எப்போதும் சுறுசுறுப்பு இல்லாமல் சோர்வு தட்டுகிறதா? உடலில் ரத்தம் குறைவாக இருப்பதும் காரணமாக இருக்கலாம்! நீங்கள் செய்ய வேண்டியது என்ன தெரியுமா?

blood-cells-increase
- Advertisement -

தேவையான ஓய்வு இல்லாவிட்டாலும், சுறுசுறுப்பு என்பது நம் உடலில் இருப்பது இல்லை. அது மட்டும் அல்லாமல் உடலில் ரத்த அணுக்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், இப்படி அடிக்கடி சுறுசுறுப்பு இல்லாமல் சோர்வு தட்டும். ரத்தம் குறைந்தால் வரக்கூடிய ஆபத்துக்கள் என்னென்ன? இதனை ஈசியாக சரி செய்வது எப்படி? என்னென்ன சாப்பிடலாம்? எப்படி சாப்பிடலாம்? என்பதை தான் இந்த ஆரோக்கியம் சார்ந்த பதிவின் மூலம் நாம் அறிந்து கொள்ள போகிறோம்.

நம் உடலில் ரத்த சிவப்பணுக்கள் மற்றும் ரத்த வெள்ளை அணுக்கள் காணப்படுகின்றன. இதில் ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை குறைந்தால் உடல் நிலையில் பல்வேறு மாற்றங்களும், அதனால் சில பாதிப்புகளும் உண்டாகக்கூடும். இவற்றில் இருந்து எளிதாக தப்பித்து, நம்முடைய ரத்தத்தை அதிகரிக்க செய்வது எப்படி? ரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை ஆணாக இருந்தால் 14g/dl இல் இருந்து 18g/dl வரையும், பெண்ணாக இருந்தால் 12g/dl இல் இருந்து 16g/dl வரையும் இருக்க வேண்டும். இது சிலருக்கு கொஞ்சம் அதிகமாகவும் இருக்கலாம் ஆனால் குறைவாக இருப்பதன் மூலம் சில அறிகுறிகளை சந்திக்க வாய்ப்புகள் உண்டு.

- Advertisement -

அடிக்கடி மயக்கம் வருதல் போன்ற உணர்வு ஏற்படும். ரத்த அணுக்களின் எண்ணிக்கை கூடுதலாக குறையும் பொழுது உடலில் கொஞ்சம் கூட சுறுசுறுப்பு இல்லாமல் எப்பொழுதும் படுத்துக் கொண்டே இருக்க வேண்டும் என்கிற உணர்வை ஏற்படுத்தும். அதிக அளவு சோர்வு இருந்தால், நீங்கள் முதலில் இதனை சோதனை செய்து கொள்ளலாம். டாக்டரிடம் சென்றாலே முதலில் நாக்கை நீட்ட சொல்வார்கள் அல்லது கண்களை பரிசோதித்து பார்ப்பார்கள். இப்படி பார்க்கும் பொழுதே அவர்களுக்கு உங்களுடைய உடலில் ரத்த சோகை இருக்கிறதா? என்பது தெரிந்து விடுகிறது.

ரத்த சோகை உள்ளவர்கள் இரும்பு சத்து நிறைந்துள்ள உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும். அது மட்டும் அல்லாமல் இதனுடன் பி காம்ப்ளக்ஸ் மற்றும் விட்டமின் சி எடுத்துக் கொண்டால் தான் அதனுடைய முழு பலனும் நமக்கு கிடைக்கும். நாம் ரத்த சோகை இருக்கிறது என்பதற்காக இரும்பு சத்துள்ள உணவுப் பொருட்களையும், ரத்தம் ஊறக் கூடிய இயற்கை பொருட்களையும் எடுத்துக் கொள்கிறோம். குறிப்பாக மாதுளை பழம், பீட்ரூட், முருங்கை கீரை, பேரிச்சை போன்றவற்றை தொடர்ந்து சாப்பிடுகிறோம், ஆனால் இது மட்டும் போதாது.

- Advertisement -

இரும்பு சத்துள்ள உணவுப் பொருட்களுடன் சிட்ரஸ் வகை புளிப்புள்ள பழங்களையும் நாம் சாப்பிட வேண்டும். அப்பொழுதுதான் இது முழுமையாக வேலை செய்யும். ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவும். நாம் வெறுமனே இரும்பு சத்தை எடுத்துக் கொள்வதால், அவ்வளவு எளிதாக ரத்த சோகையில் இருந்து மீண்டு விட முடியாது. எனவே இரும்பு சத்துள்ள உணவுப் பொருட்களுடன், சிட்ரஸ் நிறைந்துள்ள எலுமிச்சை, பெரிய நெல்லிக்காய், ஆரஞ்சு போன்ற பழங்களையும் சேர்த்து சாப்பிட வேண்டும்.

இதையும் படிக்கலாமே:
இதமான தூக்கம் வருவதற்கு, தூக்கமின்மை பிரச்சனையை எதிர்கொள்வதற்கு சாப்பிட வேண்டிய ஒரு பொருள் என்ன? இதை சாப்பிட்டால் உடனே நல்லா தூக்கம் வருமா என்ன?

இவற்றை சர்க்கரை சேர்க்காமல் ஜூஸ் போட்டு குடிக்கலாம். இதனுடன் மற்ற இரும்பு சத்துள்ள பொருட்களையும் தொடர்ந்து எடுத்துக் கொள்ள வேண்டும். அசைவம் சாப்பிடுபவர்கள் முட்டையின் மஞ்சள் கரு, ஆட்டு மண்ணீரல் போன்றவற்றை அடிக்கடி எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த மண்ணீரலில் ரத்த சோகையை குணப்படுத்தக்கூடிய தன்மை உண்டு. இது சற்று விலை அதிகம் என்றாலும், வாரம் இரண்டு முறை தொடர்ந்து சாப்பிட்டு வர ரொம்ப எளிதாக ரத்த சோகையிலிருந்து மீண்டு விடலாம்.

- Advertisement -