வீடு துடைக்கும் தண்ணீரில் இதை மட்டும் சேர்த்து துடைத்து பாருங்க உங்க தரை பளப்பளன்னு கண்ணாடி போல இருக்கும். ஒரு பைசா செலவில்லாம உங்க தரைய புது வீட்டு தரை போல மாத்திடலாம்.

house cleaning
- Advertisement -

வீட்டைத் துடைக்க எப்போதுமே நாம் ஏதாவது கெமிக்கல் கலந்த லிக்வீட்டை தான் பயன்படுத்துவோம். இதன் விலை அதிகம் என்பது ஒரு புறம் இருந்தாலும், இதனால் நம்முடைய சருமத்திற்கும் பல வித பிரச்சனைகள் வரக் கூடிய வாய்ப்புகள் அதிகம். இந்த வீட்டுக் குறிப்பு பதிவில் வீட்டை துடைக்கும் தண்ணீரில் சேர்க்க ஒரு அருமையான அதே நேரத்தில் ஆரோக்கியமான செலவு இல்லாத ஒரு லிக்வீட்டை எப்படி செய்வது என்று தான் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

தரையை துடைக்க பயன்படுத்தும் லிக்விட் தயாரிக்கும் முறை :
இந்த லீக்வீட்டை தயாரிக்க முதலில் இரண்டு டேபிள் ஸ்பூன் கல் உப்பை எடுத்துக் கொள்ளுங்கள். அத்துடன் கால் டீஸ்பூன் மஞ்சள் தூள், 4 கற்பூரத்தை தூள் செய்து போட்டுக் கொள்ளுங்கள். இதில் கொஞ்சம் பச்சை கற்பூரமும் சேர்த்துக் கொள்ளுங்கள். துணி துவைக்க பயன்படுத்தும் லிக்வீட் அல்லது சோப்பு பவுடர் எதுவாக இருந்தாலும் ஒரு ஸ்பூன் போட்டு கொள்ளுங்கள். அப்படி இரண்டும் இல்லாத பட்சத்தில் ஒரு ரூபாய் ஷாம்பு இருந்தா அதையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இப்போது இவையெல்லாம் சேர்த்து நன்றாக கலந்த பிறகு இதில் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி அப்படியே வைத்துக் கொள்ளுங்கள். இந்த லிக்விட்டை முன்பே தயாரித்து எடுத்து வைத்துக் கொள்ள கூடாது. வீட்டை துடைக்கும் போதெல்லாம் புதிதாக தயார் செய்து தான் பயன்படுத்தி வேண்டும்.

இப்போது வீடு துடைப்பதற்கு முதலில் கொஞ்சமாக தண்ணீர் எடுத்து வெறும் தண்ணீரிலே வீடு முழுவதும் துடைத்து விடுங்கள். இதன் மூலம் முதலில் அதிகப்படியான அழுக்கு கறை எல்லாம் வெளியே வருவதற்கும் அடுத்த முறை லிக்வீட்டை சேர்த்து துடைக்கும் போது அது நல்லா பளிச்சென்று வாசமாக இருக்க உதவி செய்யும். அடுத்து ஒரு பக்கெட்டில் பாதி அளவு சுடுதண்ணீர் எடுத்துக் கொள்ளுங்கள். இந்த தண்ணி நிச்சயம் வெதுவெதுப்பான தண்ணீராகத் தான் இருக்க வேண்டும். குளிர்ந்த நீரில் எந்த லிக்வீடை சேர்த்து துடைக்க கூடாது.

- Advertisement -

இப்போது எடுத்து வைத்த அரை பக்கெட் வெதுவெதுப்பான தண்ணீரில் நாம் ஏற்கனவே கலந்து வைத்த லிக்வீடை சேர்த்து ஒரு முறை நன்றாக கலந்த பிறகு வைத்து வீட்டை சுத்தமாக துடைத்து விடுங்கள். இதில் இருக்கும் கல் உப்பு, மஞ்சள் போன்றவை எல்லாம் நல்ல ஒரு கிருமி நாசினியாகவும் பச்சை கற்பூரம், கற்பூரம் இவையெல்லாம் சேர்த்து துடைக்கும் போது வீடு நல்ல தெய்வீகத் நறுமணத்துடனும் இருக்கும். அது மட்டும் இல்லை இதில் சேர்க்கும் ஷாம்பு தரையை நல்ல பளபளப்பாக மாற்றி விடும்.

இந்த முறையில் வீடு துடைக்கும் போது வீட்டில் இருக்கும் நெகட்டிவீட்டி கூட மறைந்து விடும். கெமிக்கல் கலந்த லிக்வீடுகளை பயன்படுத்தும் போது சின்ன குழந்தைகள் உள்ள வீடுகளில் அவர்களுக்கும் பாதிப்புகள் அதிகமாக ஏற்படும். ஆகையால் இது போன்ற செலவே இல்லாத அதே நேரத்தில் ஆரோக்கியத்திற்கு எந்த கேடும் விளைவிக்காத லிப்வீக்டை நாமே தயாரித்து வீட்டை சுத்தம் செய்வது மனதுக்கு நிறைவு தருவதோடு பணமும் விரயமாகாது இத்துடன் நம்முடைய ஆரோக்கியமும் மேம்படும்.

இதையும் படிக்கலாமே: பழுப்பு நிறமாகி போன வெள்ளை துணிகள் கூட பத்தே நிமிடத்தில் பளிச்சுன்னு மாற துணி துவைக்கும் தண்ணீரில் இந்த ஒரு பொருளை மட்டும் சேர்த்துக்கோங்க. இனி கை வலிக்க பிரஷ் போட்டு தேய்க்க வேண்டிய அவசியமே கிடையாது.

இந்த வீட்டுக் குறிப்பு பதிவில் உள்ள இந்த லிக்விட் தயாரிப்பு பற்றிய குறிப்பு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்குமெனில் நீங்களும் இதே போல முயற்சி செய்து பார்க்கலாம்.

- Advertisement -