உங்க வீட்ல ரேஷன் அரிசி இருக்கா? ரேஷன் அரிசியில் சுலபமாக, வீட்டிலேயே பொரி செய்வது எப்படி?

fry-pori

நம்மில் பலபேர் வீடுகளில் கட்டாயம் ரேஷன் அரிசி இருக்கும். அந்த ரேஷன் அரிசியை வைத்து வீட்டிலேயே சுலபமான முறையில் பொரி எப்படி செய்வது? அந்தப் பொரியை வைத்து மசாலா பொரி சுலபமாக எப்படி போடுவது? என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். பத்து ரூபாய் கொடுத்தால், கடையிலிருந்து நம்மால் சுலபமாக இந்த பொரியை, வாங்க முடியும். அந்தப் பொரியை நம் கையாலேயே, நம் பிள்ளைகளுக்கு தயார் செய்து கொடுத்தால், அதனுடைய மகிழ்ச்சி இன்னும் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும். ரேஷன் அரிசியில் மொரு மொரு பொரி எப்படி செய்வது பார்த்துவிடலாமா?

pori

முதலில் ரேஷன் அரிசியில் இருக்கும் கல், கருப்பு அரிசி, இவைகளை நீக்கி புடைத்து, நன்றாக சுத்தம் செய்து வைத்துக்கொள்ளுங்கள். அதன் பின்பாக, 4 டேபிள் ஸ்பூன் அளவு தண்ணீரை எடுத்துக்கொண்டு, அதில் 3 சிட்டிகை அளவு உப்பை சேர்த்து, உப்பை நன்றாக கரைத்துக் கொள்ளுங்கள். ஒரு ஆழாக்கு, அரிசியை எடுத்துக் கொண்டால், அதற்கு தேவையான உப்பு போட்டுக்கொள்ள வேண்டும்.

அரிசியை அகலமான பாத்திரத்தில் எடுத்து கொண்டு, தயார் செய்து வைத்திருக்கும் உப்புத் தண்ணீரை அரிசியில் தெளித்து, உங்கள் கைகளால், நன்றாக பிசைந்து விடுங்கள். அதாவது அந்த உப்புத்தண்ணீர் எல்லா அரிசியிலும் பரவலாக பட வேண்டும், அதற்காகத் தான். எல்லா உப்பு தண்ணீரையும் அதில், ஊற்ற வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை. உங்களுக்கு தேவையான அளவு உப்புத் தண்ணீரை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

rice-bugs

உப்பு தண்ணீர் பட்ட அந்த அரிசியை நன்றாக வெயிலில் போட்டு காய வைக்கலாம். நேரம் இல்லாதவர்கள், ஒரு கடாயில் போட்டு அந்தத் தண்ணீர் போகும் அளவிற்கு சூடுபடுத்தி எடுத்துக் கொண்டால் போதும். அதிகமாக தீவைத்து வருத்தீர்கள் என்றால், அரிசி பொரி அரிசி ஆக மாறிவிடும். அந்த தண்ணீர் காயும் அளவிற்கு, சூடுபடுத்தி எடுத்தால் மட்டும் போதும். அரிசி, அரிசி ஆகவேதான் இருக்க வேண்டும். நன்றாக காய்ந்த கடாயில் அரிசியை கொட்டினீர்கள் என்றால், பின்பு அது பொரி அரிசி ஆக மாறிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இப்போது நம் கையில் உப்பு தண்ணீர் தெளித்து, ஈரப்பதம் காய்ந்த அரிசி தயாராக உள்ளது அல்லவா? ஒருபுறம் அது அப்படியே இருக்கட்டும். ஆத்து மணலை நன்றாக சலித்து, நைசான மணலை சிறிதளவு எடுத்துக்கொள்ள வேண்டும். அதை இரும்பு கடாயில் போட்டு நன்றாக சூடு படுத்துங்கள். அதன் பின்பாக உங்கள் கையில் தயாராக இருக்கும் அரிசியை மணலில் போட்டு வருகிறீர்கள் என்றால், அரிசி படபடவென்று பொரிந்து பொரியாக மாறிவிடும்.

frying-pori

உங்களுக்கு ஆற்றுமணல் கிடைக்கவில்லை என்றாலும், பரவாயில்லை. ஒரு பாக்கெட் தூள் உப்பு வாங்கிக் கொள்ளுங்கள். அதை இரும்பு கடாயில் போட்டு, நன்றாக சூடுபடுத்த வேண்டும். அதன்பின்பு அரிசியை, சூடாக இருக்கும் தூள் உப்பில் போட்டு வறுத்தெடுத்தீர்கள், என்றால் அரிசி நன்றாக பொரிந்து, பொரியாக மாறிவிடும்.

salladai

அரைக் கைப்பிடி அளவு அரிசியை போட்டு, வறுத்து வறுத்து எடுத்து, சல்லடையில் போட்டு சலித்து எடுத்துக்கொள்ள வேண்டும். பெரிய கண் உள்ள சல்லடையில் சலித்து எடுத்தால், பொரி ஆற்றுமணல் இல்லாமலும், உப்பு இல்லாமலும் சுத்தமாக கடையில் வாங்கிய பொரி போலவே நமக்கு கிடைத்துவிடும்.

masala-pori

இதே தூள் உப்பை நன்றாக சூடுபடுத்தி, அப்பளம், முறுக்கு வத்தல், கஞ்சி வத்தல், வீல் சிப்ஸ், பேட் வத்தல், இப்படி எல்லா வகையான வத்தளையும், பொரித்தெடுக்க முடியும். எப்படி என்றால், கருப்பு கொண்டை கடலையை, நன்றாக சூடாக இருக்கும் உப்பில் போட்டீர்கள் என்றால், உங்களுக்கு பொரிந்த உப்புக்கடலை கிடைக்கும். நீங்கள் ஒருமுறை உங்கள் வீட்டில் முயற்சி செய்து. (இந்தக் கல் உப்பை ஒருமுறை பயன்படுத்திவிட்டு வீணாக்க வேண்டாம். நன்றாக ஆறவைத்து, ஒரு டப்பாவில் போட்டு வைத்துக் கொள்ளுங்கள். அதை மீண்டும் சூடுபடுத்தி, மீண்டும் வறுப்பதற்கு பயன்படுத்திக்கொள்ளலாம்.)

salt-fry

சரி. உங்கள் வீட்டில் நீங்கள் தயார் செய்த அந்த பொரியை வைத்து மசாலா பொரி எப்படி செய்வது? ஒரு கப் அளவு பொரியை அகலமான பாத்திரத்தில் போட்டுக் கொள்ளுங்கள். தேவையான அளவு வெங்காயம் பொரியாக நறுக்கி அந்த பொரியில் போட்டுக் கொள்ளுங்கள். சிறிதளவு மாங்காய் துருவல், சிறிதளவு கேரட் துருவல், போட்டுக்கொள்ள வேண்டும். உங்கள் வீட்டில் வேர்க்கடலை இருந்தால் அதையும் சிறிதளவு சேர்த்துக் கொள்ளலாம். அதன் பின்பாக ஒரு டேபிள்ஸ்பூன் அளவு நல்லெண்ணெயை ஊற்றி எல்லா பொருளிலும் படும் அளவிற்கு கலக்கி விட்ட பின்பு, 2 சிட்டிகை உப்பு, 1/4 ஸ்பூன் மிளகாய்த்தூள், சேர்த்து நன்றாக கலந்து விடவேண்டும்.

salt-fry1

இறுதியாக தேவையான அளவு எலுமிச்சைச் சாறு பிழிந்து, மல்லித்தழை தூவி கலந்து, பரிமாறினால் சுவையான மசாலா பொரி ரெடி. எலுமிச்சைச்சாறு பிழிந்து உடனே சாப்பிட்டு விடவேண்டும். எடுத்து வைத்தீர்கள் என்றால் பொரி நமத்து போய்விடும். உங்கள் கையாலேயே வறுத்தெடுத்த பொரி, நீங்களே தயாரித்த மசாலா பொரி! உங்களுக்கு இந்த குறிப்பு பிடித்திருந்தால் உங்கள் வீட்டில் முயற்சி செய்து பாருங்கள்!

இதையும் படிக்கலாமே
பிள்ளையாரை மட்டுமல்ல, இவரையும் மஞ்சள் பிடித்து வைத்து வணங்கி வந்தால் சகல தோஷங்களும் நீங்கி குடும்பத்தில் முன்னேற்றம் ஏற்படும் தெரியுமா?

இது போன்ற மேலும் பல சமையல் சார்ந்த குறிப்புகளை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

English Overview:
Here we have How to Make Puffed Rice. How to Make Puffed Rice at Home. Puffed Rice Recipe at Home. Puffed Rice in Tamil