சப்பாத்தி மாவு பிசையும் போது இந்த 1 பொருளை மட்டும் சேருங்க போதும். லேயர் லேயராக சப்பாத்தியை சொடக்கு போடும் நேரத்தில் சுட்டு அடுக்கி விடலாம்.

rotti1
- Advertisement -

மிருதுவாக சப்பாத்தி செய்வது என்பது கொஞ்சம் கஷ்டமான விஷயம் தான். அதிலும் இப்படி லேயர் லேயராக சப்பாத்தியை சுடுவது என்பது ரொம்ப ரொம்ப கஷ்டம். இந்த சப்பாத்தியை சுலபமாக செய்வதற்கு ஏதாவது ஐடியா கிடைத்தால் நல்லாத்தான் இருக்கும் என்று யோசிக்கும் இல்லத் தரசிகளுக்காக இந்த சமையல் குறிப்பு. இந்த சப்பாத்தியை சுடுவது அவ்வளவு கஷ்டம் இல்லைங்க. ரொம்ப ரொம்ப ஈசிதான். மாவு பிசைவதில் தான் பக்குவமே இருக்கிறது. மாவில் இந்த ஒரு பொருளை மட்டும் சேர்த்து, பக்குவமாக மாவை பிசைந்து விட்டால் போதும். சப்பாத்தியை மடமடவென தேய்த்து சுட்டுவிடலாம். ஆறிய பிறகும் கூட சப்பாத்தி லேயர் லேயராக சாஃப்ட்டாக நமக்கு இருக்கும். வாங்க நேரத்தை கடத்தாமல் அந்த ரெசிபி என்ன என்று பதிவை முழுமையாக படித்து தெரிந்து கொள்வோம்.

செய்முறை

இந்த லேயர் சப்பாத்தி செய்ய முதலில் நாம் ஸ்பெஷல் ஆக சேர்க்க வேண்டிய அந்த ஒரு பொருள் என்ன, அதை எப்படி சேர்க்க வேண்டும் என்று தெரிந்து கொள்வோம். ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் வடித்த சாதம் 2 கப், அளவு சேர்த்துக் கொள்ளவும். எந்த கப்பில் சாதத்தை அளந்தீங்களோ அதே கப்பில் 1 கப் அளவு தண்ணீரை ஊற்றி, இந்த சாதத்தை நைசாக விழுது போல அரைத்துக் கொள்ளுங்கள். இது அப்படியே இருக்கட்டும். (வடித்த சாதம் தான் அந்த ஸ்பெஷல் ஐட்டம்).

- Advertisement -

அடுத்து ஒரு அகலமான பாத்திரத்தில் 4 கப் அளவு, மைதா மாவு அல்லது கோதுமை மாவு சேர்த்து, தேவையான அளவு உப்பு போட்டு, 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி இந்த மாவை நன்றாக கலந்து விடுங்கள். (சாதம் அளந்து எடுத்த அதே கப்பில் இந்த மைதா மாவும் அளக்கப்பட வேண்டும்).

எண்ணெயும் மாவும் நன்றாக கலந்து வந்த உடன், மிக்ஸி ஜாரில் அரைத்து வைத்திருக்கும் சாதத்தின் விழுதை இதில் ஊற்றி, ஒரு கரண்டியை வைத்து நன்றாக மீண்டும் கலந்து கொடுங்கள். தண்ணீர் எதுவும் ஊற்ற வேண்டாம். இந்த சாதம், சாதத்தில் இருக்கும் தண்ணீரே போதுமானது. மாவும் நாம் ஊற்றிய இந்த சாத விழுதும் ஓரளவுக்கு கலந்து வந்தவுடன் உங்கள் கையை கொண்டு இந்த மாவை சாஃப்ட்டாக பிசைந்து கொடுங்கள்.

- Advertisement -

இறுதியாக கையில் ஒட்டிப் பிடித்த மாவை எல்லாம் நீக்கிவிட்டு, கையில் எண்ணெய் தடவி மீண்டும், பிசைந்து வைத்திருக்கும் சப்பாத்தி மாவை, ஒரு பலகை மேல் போட்டு சாஃப்டாக ஐந்து நிமிடம் சப்பாத்தி மாவை பிசைந்து கொடுக்க வேண்டும். பிசைந்து சப்பாத்தி மாவை ஒரு கிண்ணத்தில் வைத்து மேலே 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, தடவி தட்டு போட்டு மூடி 1/2 மணி நேரம் ஊற வைத்தால் போதும்.

ஊறிய அந்த மாவை மீண்டும் எடுத்து ஒரு பளகையின் மேல் வைத்து உங்கள் கையில் எண்ணெயை பூசிக்கொண்டு, ஐந்து நிமிடம் மாவை மசாஜ் செய்தபடி பிசையுங்கள். பிறகு மாவை சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டி தயார்படுத்திக் கொள்ளுங்கள். மாவு டிரையாகி விடக்கூடாது. மீதம் இருக்கும் மாவின் மேல் ஒரு ஈர துணி போட்டு மூடி விடுங்கள்.

- Advertisement -

இப்போது சப்பாத்தியை திரட்ட வேண்டும். அதாவது தேய்க்க வேண்டும். சப்பாத்தி பலகையின் மேல் மைதா மாவு அல்லது கோதுமை மாவு தூவி, வழக்கம் போல ஒரு உருண்டை சப்பாத்தி மாவை எடுத்து வைத்து வட்டமாக தேயுங்கள். வட்டமாக தேய்த்து விட்ட சப்பாத்தி மாவின் மேலே முழுவதும் எண்ணெயை தடவி, கொஞ்சம் மாவு தூவி, உங்கள் கையை வைத்து அந்த மாவை எல்லா இடங்களிலும் படும்படி தடவி விடுங்கள்.

இந்த வட்ட வடிவில் இருக்கும் சப்பாத்தியை மடிக்க வேண்டும். உங்கள் விருப்பம் தான். நீங்கள் எத்தனை லேயராக மடிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்களோ, அத்தனை லேயராக மடித்துக் கொள்ளலாம். மறக்காம, சப்பாத்தியை மடிக்க கூடிய இடங்களில் எல்லாம் கொஞ்சம் எண்ணெயையும், கொஞ்சம் மாவையும் தூவி, தடவ வேண்டும். அப்போதுதான் லேயர் லேயராக சப்பாத்தி ஒட்டாமல் கிடைக்கும்.

இதையும் படிக்கலாமே: பச்சைப்பயிறு இருந்தா இந்த பணியாரம் செஞ்சி பாருங்க. இதுவரைக்கும் இப்படி ஒரு டேஸ்டான பணியாரத்தை சாப்பிட்டதே இல்லைன்னு சொல்வீங்க அந்த அளவுக்கு சுவையுடன் கூடிய ஆரோக்கியமான ரெசிபி

முக்கோண வடிவில் தேய்த்தால் மூன்று லேயர் சப்பாத்தி கிடைக்கும். நான்கு முறை சப்பாத்தி மாவை மடித்து தேய்த்தால், நான்கு லேயராக சப்பாத்தி கிடைக்கும். ஆக மடிப்பது என்பது உங்களுடைய விருப்பம் தான். இப்போது மடித்து தேய்த்த சப்பாத்தியை தோசை கல்லில் போட்டு மிதமான தீயில் இரண்டு பக்கமும் சிவக்க விட்டு எடுக்க வேண்டும். இறுதியாக தேவை என்றால் சப்பாத்திக்கு மேலே எண்ணெய் நெய் அல்லது வெண்ணெய் தடவி ஒரு கிரேவியுடன் பரிமாறி பாருங்கள். இவ்வளவு சாஃப்ட்டான சப்பாத்தியை நீங்க இதுவரைக்கும் வாழ்நாளில் சாப்பிட்டு இருக்கவே மாட்டீங்க.

- Advertisement -