உளுந்த வடை செய்ய வெறும் 2 ஸ்பூன் எண்ணெய் இருந்தால் போதும்? எண்ணெயே ஊற்றாமல் உளுந்த வடை எப்படி செய்வது என்று நீங்களும் தெரிந்து கொள்ள வேண்டுமா?

methuvadai-mixie
- Advertisement -

பொதுவாகவே பருப்பு வகைகளில் மற்ற பருப்புகளை விட உளுந்தில் அதிக அளவில் சத்துக்கள் உள்ளது. இது குறிப்பாக பெண்களின் எலும்புகளுக்கு மிகவும் நல்லது. அதனால் தான் பூப்பெய்திய பெண்களுக்கு நல்லெண்ணெயுடன் இந்த உளுந்தை சேர்த்து களி செய்து கட்டாயமாக கொடுப்பார்கள். ஆனால் அந்த நேரத்தில் இப்படி கொடுப்பதோடு சரி. அதன் பிறகு உளுந்தை நாம் வெறும் வடைகளாக தான் செய்து சாப்பிடுகிறோம். இது எண்ணெயில் பொரித்து எடுப்பதால் அதில் என்ன தான் உடலுக்கு ஆரோக்கியம் இருந்தாலும் எண்ணெயில் சேர்க்கும்போது அதன் ஆரோக்கியம் கெட்டு தான் போகிறது. இனிமேல் உளுந்த வடையை இதுபோல செய்து கொடுத்துப் பாருங்கள், எண்ணெயையும் சேர்க்க வேண்டியது இல்லை. அதே நேரத்தில் பிள்ளைகளுக்கு உளுந்தின் ஆரோக்கியமும் முழுமையாக கிடைத்துவிடும்.

தேவையான பொருட்கள்: உளுந்து – 1/4 கிலோ, அரிசி மாவு – 4 டேபிள் ஸ்பூன், வெங்காயம் -1 – (பொடியாக நறுக்கியது), பச்சை மிளகாய் – 1, கறிவேப்பிலை – சிறிதளவு, கொத்தமல்லி – சிறிதளவு, சீரகம் – 1/4 டீஸ்பூன், இஞ்சி பொடியாக நறுக்கியது – 1/2 டீஸ்பூன், உப்பு – 1/2 டேபிள் ஸ்பூன், எண்ணெய் – இரண்டு டேபிள் ஸ்பூன்.

- Advertisement -

முதலில் உளுந்தை நன்றாக அலசி விடுங்கள், உங்களிடம் நல்ல தரமான உளுந்து இருந்தால் அலச வேண்டாம். இல்லையெனில் ஒரு முறை அலசி காய வைக்க வேண்டும். அப்படியே ஒரு காட்டன் துணியில் போட்டு காய வைத்து விடுங்கள். இது வீட்டின் உள்ளேயே காய வைக்கலாம். ஒரு மணி நேரம் காய்ந்தாலே போதும் உளுந்தில் ஈரம் இல்லாமல் காட்டன் துணி இழுத்து விடும்.

அதன் பிறகு இதை மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக பவுடராக்கிக் கொள்ளுங்கள். இந்த உளுந்தம் பொடியுடன் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, சிறிதாக நறுக்கிய கொத்தமல்லி, கருவேப்பிலை, சீரகம், உப்பு, அரிசி மாவு, அனைத்தையும் ஒன்றாக எப்போதும் போல் போட்டு லேசாக தண்ணீர் தெளித்து வடை மாவு பதத்திற்கு கலந்து வைத்து விடுங்கள்.

- Advertisement -

பிறகு ஒரு இட்லி பாத்திரத்தை வைத்து, அதில் வடை அளவிற்கு ஏற்றவாறு வாழ இலைகளை வட்டமாக கட் செய்து கொள்ளுங்கள். அந்த வாழை இலையில் லேசாக எண்ணெய் தடவி வடைகளை தட்டி இட்லி பாத்திரத்தில் வைத்து மூடி போட்டு ஒரு ஐந்து நிமிடம் வேக வைத்தாலே போதும். வடை இட்லிகள் அனைத்தும் நன்றாக வெந்துவிடும். இது இப்படியே கொடுத்தால் நம் பிள்ளைகள் வடை இட்லியை சாப்பிட மாட்டார்கள். எனவே ஒரு கடாயில் இரண்டு ஸ்பூன் எண்ணெயை ஊற்றி, வேக வைத்த வடை இட்லிகளை அதில் போட்டு இரண்டு பக்கமும் பொன்னிறமாக சிவந்தவுடன் எடுத்து பரிமாறலாம்.

இது உடலுக்கு மிகவும் நல்லது. வாரத்தில் இரண்டு மூன்று முறை கூட இப்படி செய்து கொடுக்கலாம். நம் குழந்தைகள் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால் இதுபோன்ற முறைகளில் உங்கள் குழந்தைகளுக்கு செய்து கொடுங்கள்.

- Advertisement -