கொரோனா காலத்தில் ஒவ்வொருவருக்கும் தெரிந்திருக்க வேண்டிய விஷயம்! ஆக்ஸிஜனுக்கும் நுரையீரலுக்கும் என்ன சம்பந்தம்? நம்முடைய உடலில் ஆக்ஸிஜனின் அளவு குறைவதை வீட்டிலிருந்தபடியே எப்படி கண்டுபிடிப்பது?

corona4

கொரோனா நோய்த்தொற்று தீவிரமாக பரவிக் கொண்டிருக்கும் இந்த சமயத்தில் நாம் எல்லோரும் அடிக்கடி கேள்விப்பட்டு கொண்டிருக்கக் கூடிய 2 விஷயங்கள். ‘ஆக்சிஜன் குறைபாட்டினால் உயிரிழப்பு’, ‘கொரோனா தோற்று நுரையீரலை பாதிக்காமல் இருக்க வேண்டும்’. நுரையீரலுக்கும், இந்த ஆக்சிஜன் குறைபாட்டிற்கும் அப்படி என்னதான் சம்பந்தம் உள்ளது? நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், தங்களுடைய உடலில் ஆக்சிஜன் குறைவதை வீட்டிலிருந்தபடியே எப்படி கண்டறியலாம் என்ற கேள்விகளுக்கான பதிலைத்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

நம் கண்ணுக்குத் தெரியாமல் சுற்றி இருக்கும் காற்றை தான் நாம் சுவாசித்து உயிர் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். இந்த காற்றில் இருக்கும் பிராண சக்தியான ஆக்சிஜன் என்ற வாயுதான் நாம் உயிர் வாழ்வதற்கு அவசியம் தேவையான ஒன்று. ஆனால் இந்த காற்றில் ஆக்ஸிஜன் தவிர மற்ற வாயுக்களும் கலந்து உள்ளது.

கார்பன் டை ஆக்சைடு, ஹைட்ரஜன், நைட்ரஜன் டை ஆக்சைடு, கார்பன் மோனாக்சைடு, இப்படி 16 விதமான வாயுக்கள் இந்த காற்றோடு கலந்து உள்ளது. நாம் சுவாசிக்கும் போது வெறும் ஆக்சிஜனை மட்டும் சுவாசிப்பது கிடையாது. ஆக்சிஜனுடன் சேர்ந்து மற்ற வாயுக்களையும் தான் சுவாசம் செய்கின்றோம்.

lungs

நாம் சுவாசிக்கின்ற இந்த காற்றில் இருந்து, ஆக்சிஜனை மட்டும் தனியாக பிரித்து எடுத்து, நம் உடலுக்கு தேவையான ஆக்சிஜனை, ரத்தத்திற்கு அனுப்பும் வேலையை தான் இந்த நுரையீரல் செய்கின்றது. ஆக, நுரையீரல் பழுது அடைந்து விட்டால், நம் உடலுக்கு தேவையான ஆக்சிஜனை நம்மால் பெற முடியாது. ஆக்ஸிஜனின் அளவு குறையும்போது உயிர் இழக்க நேரிடும் நிலைமை ஏற்பட்டு விடுகிறது.

- Advertisement -

எல்லோருக்கும் புரியும்படி சொல்லப்போனால், இந்த நுரையீரல் ஆக்ஸிஜனை உள்வாங்கிக் கொண்டு, கார்பன்-டை-ஆக்ஸைடை வெளியே அனுப்பும் வேலையை தான் செய்து கொண்டிருக்கின்றது. நோய் தொற்று நுரையீரலை பாதிக்கும் போது, நுரையீரலால் தன் வேலையை சரியாக செய்ய முடியவில்லை. இதனால்தான் நம்முடைய உடலில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை உண்டாகிறது.

oxygen

இந்த இடத்தில் நாம் இன்னொரு விஷயத்தையும் நினைவு கூற வேண்டியது மிக மிக அவசியம். மனிதர்களாகிய நாம் ஆக்சிஜனை சுவாசம் செய்து கார்பன்-டை-ஆக்சைடை வெளியிடுகின்றோம். ஆனால் எல்லா மரங்களும் செடி கொடிகளும் கார்பன் டை ஆக்சைடு தன்னுள்ளே ஈர்த்து கொண்டு ஆக்சிஜனை வெளியிட்டு கொண்டிருக்கின்றது.

puls-oximeter

சரி, இப்போது இந்த ஆக்சிஜன் அளவு நம்முடைய உடலில் குறைந்தால் அதை எப்படி கண்டுபிடிப்பது என்பதைப் பற்றியும் தெரிந்துகொள்வோம். நம் உடலில் இருக்கும் ஆக்ஸிஜன் அளவை காட்டும் கருவிகள் இருக்கின்றது. மருத்துவமனைக்கு சென்றால், நம்முடைய விரலில், அந்த கருவியை மாட்டி தான் ஆக்சிஜன் அளவை கண்டுபிடிக்கிறார்கள்.

கீழே படத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் கருவிதான் அது. இது மனிதர்களுடைய விரலில் மாட்டி விட்டால் போதும். நம்முடைய இரத்தத்தில் எவ்வளவு ஆக்சிஜன் அளவு இருக்கின்றது என்பதை அந்தக் கருவியைக் காட்டி விடும். நம்முடைய உடலில் ஆக்சிஜன் அளவு 95 க்கு குறையாமல் இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.

breating-prlm

இந்த கருவியின் பெயர் Pulse Oximeter. சுவாச சம்பந்தப்பட்ட பிரச்சனை உள்ளவர்கள் அனைவருமே இந்த கருவியை வாங்கி தங்களுடைய வீட்டில் வைத்து வைத்துக் கொண்டு, தேவைப்படும் போது ரத்தத்தில் இருக்கும் ஆக்ஸிஜன் அளவை சோதித்துக் கொள்ளலாம். ஆக்சிஜனின் அளவு 95க்கும் கீழே காட்டும் பட்சத்தில், சுவாச சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.

Corona

குறிப்பாக கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த கருவியை தேவைப்பட்டால் வீட்டில் வாங்கி வைத்துக்கொண்டு உடலில் இருக்கும் ஆக்ஸிஜன் அளவை சரி பார்த்துக் கொள்வதிலும் தவறில்லை. அனைவரும் பாதுகாப்போடு கவனத்தோடு விழிப்புணர்வோடு இருப்பதன் மூலம் இந்த கொடிய நோயிலிருந்து சுலபமாகவே விடுபட முடியும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.