புதினாவை, சமையலுக்கு பயன்படுத்தி விட்டு, அந்த காம்பை தூக்கி வெளியே வீசிடாதீங்க! இப்படி, உங்க வீட்டு தொட்டியில் நட்டு வச்ச, சீக்கிரமே புதினா செடி வளர்ந்து விடும்!

puthina-mint

சமையலுக்காக, கடையிலிருந்து வாங்கி வரும், புதினாவிலிருந்து நம் வீட்டிலேயே, நம் வீட்டில் இருக்கும் சிறிய தொட்டியில் புதினா செடிகளை செழிப்பாக வளர வைத்து விட முடியும். இது ஒரு சுலபமான முறை தான். அது எப்படி என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

Mint leaf(puthina)

நான்கு இனுக்கு புதினாவை எடுத்துக் கொள்ளுங்கள் போதும். அந்த புதினா இனுக்கின், கீழ் பகுதியில் மட்டும் புதினா இலைகளை கிள்ளி எடுத்து கொள்ளுங்கள். அதாவது புதினா இனுக்கில், மேலே மட்டும் இரண்டு அடுக்கு இலைகள் இருந்தால் போதும். கீழ் பக்கமாக இருக்கும் 2 அடுக்கு புதினா இலைகளை பறித்து விடுங்கள். (கீழே காம்பு மட்டும் இருக்க வேண்டும். மேலே புதினா இலைகள் லோடு சேர்த்த காம்பு இருக்க வேண்டும்.)

ஒரு டம்ளரில், புதினா இலைகளின் காம்பு பகுதி மட்டும் நீரில் மூழ்கும் அளவிற்கு, தண்ணீர் எடுத்துக்கொள்ள வேண்டும். நீங்கள் வைத்திருக்கும் அந்த நான்கு புதினா இலைகளின் காம்பானது, தண்ணீரில் மூழ்கியபடி, பத்து நாட்கள் இருக்க வேண்டும். அப்போது அந்த காம்பு பகுதியில், புதினா இனுக்கில், வேர் விட ஆரம்பித்து விடும். புதினாவின் காம்பு பகுதியானது தண்ணீருக்குள்ளேயே இருப்பதனால், புதினா இனுக்கின் மேல் பகுதியில், இருக்கும் இலைகள் வாடாமல் பச்சை பசேலென்ற தான் இருக்கும்.

mint

அந்த டம்ளரில் இருக்கும் தண்ணீரின் நிறம் மாறிவிட்டால் மட்டும், பழைய தண்ணீரை ஊற்றிவிட்டு புதிய தண்ணீர் போட்டு, மீண்டும் அந்த புதினா காம்புகளை தண்ணீரில் போட்டு விடுங்கள். பத்து நாட்கள் கழித்து நன்றாக, புதினா காம்புகளில், வேர் விட்டிருக்கும். வேர் விட்ட அந்த 4 புதினா இனுக்குகளை எடுத்து, அகலமான மண் தொட்டியில், நான்கு திசைகளில், நான்கு ஓட்டையைப் (உங்கள் ஆள்காட்டி விரல் அளவுக்கு, ஒரு குச்சியை வைத்து ஓட்டை போட்டாலே போதும்.) போட்டு ஊன்றி விட வேண்டும்.

- Advertisement -

நடுவில் ஒன்று! அதாவது, ஒரு புதினா இனுக்கை நடுவதற்கும், மற்றவர்களுக்கு புதினா இனுக்கை நடுவதற்கும், கொஞ்சம் இடைவெளி விட்டு விடுங்கள். அதன் பின்பு நன்றாக தண்ணீர் ஊற்றி விட வேண்டும். ஒரே வாரத்தில் அந்த வேரானது மண்ணில் ஊன்றி உங்களது புதினா செடி நன்றாக துளிர் விட ஆரம்பித்துவிடும். இரண்டு வாரங்கள் போதும். உங்கள் செடி நன்றாக வளர்வதை பார்க்கலாம்.

mint-puthina-plant

மூன்றிலிருந்து நான்கு வாரம் முடிவதற்குள் நீங்கள் நட்டு வைத்த நான்கு புதினா இனுக்கு, அதிகப்படியான கிளைகளை விட்டு, படர்ந்து வளர ஆரம்பித்துவிடும். உங்கள் வீட்டில் அகலமான தொட்டி இருந்தால் இதை முயற்சி செய்து பாருங்கள்! தினமும் தேவையான அளவு தண்ணீரை ஊற்ற வேண்டும். பச்சை பசேலென்ற புதினாவை, இனி கடையில் சென்று வாங்க வேண்டாம். உங்கள் வீட்டுத் தொட்டியில் பூச்சி மருந்து இல்லாமல், இயற்கையான முறையில் வளர வைத்து, பலனடையலாம். வாரத்தில் மூன்று நாட்கள் உணவில் புதினாவை சேர்த்து சமைத்து சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது என்பதையும் நினைவு கூர்ந்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
யாரையும் நம்பி ஏமாறாமல் இருக்கணும்னா, இந்த 4 விஷயத்தை தெரிஞ்சுக்கோங்க!

இது போன்று மேலும் தேவையான தகவல்கள் பலவற்றை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have How to grow pudina at home in Tamil. Pudina valarpu. Pudina valarpu in Tamil. Pudina chedi valarpu murai Tamil. Pudina keerai valarpu.