஞ்சம் கொஞ்சமாக கிளறிவிட வேண்டும். 5 லிருந்து 8 நிமிடம் மிதமான தீயில் சூடேறி மசாலா அனைத்தும் சாப்பாட்டில் ஊறி மொத்தமாக பத்து நிமிடங்கள் எடுக்கும்.

garlic-rice1

தீயை மிதமாக வைத்துவிட்டு, சாதத்தை கிளறி அடுப்பை அணைத்து விட்டு, இறுதியாக எடுத்து வைத்திருக்கும் வறுத்த பூண்டை சாதத்தின் மேல் தூவி, கடாயில் சாதத்தை மூடிவிட்டால், 2 நிமிடம் கழித்து கமகம பூண்டு சாதம் தயாராக இருக்கும். மேலே பொடியாக நறுக்கிய கொத்தமல்லித் தழைகளைத் தூவி பரிமாறுங்கள். உங்களுக்கு இந்த குறிப்பு பிடித்திருந்தால் நீங்களும் முயற்சி செய்து பார்க்கலாம்.

இதையும் படிக்கலாமே
எதை தேய்த்தாலும் பொடுகு பிரச்சனை போகலையா? அப்போ இத மட்டும் செஞ்சு பாருங்க! உடனே நல்ல ரிசல்ட் கிடைக்கும்.

இது போன்ற மேலும் பல சமையல் சார்ந்த குறிப்புகளை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.