நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும் காரசாரமான மிளகு ரசம் ஹோட்டலில் செய்வது போல எப்படி வீட்டில் செய்வது?

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும் மிளகு உணவில் அடிக்கடி எடுத்துக் கொள்வது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. கபம், ஜுரம், சளி என்று எதுவும் நம்மை அண்ட விடாது ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும் இந்த மிளகை வைத்து எப்படி சுவையான ரசம் ஹோட்டலில் செய்வது போல நாமும் வீட்டில் செய்வது? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

milagu-rasam3

மிளகு ரசம் செய்ய தேவையான பொருட்கள்:
மிளகு – 2 டேபிள் ஸ்பூன்
சீரகம் – 1 டேபிள் ஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 4

கடுகு – கால் டீஸ்பூன்
புளி – 25 கிராம்
நல்லெண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
தோரம் பருப்பு வேக வைத்த தண்ணீர் – தேவையான அளவிற்கு

thoor-dal-water

கறிவேப்பிலை – 1 கொத்து
மல்லித் தழை – 1 கைப்பிடி
பெருங்காயத்தூள் – அரை டீஸ்பூன்

- Advertisement -

மிளகு ரசம் செய்யும் முறை:
பொதுவாக ரசத்தை கொதிக்க விட்டு செய்யக் கூடாது என்பார்கள். இது முற்றிலும் தவறான கருத்தாகும். முந்தைய காலங்களில் ஈயப் பாத்திரத்தில் ரசம் வைப்பது உண்டு. ரசம் அதிகமாக கொதித்தால் ஈயம் அதிகமாக சேர்ந்து உடலுக்கு கேடு விளைவிக்கும் என்பதால் இவ்வாறு கூறப்பட்டது என்பது தான் உண்மை. இதனை தவறாக புரிந்து கொண்டவர்கள் ரசத்தைக் எந்த பாத்திரத்தில் வைத்தாலும் கொதிக்க விடக்கூடாது என்று நினைத்துக் கொண்டார்கள். மிளகு ரசத்தை நன்கு கொதிக்க வைத்து சுவையாக செய்ய வேண்டும்.

milagu-rasam1

முதலில் ஒரு வாணலியில் மிளகு சேர்த்து நன்கு வறுக்க வேண்டும். மிதமான தீயில் மிளகுகளை உருட்டி உருட்டி எடுத்து அனைத்து பக்கமும் நன்கு வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் இதே போல சீரகம் சேர்த்து தனியாக வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். ஆறிய பின் மிக்ஸியில் போட்டு அரைத்து வைத்துக் கொள்ளுங்கள்.

பின்னர் அடுப்பை பற்ற வைத்து அடி கனமான வாணலி ஒன்றை வைத்துக் கொள்ளுங்கள். அதில் தேவையான அளவிற்கு நல்லெண்ணெய் சேர்த்து காய்ந்த மிளகாய்களை வதக்குங்கள். பின்னர் கடுகு, கறிவேப்பிலை சேர்த்து பொரிய விட வேண்டும். பின்னர் நறுக்கி வைத்துள்ள தக்காளி பழங்களை சேர்த்து நன்கு வதக்க வேண்டும். எந்த அளவிற்கு தக்காளி பழங்களை மசிய வதக்கி விடுகிறீர்களோ அந்த அளவிற்கு ரசம் சுவையாக இருக்கும்.

puli-karaisal

பின்னர் கரைத்து வைத்துள்ள புளியை ஊற்றி நன்கு கொதிக்க வைக்க வேண்டும். புளி கரைசலுடன் தக்காளி கொதிக்கும் பொழுது தான் ரசம் நன்றாக வரும். அதன் பிறகு வேகா வைத்து எடுத்துள்ள தோரம் பருப்பு தண்ணீரை சேர்க்க வேண்டும். பின்னர் தேவையான அளவிற்கு உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும். நறுக்கிய கொத்தமல்லி தழை தூவி, பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும். இறுதியாக அரைத்து வைத்துள்ள மிளகு மற்றும் சீரகம் கலந்த பொடியை லேசாகத் தூவிக் கொள்ள வேண்டும்.

milagu-rasam2

மிளகு, சீரகம் சேர்த்த பின் ரசம் கொதிக்க வேண்டிய அவசியமில்லை. அதன் சூட்டிலேயே மிளகு மற்றும் சீரகம் சேர்த்து ரசம் அட்டகாசமான சுவையை கொடுக்கும். ரசம் இனிப்பாக இருக்க சிறிதளவு வெல்லத்தை இதில் சேர்த்துக் கொள்ள வேண்டும். விருப்பமில்லாதவர்கள் இதனை தவிர்த்து விடலாம். பெரிய ஹோட்டல்களில் எல்லாம் மிளகு ரசம் சற்று இனிப்பாக தான் இருக்கும். மற்ற ரசத்தைப் போல மிளகு ரசத்தில் பூண்டு சேர்க்கக் கூடாது என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.