பெற்றோர்களாக இருக்கக்கூடிய ஒவ்வொருவரும் தங்கள் பிள்ளை தாங்கள் சொல்லும் பேச்சை கேட்பதே இல்லை என்ற ஒரு குறையை கூறிக் கொண்டுதான் இருக்கிறார்கள். அன்றைய காலத்தில் இருந்த பெற்றோர்களின் வளர்ப்பு வேறு. இன்றைய காலத்தில் இருக்கக்கூடிய பெற்றோர்களின் வளர்ப்பு என்பது வேறு. அன்றைய காலத்தில் பெற்றோர் முன்பாக பேசக்கூட தயங்கிய பிள்ளைகளாக இருந்த நாம் இப்பொழுது பெற்றோர்களாக மாறும்பொழுது நம்முடைய பிள்ளைகள் நாம் சொல்லும் பேச்சைக் கேட்காமலும், மதிக்காமலும் செயல்படுவதால் பலவிதமான மன வருத்தத்திற்கும், மன அழுத்தத்திற்கும் ஆளாகி இருப்போம். அப்படிப்பட்ட பெற்றோர் தங்கள் பிள்ளைகளை சிறப்பாக வளர்ப்பதற்கு சங்கடஹர சதுர்த்தி நாளன்று செய்ய வேண்டிய ஒரு வழிபாட்டை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.
பிள்ளைகள் பெற்றோர் பேச்சை கேட்க
பொதுவாக காரிய தடைகள் விலக வேண்டும் என்றால் விநாயகப் பெருமானை வழிபாடு செய்வோம். எந்த ஒரு காரியத்தை தொடங்கினாலும் அந்த காரியம் சிறப்பாக நடைபெற வேண்டும் என்றாலும் விநாயகப் பெருமானை வழிபாடு செய்வோம். அதேபோல்தான் நம்முடைய பிள்ளைகள் பெற்றோர் பேச்சை கேட்பதற்கும், பிள்ளைகள் படிப்பில் சிறந்து விளங்குவதற்கும், பிள்ளைகளின் வாழ்க்கை சிறப்பாக இருப்பதற்கும் விநாயகப் பெருமானை நாம் வழிபாடு செய்யலாம். அதிலும் குறிப்பாக சங்கடகர சதுர்த்தி நாள் அன்று நாம் செய்யக்கூடிய இந்த ஒரு எளிமையான வழிமுறை நம் பிள்ளைகளின் வாழ்க்கையை மாற்றும் என்பதில் ஐயமே இல்லை.
ஒவ்வொரு மாதத்திலும் தேய்பிறையில் வரக்கூடிய சதுர்த்தியை தான் நாம் சங்கடஹர சதுர்த்தி என்று கூறுகிறோம். இந்த நாளில் விரதம் இருந்து விநாயகப் பெருமானை வழிபாடு செய்யும்பொழுது நம்முடைய சங்கடங்கள் அனைத்தும் நீங்கும் என்று கூறியும் கேள்விப்பட்டிருக்கிறோம். பலரும் அனுபவரீதியாக உணர்ந்தும் இருக்கிறார்கள். அப்படிப்பட்ட சங்கடஹர சதுர்த்தி நாளன்று நம்முடைய பிள்ளைகள் சிறப்பாக வாழ்வதற்கும் நல்ல பிள்ளைகளாக இருப்பதற்கும் விநாயகப் பெருமானுக்கு நாம் சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
சங்கடஹர சதுர்த்தி நாளன்று மாலை நேரத்தில் அருகில் இருக்கக்கூடிய விநாயகர் ஆலயத்தில் அபிஷேகம் கண்டிப்பான முறையில் நடைபெறும். அந்த அபிஷேகத்தில் கலந்து கொள்ள வேண்டும். அந்த அபிஷேகத்திற்கு தேவையான பொருட்களையும், அலங்காரத்திற்கு தேவையான பொருட்களையும், வஸ்திரங்களையும் வாங்கி தர வேண்டும். இதோடு நாம் நம் வீட்டில் இருந்து எட்டு கொழுக்கட்டைகளை தயார் செய்து எடுத்துக்கொண்டு செல்ல வேண்டும்.
இந்த கொழுக்கட்டைகள் பூரண கொழுக்கட்டையாகவும், பிடி கொழுக்கட்டையாகவும் இருக்கலாம். ஆனால் 8 என்ற எண்ணிக்கையில் எடுத்துக் கொண்டு போக வேண்டும். அங்கு இருக்கக்கூடிய விநாயகப் பெருமானுக்கு நெய்வேத்தியமாக வைத்து தங்கள் பிள்ளைகளின் பெயரில் அர்ச்சனை செய்ய வேண்டும். பிறகு நெய்வேத்தியமாக வைத்த அந்த கொழுக்கட்டைகளை ஆலயத்திற்கு வரக்கூடிய குழந்தைகளுக்கு தானமாக தர வேண்டும். இப்படி செய்வதன் மூலம் நம்முடைய பிள்ளைகள் நாம் சொல்வதைக் கேட்டு நல்ல பிள்ளைகளாக ஆவார்கள். அவர்களுடைய எதிர்காலம் சிறப்பாக இருக்கும்.
இதையும் படிக்கலாமே:
குழந்தைகளின் எதிர்காலம் சிறப்பாக இருக்க வேண்டும் என்று எந்த பெற்றோருக்கு தான் ஆசை இருக்காது. அப்படி ஆசை இருக்கக் கூடிய பெற்றோர்கள் ஒவ்வொருவரும் சங்கடஹர சதுர்த்தி நாளன்று இந்த முறையில் விநாயகரை வழிபாடு செய்து தங்கள் பிள்ளைகளுக்கு சிறப்பான எதிர்காலத்தை அமைத்துக் கொடுக்கலாம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.