எந்த ஒரு தொழிலை செய்வதாக இருந்தாலும் வியாபாரத்தை செய்வதாக இருந்தாலும் அதில் சிறப்பாக செயல்பட்டு லாபத்தை பெற வேண்டும் என்றுதான் நினைப்போம். அந்த லாபம் என்பது நிரந்தரமாக இருக்கவும் எந்தவித தடைகளும் ஏற்படாமல் வியாபாரம் நடக்கவும் பலவிதமான வழிபாட்டு முறைகளும், பரிகாரங்களும் திகழ்கின்றன. அந்த வகையில் வருடத்திற்கு ஒருமுறை மட்டும் மிகவும் எளிதில் செய்யக்கூடிய ஒரு பரிகாரம் இருக்கிறது. இந்த பரிகாரத்தை ஒருமுறை செய்தால் போதும் இதன் பலனை நாம் ஒரு வருடம் அனுபவிக்க முடியும். அப்படிப்பட்ட ஒரு பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.
வியாபாரம் சிறக்க பரிகாரம்
பொதுவாக தன லாபம் பெருக வேண்டும் என்றால் அதற்கு மகாலட்சுமியின் அருளும் குபேரரின் அருளும் வேண்டும். அப்படி இவர்கள் இருவரின் அருளும் கிடைத்துவிட்டால் நாம் எந்த தொழிலை செய்தாலும் அந்த தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். வியாபாரம் சிறப்பாக நடைபெறும். லாபம் அதிகரித்துக் கொண்டே செல்லும். அப்படிப்பட்ட இவர்கள் இருவரையும் நினைத்துக் கொண்டு செய்ய வேண்டிய ஒரு எளிமையான பரிகாரத்தை தான் இப்பொழுது பார்க்க போகிறோம்.
இந்த பரிகாரத்தை நாம் வளர்பிறையில் தான் செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்காக நாம் ஒரு மூட்டையை தயார் செய்ய போகிறோம். அந்த மூட்டையை தயார் செய்யக்கூடிய நாள் அஷ்டமி, நவமி, கரிநாள் போன்ற நாட்கள் இல்லாதவாறு பார்த்து மீதம் இருக்கக்கூடிய நாட்களில் தயார் செய்து கொள்ளலாம். இதற்கு ஒரு பச்சை நிற துணி ஒன்று வேண்டும். அந்த துணியில் ஒரு துண்டு பச்சை கற்பூரம், இரண்டு ஏலக்காய், இரண்டு கிராம்பு, ஒரு ஒரு ரூபாய் நாணயம், ஒரு சிறிய துண்டு வசம்பு இவை அனைத்தையும் வைத்து மூட்டையாக கட்டிக் கொள்ள வேண்டும்.
இந்த மூட்டைக்கு சந்தனம் குங்குமம் வைத்துக்கொள்ள வேண்டும் பிறகு ஜவ்வாது எடுத்து இந்த மூட்டை முழுவதும் தடவி தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த மூட்டையை நாம் நம்முடைய வியாபாரம் தொழில் நடக்கக்கூடிய இடத்தில் இருக்கும் கல்லாப்பெட்டியில் வைக்க வேண்டும். இதை வைக்கும் பொழுது கணவன் மனைவி தம்பதிகளாக வைக்க வேண்டும். ஒருவேளை திருமணமாகாதவராக இருக்கும் பட்சத்தில் அவர்களுடைய தாய் தந்தையரை அழைத்து வந்து இதை கல்லாப்பெட்டியில் வைக்கச் சொல்ல வேண்டும்.
கல்லாப்பெட்டிக்குள் வைப்பதற்கு முன்பாக கணவன் மனைவி இருவரும் அந்த மூட்டையை கையில் வைத்துக்கொண்டு தங்களுடைய குலதெய்வத்தையும் இஷ்ட தெய்வத்தையும் குபேர லட்சுமியையும் மனதார வழிபாடு செய்து விட்டு பிறகு கல்லாப்பெட்டியில் வைக்க வேண்டும். அப்படி கல்லாப்பட்டியில் வைக்கக்கூடிய நேரமானது அன்றைய நாளில் வரக்கூடிய சுக்கிர ஹோரையாக இருக்க வேண்டும். பச்சை நிறம் என்பது குபேரருக்குரிய நிறம் இதில் இருக்கக்கூடிய வாசனை பொருட்கள் அனைத்துமே மகாலட்சுமியின் அம்சம் பொருந்தியதாக கருதப்படுகிறது இதை நாம் கல்லாப்பெட்டியில் வைக்கக்கூடிய நேரம் என்பது சுக்கிர ஹோரை இவர்கள் மூவரின் அருள் இருந்தால்தான் ஒருவரால் நல்ல பணத்தை சம்பாதிக்க முடியும்.
இப்படி சுக்கிர ஹோரையில் கல்லாப்பெட்டியில் இந்த மூட்டையை வைத்துவிட்டு வாசனை மிகுந்த சந்தன ஊதுபத்தியை பொருத்தி அந்த மூட்டைக்கு காட்ட வேண்டும். பிறகு கற்பூர ஆரத்தி காட்டி வழிபாட்டை நிறைவு செய்து கொள்ள வேண்டும். பிறகு இந்த மூட்டையை நாம் எடுக்கவே கூடாது. ஒரு வருடம் வரை இது அப்படியே கல்லாப்பெட்டிக்குள் இருக்கட்டும். ஒரு வருடம் கழித்து இதில் இருக்கக்கூடிய பொருட்கள் அனைத்தையும் ஓடுகின்ற தண்ணீரில் போட்டு விடுங்கள். ஒரு ரூபாய் நாணயத்தை மட்டும் வைத்துக் கொள்ளுங்கள். திரும்பவும் இதே பரிகாரத்தை செய்யும் பொழுது அந்த ஒரு ரூபாய் நாணயத்தை பயன்படுத்தி மூட்டையாக தயார் செய்து வைத்துக் கொள்ளலாம்.
இதையும் படிக்கலாமே: வாழ்க்கையை மாற்றும் ஆஞ்சநேயர் வழிபாடு
அதிகப்படியான செலவுகள் எதுவும் செய்யாமல் மிகவும் எளிமையாக கிடைக்கக்கூடிய மகாலட்சுமியின் அம்சம் பொருந்திய பொருட்களை வைத்து இந்த முறையில் முழுமனதோடு பரிகாரம் செய்பவர்களுக்கு அவர்கள் செய்யக்கூடிய தொழிலாக இருந்தாலும் வியாபாரமாக இருந்தாலும் அது சிறந்து விளங்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.