இதமான தூக்கம் வருவதற்கு, தூக்கமின்மை பிரச்சனையை எதிர்கொள்வதற்கு சாப்பிட வேண்டிய ஒரு பொருள் என்ன? இதை சாப்பிட்டால் உடனே நல்லா தூக்கம் வருமா என்ன?

sleeping-images
- Advertisement -

தூக்கமின்மை நோயால் இன்று அவதிப்படுபவர்கள் ஏராளம்! இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும், மிக முக்கிய காரணமாக இருப்பது சூழல் மாற்றமே ஆகும். இரவில் படுத்தவுடன் நிம்மதியான தூக்கம் வருவதற்கு நாம் சாப்பிட வேண்டிய ஒரு பொருள் என்ன? இதை சாப்பிட்டால் இனிமையான தூக்கம் வருமா? என்கிற கேள்விகளுக்கு பதிலை தான் இந்த ஆரோக்கியம் சார்ந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

தூக்கம் இன்மைக்கு மிக முக்கிய மூன்று காரணங்கள் உண்டு. முதலாவதாக ‘கேட்ஜெட்ஸ்’ மொபைல் போன், லேப்டாப், டிவி போன்றவை இரவு நேரங்களில் பயன்படுத்தவே கூடாது. இதை எத்தனை பேர் கூறினாலும், நமக்கு அதைப் பற்றிய கவலையே இல்லாமல் தொடர்ந்து செய்து கொண்டு தான் இருக்கிறோம். இதனால் கண் பார்வை கோளாறுகள் வருவதோடு, தூக்கமின்மை பிரச்சனை அதிகரிக்கிறது. இதனால் உடலில் பல்வேறு மாற்றங்கள் நிகழும், ஆரோக்கியத்தில் குறைபாடுகள் உண்டாகும், ஆயுள் குறையும்.

- Advertisement -

இரண்டாவதாக ‘ரூம் டெம்பரேச்சர்’ நம்முடைய அறையின் டெம்பரேச்சர் குளிர்ந்த நிலையிலோ அல்லது அதிக வெப்பமான நிலையிலோ இருந்தால் நம்மால் சரியாக உறங்க முடிவதில்லை. சரியான நிலையில் உறங்க சரியான டெம்பரேச்சர் தேவை. இதை மாற்றி அமைத்தால் உங்களுடைய பிரச்சனை பாதி தீர்ந்து விட்டதாகவே நீங்கள் எடுத்துக் கொள்ளலாம்.

மூன்றாவதாக ‘ஓவர் திங்கிங்’ அதாவது எதைப் பற்றியாவது அதிக அளவு சிந்தித்துக் கொண்டே இருப்பதும், தூக்கமின்மைக்கு ஒரு காரணமாக இருக்கிறது. எப்பொழுதும் பிரச்சனைகளை பற்றிய சிந்தனைகளை தலைக்குள் ஓட விடக்கூடாது. இது மூளையின் செயல்பாட்டை அதிகரித்து மூளைக்கு தேவையான ஓய்வை கெடுத்து விடுகிறது. இதனால் தூக்கமின்மை உண்டாகிறது.

- Advertisement -

சுற்று சூழலிலும், மனதளவிலும், உடலளவிலும் நீங்கள் உங்களை மாற்றம் செய்தால் ஒழிய நிம்மதியான தூக்கத்தை எவ்வளவு விலை கொடுத்தாலும் உங்களால் வாங்கவே முடியாது. ஒரு நாள் சராசரியான ஓய்வு தான் அடுத்த நாளைய சுறுசுறுப்பை தேர்வு செய்கிறது. நீங்கள் ஒரு நாள் தூங்காமல் இருந்தால், அது அடுத்த நாளையும் சேர்த்து பாதிக்கிறது. இது அடுத்தடுத்து தொடர்கிறது என்பதை மறவாதீர்கள். காஃபின் சேர்த்த உணவுகளை தவிருங்கள். டீ. காஃபி, கோக் தொடாதீர்கள்!

சரி, இப்பொழுது இந்த தூக்கம் நன்கு வருவதற்கு என்ன செய்ய வேண்டும்? என்று பார்ப்போம். ‘ஸ்டாப் ஓவர் திங்கிங்’ தயவுசெய்து அதீத சிந்தனையை ஓரங்கட்டுங்கள். பிரச்சனை இல்லாத மனிதன் இந்த உலகத்தில் இருக்கவே முடியாது. ஒரு பிரச்சனைக்கான தீர்வை நீங்கள் யோசிக்கலாமே ஒழிய, அந்த பிரச்சனையை பற்றிய கவலையை யோசிக்க கூடாது. தீர்வு இல்லாத பிரச்சனைகள் இருக்க முடியாது. என்ன செய்து பிரச்சினையை தீர்க்கலாம்? என்று யோசிக்க வேண்டும் அல்லது வருவது வரட்டும் என்று அதைப் பற்றிய சிந்தனையை தூக்கி எறிந்து விட்டு நகர வேண்டும். இந்த இரண்டு ஆப்ஷன்களை தவிர நமக்கு வேறு வழியே கிடையாது.

இதையும் படிக்கலாமே:
இரவு தூங்கும் முன்னர் இந்த 5 விஷயங்களை செய்து பாருங்க! இனி டிப்ரஷன், சோர்வு என்ற பேச்சுக்கே இடமில்லை!

அடுத்ததாக கையில் ஒரு வாழைப்பழத்தை எடுத்துக் கொள்ளுங்கள். லேசாக கொஞ்சம் சீரகத்தை கடாயில் போட்டு வறுத்து, அதை பவுடராக மிக்ஸியில் போட்டு அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். அரைத்த இந்த சீரக பவுடரை வாழைப்பழத்திற்குள் வைத்து அப்படியே மென்று சாப்பிட்டு விடுங்கள். பிறகு ஒரு டம்ளர் பாலில், அரை ஸ்பூன் கசகசாவை அரைத்து சேர்த்து குடித்து விடுங்கள். சிறிது நேரம் ஜீரணத்திற்கு இடைவெளி விட்டுவிட்டு ‘கேட்ஜெட்ஸ்’ எதுவும் பயன்படுத்தாமல் தூங்கி பாருங்கள், உண்மையிலேயே உங்களை அறியாமலேயே சிறிது நேரத்தில் ஆழ்ந்த தூக்கத்திற்கு சென்று விடுவீர்கள்.

- Advertisement -