உங்கள் வேலையை குறைக்கும் இந்த சாம்பாரை இட்லிக்கும், சாதத்திற்கும் சேர்த்து சாப்பிட ஒரே வேலையாக இப்படி குக்கரில் செய்திடுங்கள்

sambar
- Advertisement -

காலை வேளையில் இப்படி ஒரு சாம்பாரை செய்துவிட்டால் போதும். உங்கள் நேரம் மிச்சம் ஆகிவிடும். இதனை காலை உணவாக இட்லியுடன் சேர்த்தும் சாப்பிடலாம், மதியம் லஞ்சிற்க்கு சாதத்துடன் சேர்த்து, சிறிது நெய் விட்டு கலந்தும் கொடுக்கலாம். இவை இரண்டு உணவுக்கும் இந்த சாம்பார் அவ்வளவு அற்புதமாக இருக்கும். இதனை செய்வது மிகவும் எளிமையான வேலை தான். பருப்பு, வெங்காயம், தக்காளி, காய்கறி என அனைத்தையும் குக்கரில் சேர்த்து, 5 விசில் வைத்தால் போதும். சுவையான ஹோட்டல் சாம்பார் தயாராகிவிடும். இதைக் குழந்தைகளும், பெரியவர்களும் மிகவும் விருப்பமாக சாப்பிடுவார்கள். உங்களுக்கும் ஒரே வேலையாக சமையல் வேலை முடிந்து விடும். வாருங்கள் இப்படி அனைத்திற்கும் ஏற்ற இந்த சாம்பாரை எப்படி செய்வது என்பதை இந்த பதிவின் மூலம் தெளிவாக தெரிந்து கொள்வோம்.

idli-sambar1

தேவையான பொருட்கள்:
பாசிப் பருப்பு – 75 கிராம், துவரம்பருப்பு – 50 கிராம், சின்ன வெங்காயம் – 15, தக்காளி – 5, பெரிய கேரட் – 1, மஞ்சள் பூசணி – 100 கிராம், மஞ்சள் தூள் – அரை ஸ்பூன், பெருங்காயத்தூள் – அரை ஸ்பூன், உப்பு – ஒரு ஸ்பூன், சாம்பார் பொடி – 2 ஸ்பூன், எண்ணெய் – 5 ஸ்பூன், வரமிளகாய் – 4, கடுகு – அரை ஸ்பூன், உளுத்தம் பருப்பு – அரை ஸ்பூன், வெந்தயம் – கால் ஸ்பூன், சீரகம் – கால் ஸ்பூன், பூண்டு – 5 பல், கறிவேப்பிலை – ஒரு கொத்து, கொத்தமல்லித்தழை – ஒரு கைப்பிடி.

- Advertisement -

செய்முறை:
முதலில் ஒரு குக்கரை எடுத்துக் கொண்டு, அதில் 75 கிராம் பாசிப்பருப்பு, மற்றும் 50 கிராம் துவரம் பருப்பை சேர்த்து தண்ணீர் ஊற்றி, இரண்டு, மூன்று முறை நன்றாக கழுவிக் கொள்ள வேண்டும். பின்னர் அதில் இரண்டரை டம்ளர் தண்ணீர் ஊற்றிக் கொள்ள வேண்டும். பின்னர் அதனுடன் அரை ஸ்பூன் மஞ்சள் தூள், அரை ஸ்பூன் பெருங்காயத்தூள் சேர்த்துக் கலந்து விட வேண்டும்.

cooker

பின்னர் சின்ன வெங்காயத்தை தோலுரித்து இரண்டாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பிறகு தக்காளி பழங்களை நான்கு துண்டுகளாக நறுக்கி வைக்க வேண்டும். பின்னர் கேரட்டை வட்ட வடிவ நறுக்கி கொள்ள வேண்டும். அதேபோல் மஞ்சள் பூசணியை தோல் சீவி பொடியாக நறுக்கி வைக்க வேண்டும்.

- Advertisement -

பிறகு இவை அனைத்தையும் பருப்புடன் சேர்த்துக் கொள்ள வேண்டும். பிறகு இவற்றுடன் ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து கலந்து விட வேண்டும். இவ்வாறு எண்ணெய் சேர்ப்பது குக்கரில் விசில் வரும் பொழுது தண்ணீர் அனைத்தும் வெளியில் வராமல் இருப்பதற்காக சேர்க்கப்படுவதாகும். பிறகு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் விசில் போட்டு, 4 விசில் வரும் வரை வேக வைக்க வேண்டும்.

idli-sambar2

பிறகு குக்கரில் பிரஷர் குறைந்ததும் குக்கர் மூடியைத் திறந்து, கரண்டி வைத்து லேசாக கலந்து விட்டாலே போதும். பருப்பு அனைத்தும் மசிந்துவிடும். பின்னர் ஒரு கடாயை அடுப்பில் வைத்து மீதமுள்ள எண்ணெயை ஊற்றிக் கொள்ள வேண்டும். பிறகு அதில் கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், வெந்தயம் இவை அனைத்தையும் சேர்த்து தாளிக்க வேண்டும். பின்னர் 5 பல் பூண்டை தட்டி சேர்த்து கலந்து விட வேண்டும். பிறகு நான்கு வரமிளகாய் சேர்த்து கிளறிவிட்டு, இதனுடன் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து கொதிக்க வைத்து, சாம்பாருடன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

- Advertisement -