ஹோட்டல் சுவையில் கார சட்னி. நம்முடைய வீட்டிலும் சுலபமாக செய்யலாம்! ஒரு முறை இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

kara-chutney1

வெறும் மிளகாயை வைத்து அரைக்கும் சட்னியையும், காரச்சட்னி என்று சொல்லுவார்கள். வெங்காயம், தக்காளியுடன் சில பொருட்களை சேர்த்து அரைக்கும் சட்னியையும் கார சட்னி என்று சொல்லுவார்கள். இன்று வெங்காயம் தக்காளியோடு எந்தெந்த பொருட்களை, எந்தெந்த அளவில் சேர்த்தால், காரச்சட்னி சுவையாகவும், அதிக வாசத்தோடும் இருக்கும், என்பதைப் பற்றித்தான் தெரிந்து கொள்ள போகிறோம். சில பேருக்கு தேங்காய் சேர்த்து அரைத்தால், சட்னி பிடிக்காது. உடல் எடை கூடிவிடும் என்று பயப்படுவார்கள். இந்த சட்னியை தேங்காய் வைக்காமல் அரைக்க போகின்றோம். உடல் ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்லது. இந்த சட்னியை எப்படி செய்வது என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாமா?

kara-chutney

காரச் சட்னி செய்ய தேவையான பொருட்கள்:
பெரிய வெங்காயம் – 2, பெரிய பழுத்த தக்காளி – 1, வர மிளகாய் 5, இஞ்சி சிறிதளவாக – 2 துண்டு, பூண்டு – 5 பல் தோல் உரித்தது, புளி – குட்டி நெல்லிக்காய் அளவு, கொத்தமல்லி தழை சிறிதளவு, புதினா தழை சிறிதளவு (கொத்தமல்லித் தழை, புதினா தழையின் பச்சை நிறம், சட்னியை முழுமையாக, பச்சை நிறத்திற்கு மாற்றிவிடக் கூடாது. அதன் வாசம் மட்டுமே இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.) குறிப்பிட்டு சொல்லப்போனால், 5 இனுக்கு கொத்தமல்லித்தழையை நறுக்கி எடுத்து கொள்ளலாம். 10 இனுக்கு புதினா இலைகளை கிள்ளி எடுத்துக்கொள்ளலாம்.

அடுப்பில் கடாயை வைத்து விட்டு, ஒரு டேபிள் ஸ்பூன் அளவு நல்லெண்ணெயை ஊற்றி, அதில் இஞ்சி, பூண்டு வரமிளகாய் சேர்த்து வதக்க வேண்டும். அத்துடன் முதலில், பொடியாக நறுக்கி வைத்திருக்கும், வெங்காயம் சேர்த்து, வதக்கிக் கொள்ளுங்கள். வெங்காயம் பாதி அளவு வதங்கிய பின்பு, தக்காளியை சேர்க்க வேண்டும். தக்காளி சேர்த்த பின்பு தீயை மிதமாக வைத்து விட்டு தக்காளியின் பச்சை வாடை போகும் அளவுக்கு வதக்கிக் கொள்ள வேண்டும்.

frying

புளி தேவைப்படுபவர் இந்த இடத்தில் புளியை சேர்த்துக்கொள்ளலாம். புளிப்புத்தன்மை வேண்டாம் என்றால், புளி அவசியமில்லை. அதன் பின்பாக புதினாவை சேர்க்க வேண்டும். புதினாவை போட்டு 25 வினாடிகள் வழங்கினாலே போதும். அதாவது ஒரு நான்கிலிருந்து, ஐந்து வதக்கு வதக்கிய, புதினா வதங்கிய உடன், புதினா வாசம் வந்துவிடும். அதன் பின்பு அடுப்பை அணைத்து விட்டு, கொத்தமல்லி தழையை தூவி அந்த கடாய் சூட்டிலேயே ஒரு வதக்கு வதக்கி, தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள். இந்த கலவையை நன்றாக ஆற வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

ஆற வைத்த விழுதை மிக்ஸியில் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும். தண்ணீர் ஊற்றி கரைக்கக் கூடாது. ரொம்ப கெட்டியாகவும் இருக்கக் கூடாது. சரியான பக்குவத்தில் அரைத்தெடுத்து, சிறிது  நல்லெண்ணெயில், கடுகு, கறிவேப்பிலை, வர மிளகாய், பெருங்காயத்தூள் தாளித்து போட்டீர்கள் என்றால் சூப்பர் சட்னி தயார்.

peanut-chutney1

தேவைப்பட்டால் ஒரு பெரிய வெங்காயம், 10 சின்ன வெங்காயம் சேர்த்து இந்த சட்னியை அரைத்துக் கொள்ளலாம். பெரிய வெங்காயம் இல்லாமல், சின்ன வெங்காயத்தை வைத்து மட்டுமே கூட சட்னி அரைப்பது தவறில்லை. சட்னி கொஞ்சம் இனிப்பு சுவையில் இருக்கும். அவ்வளவுதான். இதே முறையை பயன்படுத்தி கொஞ்சம் தேங்காய் சேர்த்தும் இந்த சட்னியை அரைத்தால் இதன் ருசி மிகவும் நன்றாக இருக்கும். அதாவது ரிச்சா சாப்பிடணும்னு நினைக்கிறவங்க கொஞ்சம் தேங்காயை சேர்த்து அரைத்துக் கொள்ளலாம்.

onion-chutney

தேங்காய் வைத்து அரைக்கவில்லை என்றால், சட்னியின் அளவு மிகக் குறைந்த அளவில் கிடைக்கும். எங்கள் குடும்ப உறுப்பினருக்கு ஏற்றாற்போல் வெங்காயம், தக்காளியின் அளவை அதிகப்படுத்திக் கொள்ளுங்கள். உடன் சேர்க்கும் பொருட்களின் அளவையும், வெங்காய தக்காளிக்கு ஏற்றால்போல், அதிகப்படுத்திக் கொண்டால், சட்னியின் சுவை மாறாது. ஆரோக்கியமான இந்த சட்னி, இட்லி தோசை இவைகளுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். சில கடைகளில் இதே முறையை பின்பற்றி வரமிளகாயை கொஞ்சம் அதிகமாக வைத்து, தண்ணீராக கரைத்து பஜ்ஜிக்கு சட்னி ஆகவும் கொடுப்பார்கள். உங்களுக்கு பிடித்திருந்தால் ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள்.

இதையும் படிக்கலாமே
உங்க வீட்ல உளுந்து மட்டும் இருந்தா போதும். சூப்பர் அப்பளம், சுலபமா செஞ்சிடலாம். கடையில் வாங்குவது மாதிரியே இருக்குமுங்க!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Kara Chutney Seivathu Eppadi. Kara Chutney Seivathu Tamil. Kara Chutney Recipe. Kara Chutney in Tamil