மழைக்காலத்தில் துணிமணிகள் ஈரப்பத வாசனை இல்லாமல் உலர்வாக இருக்கவும், நல்ல மணம் வீசவும் சூப்பரான 10 டிப்ஸ்!

clothes-soap
- Advertisement -

மழைக்காலம் வந்து விட்டாலே கூடவே துணிமணிகளை எங்கே காய வைப்பது? என்கிற கவலையும் வந்து விடுகிறது. வீட்டிற்குள் காய வைத்தாலும் காய வைத்த துணிமணிகளின் மீது ஈரப்பதமும், ஈரப்பத வாசமும் இருந்து கொண்டே இருக்கிறது. காய்ந்த துணிகளை பீரோவில் அல்லது கப்போர்டில் அடுக்கி வைத்தாலும் அதில் இருக்கும் ஈரப்பதமும், துணிமணிகளுடன் ஒட்டிக் கொண்டு விடுகிறது. இப்படி மழைக்காலத்தில் துணிமணிகளை ஈரப்பதம் இல்லாமல் பராமரிக்கும் விதத்தை பற்றியும், நல்ல வாசமுடன் இருக்கவும் எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டிய 10 டிப்ஸ் இதோ உங்களுக்காக!

clothes-on-bed

குறிப்பு 1:
அடுக்கி வைத்திருக்கும் துணிமணிகளுக்கு இடையில் பழைய சோப்பு துண்டுகளை ஒரு டிஷ்யூ பேப்பரில் வைத்து மடித்து இடை இடையே சொருகி வைக்கலாம். இதனால் நீங்கள் ஒவ்வொரு முறையும் கபோர்டு அல்லது பீரோவை திறந்து மூடும் பொழுது நல்ல வாசம் உடன் இருக்கும்.

- Advertisement -

குறிப்பு 2:
அடுக்கி வைத்திருக்கும் துணிமணிகள் ஈரப்பதம் உறிஞ்சாமல் இருக்க கரித்துண்டை பேப்பரில் மடித்து அல்லது டிஷ்யூ பேப்பரில் மடித்து ஆங்காங்கே செருகி வைக்கலாம். கரித்துண்டு ஈரப்பதத்தை உறிந்து கொள்ளும் என்பதால் துணிமணிகளுக்கு பாதுகாப்பு இருக்கும். சிலிக்கான் ஜெல் பாக்கெட்டுகள் இருந்தாலும் போட்டு வைக்கலாம்.

குறிப்பு 3:
துணிமணிகளில் ஈரப்பதமான வாசம் வராமல் இருக்க சிறிதளவு கம்ஃபோர்ட் உடன் தண்ணீர் கலந்து ஸ்ப்ரே பாட்டிலில் அடைத்து லேசாக தெளித்து விடலாம். வெள்ளை துணிமணிகள் மற்றும் பாட்டு உடைகளை மட்டும் விட்டுவிட்டு மற்ற இடங்களில் ஸ்ப்ரே செய்யுங்கள். இதனால் ஒவ்வொரு முறை திறக்கும் போதும் ஈரப்பத வாசனை இல்லாமல் துணிகள் பிரஷ்ஷாக இருக்கும்.

- Advertisement -

குறிப்பு 4:
ஈரப்பதத்தை உரிந்து கொள்ள அடுக்கி வைத்திருக்கும் துணிமணிகளுக்கு இடையில் ஒரு டிஷ்யூ பேப்பரில் கொஞ்சம் அரிசி, பருப்புகளை போட்டு மடித்து வைக்கலாம். இவை காற்றில் இருக்கும் ஈரப்பதத்தை உறிஞ்சி வைத்துக் கொள்வதால் துணிமணிகள் பாதுகாப்பாக இருக்கும்.

basmati-rice

குறிப்பு 5:
துணிமணிகள் வைத்திருக்கும் கபோர்டு அல்லது பீரோ ஒவ்வொரு முறை திறக்கும் போதும் நல்ல வாசம் வீச பழைய சோப்பு டப்பாக்கள், ஊதுவர்த்தி, தீர்ந்து போன செண்ட் பாட்டில்கள் போன்றவற்றை வைக்கலாம். துணிமணிகள் மட்டுமல்லாமல் புத்தகம் வைத்து இருக்கும் இடம், குழந்தைகள் பயன்படுத்தும் பேக் போன்றவற்றிலும் வைக்கலாம்.

- Advertisement -

குறிப்பு 6:
அதிகம் பயன்படுத்தாத பட்டு புடவைகள் மீது தான் அதிக ஈரப்பதமான வாசனை வரும். எனவே சோப்பை தேங்காய் துருவும் துருவியில் துருவி அதனை ஒரு டிஷ்யூ பேப்பரில் மடித்து பட்டுப் புடவைகல்லுக்குள் வைத்து விட்டால் ஈரப்பதம் இல்லாமலும், நல்ல வாசமுடனும் இருக்கும். அதிகம் உபயோகப்படுத்தாத துணிமணிகளுக்குள் இப்படி செய்து வைப்பது சிறப்பு.

Elakkai

குறிப்பு 7:
துணி மணிகளுக்கு இடையே ஈரப்பதம் இல்லாமல் இயற்கையான வாசனை கிடைக்க நம்முடைய சமையலறையில் இருக்கும் கிராம்பு, பட்டை, ஏலக்காய் போன்ற பொருட்களையும் இது போல் ஒரு டிஷ்யூ பேப்பரில் மடித்து ரப்பர் பேண்ட் போட்டு கட்டி ஆங்காங்கே வைத்துக் கொள்ளலாம்.

குறிப்பு 8:
ஈரப்பதத்தை உறியும் சக்தி ஆப்பசோடாவிற்கு உண்டு. எனவே ஒரு பிளாஸ்டிக் டப்பாவில் ஆப்ப சோடாவை கொஞ்சம் போட்டுக் கொண்டு அதில் உங்களுக்கு பிடித்த வாசனையுள்ள ஏதாவது ஒரு எசன்ஸ் கலந்து ஓட்டை போட்ட மூடியை போட்டு மூடி வைத்து விடலாம்.

baking-soda

குறிப்பு 9:
நீங்கள் மர கப்போர்டு, பீரோ போன்றவற்றை உபயோகித்தால் மாய்ஸ்ரைசிங்க் லோஷன் கொஞ்சம் ஆங்காங்கே தடவி வைத்தால் நல்ல வாசமாகவும், ஈரப்பதத்தால் பூஞ்சை போன்ற பாதிப்புகள் ஏற்படாமலும் பாதுகாப்பாக இருக்கும்.

குறிப்பு 10:
உங்களிடம் டீ பேக்ஸ் இருந்தால் அதையும் ஆங்காங்கே துணிமணிகளுக்கு இடையில் போட்டு வைத்தால் ஈரப்பதத்தை உரிந்து கொண்டு நமக்கு இயற்கையான நறுமணத்தைக் கொடுக்கும்.

- Advertisement -