பச்சைப்பயிறு இருந்தா இந்த பணியாரம் செஞ்சி பாருங்க. இதுவரைக்கும் இப்படி ஒரு டேஸ்டான பணியாரத்தை சாப்பிட்டதே இல்லைன்னு சொல்வீங்க அந்த அளவுக்கு சுவையுடன் கூடிய ஆரோக்கியமான ரெசிபி

Pachai Payaru Paniyaram
- Advertisement -

நம்முடைய உடல் ஆரோக்கியமாக இருக்க நாம் முதலில் கடைபிடிக்க வேண்டியது உணவு முறைகளில் சரியானவற்றை தேர்ந்தெடுத்து உண்பது தான். ஏனெனில் உடலில் ஏற்படும் பிரச்சனைகளை உண்டாக்குவதும் இந்த உணவு தான், அதை சரி செய்வதும் பெரும்பாலும் உணவு தான். ஆகவே உண்ணும் உணவிற்கு நாம் அதிக முக்கியத்துவம் கொடுத்து எது போன்ற உணவுகளை எடுத்துக் கொண்டால் நல்லது என்பவற்றை தெரிந்து கொண்டு எடுத்தாலே பெரும்பாலான பிரச்சனைகள் நேராது. இந்த சமையல் குறிப்பு பதிவில் அப்படி ஒரு ஆரோக்கியமான அதே நேரத்தில் சுவையான ஒரு ரெசிபியை எப்படி செய்வது என்று தான் தெரிந்து கொள்ள போகிறோம்.

செய்முறை

இந்த பணியாரம் செய்வதற்கு ஒரு கப் பச்சை பயிர் கால் கப் உளுந்து இது இரண்டையும் நன்றாக தண்ணீர் ஊற்றி அலசி சுத்தம் செய்த பிறகு இந்த பருப்பு ஊறும் அளவிற்கு வெதுவெதுப்பான தண்ணீரை ஊற்றி இரண்டு மணி நேரம் வரை ஊற விடுங்கள். சுடுதண்ணீருக்கு பதிலாக குளிர்ந்த நீர் ஊற்றினால் குறைந்தது 6 மணி நேரமாவது ஊற வேண்டும்.

- Advertisement -

இந்த நேரத்தில் ஒரு பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். அதே போல் ஒரு கொத்து கறிவேப்பிலை, ஒரு கொத்து கொத்தமல்லி இரண்டையும் பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள். ஸ்வீட் கான் ஒரு கப் எடுத்துக் கொள்ளுங்கள். அதே போல் தேங்காய் துருவல் கால் மூடி இதில் நீங்கள் விருப்பப்பட்டால் ஒரு கேரட்டையும் துருவி சேர்த்துக் கொள்ளலாம்.

இப்போது ஊற வைத்த பயிரை தண்ணீர் இல்லாமல் வடித்து மிக்ஸி ஜாருக்கு மாற்றி விடுங்கள். அத்துடன் இரண்டு பச்சை மிளகாய், இரண்டு பல் பூண்டு, ஒரு சிறிய துண்டு இஞ்சி இவை அனைத்தையும் சேர்த்த பிறகு பயிறு ஊற வைத்த தண்ணீரையே ஊற்றி இட்லி மாவு பதத்திற்கு கெட்டியாக அரைத்துக் கொள்ளுங்கள். இந்த மாவை மிக்ஸி ஜார்ரிலிருந்து ஒரு பவுலுக்கு ஊற்றிய பிறகு நாம் ஏற்கனவே தயார் செய்து வைத்திருந்த பொருட்களை எல்லாம் இதில் சேர்த்து இத்துடன் அரை டீஸ்பூன் சீரகம், அரை டீஸ்பூன் உப்பு சேர்த்து இந்த மாவை நன்றாக கலந்து விடுங்கள்.

- Advertisement -

இப்போது அடுப்பில் பணியார சட்டியை வைத்து சூடானதும் பணியார குழிகளில் கொஞ்சமாக நல்லெண்ணெய் ஊற்றிக் கொள்ளுங்கள். அடுத்து கலந்து வைத்த மாவில் இருந்து பணியார சட்டியின் முக்கால் பாகம் வரும் வரை மாவை ஊற்றிய பிறகு தட்டு போட்டு மீடியம் ஃபேலிம்மில் ஒரு புறம் சிவக்கும் வரை வேக விட்டு அதன் பிறகு மீண்டும் மறுபு றம் திருப்பிப் போட்டு சிவக்க விட்டு எடுத்து விடுங்கள். சுவையான பச்சைப்பயிறு பணியாரம் தயார்.

இதையும் படிக்கலாமே: கோதுமை மாவுல ஆப்பம் சுட்டு இருக்கீங்களா? ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க. நல்லா ஓரத்துல மொறு மொறுன்னு உள்ள பஞ்சு போல சாஃப்டா வர இதை சேர்க்க மறக்காதீங்க.

இதில் பச்சை பயிருடன் உளுந்துக்கு பதிலாக கறுப்பு உளுந்து சேர்த்து செய்யும் போது இன்னும் சுவையாகவும் அதே நேரத்தில் ஆரோக்கியமாகவும் இருக்கும். இதில் ஸ்வீட் கான் தேங்காய் போன்றவை எல்லாம் சேர்த்திருப்பதால் சைட் டிஷ் கூட எதுவும் தேவையில்லை. குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் சாப்பிடக் கூடிய ஆரோக்கியமான உணவு. இந்த ரெசிபி உங்களுக்கு பிடித்திருந்தால் நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்

- Advertisement -