- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalதீய சக்திகளையும் திருஷ்டிகளையும் விரட்டி அடிக்கும் பரிகாரம்

தீய சக்திகளையும் திருஷ்டிகளையும் விரட்டி அடிக்கும் பரிகாரம்

- Advertisement -

நம்முடைய வாழ்க்கையில் நமக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளுக்கு காரணமாக நம்முடைய கர்ம வினைகள் திகழ்ந்தாலும் பெரும்பாலானவர்களுக்கு எதிர்மறை ஆற்றலாலும் தீய சக்திகளாலும் கண் திருஷ்டியாலுமே அதிக அளவில் பாதிப்புகள் ஏற்படுகிறது. அந்த அளவிற்கு இந்த உலகத்தில் இருக்கக்கூடிய மனிதர்களின் மனமானது பாழாகிவிட்டது. ஒருவர் நல்ல நிலைக்கு முன்னேறுகிறார் என்றால் நன்றாக முன்னேறட்டும் அவருடைய உழைப்பிற்கு ஏற்றார் போல் பலனை பெறுகிறார்கள் என்று இன்றைய காலத்தில் யாரும் நினைப்பது கிடையாது. அவன் எப்படி திடீரென்று முன்னேறினான் என்ற கேள்வியும் ஆதங்கமுமே அதிகமாக இருக்கிறது.

இதன் மூலம் எதிர்மறை ஆற்றல்கள் தீய சக்திகள் மற்றும் கண் திருஷ்டிகள் ஏற்படுவதற்குரிய வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. அப்படி ஒருவருக்கு எதிர்மறை ஆற்றலும் தீய சக்திகளும் கண் திருஷ்டியும் ஏற்பட்டு விட்டால் அவருக்கு ஏதாவது ஒரு ரூபத்தில் தடைகளும் பிரச்சனைகளும் வந்து கொண்டே இருக்கும். உடல் ரீதியான பாதிப்புகள் ஏற்படலாம், குடும்பத்தில் அடிக்கடி சண்டை சச்சரவுகள் உண்டாகலாம், தொட்ட காரியங்களில் வெற்றி ஏற்படாமல் தடைகள் வந்து கொண்டே இருக்கலாம். இப்படிப்பட்ட சூழ்நிலையில் இருக்கக்கூடிய யாராக இருந்தாலும் எலுமிச்சம் பழத்தை வைத்து ஒரு எளிமையான பரிகாரத்தை செய்யலாம். அப்படி செய்வதன் மூலம் அவர்களுக்கு இருக்கக்கூடிய அனைத்து விதமான தீய சக்திகளும் விலகி ஓடும். அந்த பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

- Advertisement -

தீய சக்திகளை விரட்டி அடிக்கும் பரிகாரம்

இந்த பரிகாரத்தை என்றைக்கு வேண்டுமானாலும் நாம் செய்யலாம். குறிப்பாக செவ்வாய், வெள்ளிக்கிழமையில் செய்வது என்பது மிகவும் சிறப்பு. அருகில் இருக்கக்கூடிய அம்மன் ஆலயத்திற்கு செல்ல வேண்டும். அதாவது பிரதான தெய்வமாக அம்மன் இருக்கும் ஆலயத்திற்கு செல்ல வேண்டும். அந்த ஆலயத்தில் கண்டிப்பான முறையில் அம்மனுக்கு முன்பாக திரிசூலம் என்பது இருக்கும். அப்படி இருக்கக்கூடிய ஆலயமாக பார்த்து செல்லுங்கள். ஒருவேளை அப்படி ஆலயம் இல்லை என்பவர்கள் துர்க்கை அம்மனின் கையில் திரிசூலம் இருக்கக்கூடிய ஆலயத்திற்கும் சென்று இந்த பரிகாரத்தை செய்யலாம். ஆலயத்திற்கு செல்லும் பொழுது புள்ளிகளில்லாத நல்ல நிலையில் இருக்கக்கூடிய ஆறு எலுமிச்சம் பழங்களை வாங்கிக் கொண்டு செல்ல வேண்டும்.

முதலில் திரிசூலத்தின் மூன்று பாகங்களிலும் ஒவ்வொரு எலுமிச்சம் பழமாக குத்தி வைத்துவிட்டு முழுமனதோடு அம்மனிடம் உங்களிடம் இருக்கக்கூடிய அனைத்து விதமான தீய சக்திகளும் எதிர்மறை ஆற்றல்களும் கண்திருஷ்டிகளும் விலக வேண்டும் எப்பொழுதும் அம்மன் தங்களுடனே இருந்து காத்து ரசிக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்ளுங்கள். பிறகு திரிசூலத்தில் குத்திய அந்த மூன்று எலுமிச்சம் பழங்களையும் எடுத்துவிட்டு நல்ல நிலையில் இருக்கக்கூடிய மூன்று எலுமிச்சம் பழங்களை திருசூலத்தில் குத்தி அம்மனை வழிபாடு செய்துவிட்டு வீட்டிற்கு வரவேண்டும்.

- Advertisement -

வீட்டிற்கு வந்ததும் ஒரு மஞ்சள் துணியில் ஒரு எலுமிச்சம் பழத்தைக் கட்டி நம்முடைய நிலை வாசலில் கட்டிவிட வேண்டும். இன்னொரு எலுமிச்சம் பழத்தை பூஜை அறையில் வைக்க வேண்டும். மற்றொரு எலுமிச்சம் பழத்தை நாம் வெளியில் செல்லும் பொழுது எடுத்துக்கொண்டு செல்ல வேண்டும். இப்படி ஒவ்வொரு வாரமும் நாம் எலுமிச்சம் பழத்தை வைத்து வழிபாடு செய்து எடுத்துக்கொண்டு வரவேண்டும். பழைய எலுமிச்சம் பழத்தை நீர்நிலைகள் போட்டு விடலாம். ஒருவேளை அருகில் நீர் நிலைகள் இல்லை என்னும் பட்சத்தில் ஆலயத்தில் இருக்கக்கூடிய மரத்தடியில் இந்த எலுமிச்சம் பழங்களை வைக்கலாம் அல்லது கால் படாத இடத்தில் போடலாம்.

இதையும் படிக்கலாமே: மன நிம்மதியும் மகிழ்ச்சியும் உண்டாக

இந்த முறையில் அம்மனை முழுமனதோடு நம்பி இந்த எலுமிச்சம் பழ பரிகாரத்தை செய்பவர்களுக்கு அம்மனே உடனிருந்து அனைத்து விதமான தீய சக்திகளில் இருந்து நம்மை காப்பாற்றுவாள் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்